Followers

Tuesday, July 3, 2012

சிம்மம் : நோய்கள்

சிம்ம ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு ஆறாம் வீட்டு அதிபரின் தசா நடக்கும் போது வரும் நோய்கள்:

ஆறாம் வீட்டு அதிபர் லக்கினத்தில் (சிம்ம ராசியில்) சம்பந்தபட்டு தசா நடக்கும் போது வரும் வியாதிகள் :

இதயம், இரத்த ஒட்டத்தின் தன்மை,இதய துடிப்பு, முதுகுத் தண்டு ஆகியவற்றை சிம்மராசி குறிக்கும்.

தலை வழுக்கை, ஏறு நெற்றி உருவாகுதல், முடி உதிர்தல்,தலை பாகங்களில் அடிபடுதல்,மயக்கம் ஏற்படுதல், மூச்சு திணறல், நரம்பு தளர்ச்சி, வலிப்பு நோய், தலைவலி போன்ற நோய்கள் ஏற்படும்.

ஆறாம் வீட்டு அதிபர் இரண்டாம் வீட்டுடன் (கன்னி ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடக்கும் போது வரும் வியாதிகள் :

வைட்டமின் குறைவு, நுண்கிருமிகள், காலரா, வயிற்றுபோக்கு, காய்ச்சல் ,தோல் வியாதி போன்றவற்றை கன்னி ராசி குறிக்கும்.

பேச்சில் கோளாறு,அடிவயிற்றில் வலி, காலரா நோய்,மார்பில் கட்டி,கொக்கி புழு போன்ற நோய்கள் ஏற்படும்.

ஆறாம் வீட்டு அதிபர் மூன்றாம் வீட்டுடன் (துலாம் ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடக்கும் போது வரும் வியாதிகள்:

மூட்டுகளில் வலி பிரச்சினை கர்ப்பபையில் கோளாறு மூத்திர பாதையில் கல் அடைப்பு சிறுநீரகம் பாதிப்பு போன்ற நோய்களை துலாம் ராசி குறிக்கும்.

காது கேளாமை, பயணத்தில் அடிபடுதல், இடுப்பிற்க்கு கீழ் வலி, தசை பிடிப்பு, தசை வலி ஏற்படுதல், குடல் வால் அகற்றும் நிலை, கிட்டினி பாதிப்பு, கிட்டினிக்கு செல்லும் இரத்த குழாயில் பாதிப்பு ஏற்படுதல், சிறுநீர் குழாயில் புண்,இன உறுப்பில் அரித்தல் போன்ற நோய்கள் வரும்.

ஆறாம் வீட்டு அதிபர் நான்காம் வீட்டுடன் (விருச்சிக ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடக்கும் போது வரும் வியாதிகள்:

மாதவிலக்கு கோளாறு, மூத்திர பாதையில் கல் அடைப்பு, மூல நோய் போன்றவற்றை விருச்சிக ராசி குறிக்கும்.

மாதவிலக்கு காலத்தில் அதிக இரத்தம் வெளிவருதல், விந்து வெளிவரும் பாதையில் புண், ஆண்குறியில் வலி, துடைபகுதியில் வலி, இடுப்புகளில் புண் ஏற்பட்டு அதிக வலி ஏற்படுதல் போன்ற நோய்கள் வரும்.

ஆறாம் வீட்டு அதிபர் ஐந்தாம் வீட்டுடன் (தனுசு ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடந்தால் வரும் வியாதிகள்:

வாத நோய், நுரையீரல் கோளாறு, இடுப்பு தொடைப்பகுதி பாதிக்கப்படுதல் போன்றவற்றை தனுசு ராசி குறிக்கும்.

நுரையீரல் பிரச்சினை, இடுப்பு வலி,வாத நோய், ஆஸ்த்துமா, சிறுநீர் உடன் இரத்தம் கலந்து போகுதல், கழுத்தில் வீக்கம் ஏற்படுதல் போன்ற நோய்கள் வரும்.

ஆறாவது வீட்டு அதிபர் ஆறாம் வீட்டுடன் (மகர ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடந்தால் வரும் வியாதிகள்:

மூட்டு வலி, முழங்கால் வலி, தோல் வியாதி, வாத நோய், குஷ்டம் போன்றவற்றை மகர ராசி குறிக்கும்.

மூட்டு வலி, மூட்டுகள் உள்ள இடத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிவரும். முதுகெலும்பில் வலி ஏற்படும். மூட்டு விலகி போய்விடுவதால் நடக்க முடியாமல் நடப்பார்கள். கால்களில் அடிபடும். கால்களில் அடிப்பட்டு நொண்டி ஏற்படுதல் போன்ற நோய்கள் வரும்.

ஆறாம் வீட்டு அதிபர் ஏழாம் வீட்டுடன் (கும்ப ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடந்தால் வரும் வியாதிகள்:

அடிப்பட்டு கோமா நிலையில் இருப்பது,நரம்புகளில் கோளாறு மூட்டு வலி, வலிப்பு, இதய நோய், சருமத்தில் உள்ள தோல்கள் பாதிப்பு போன்றவற்றை கும்பராசி குறிக்கும்.

கால்கள் வீக்கம், முட்டிகால் பிரச்சினை, வாத நோய், குடலில் பிரச்சினை நரம்புகளில் இரத்த கசிவு, கால்களில் வலி, மலபாதையில் வலி, இன உறுப்புகள் வீக்கம் போன்ற நோய்கள் வரும்.

ஆறாம் வீட்டு அதிபர் எட்டாம் வீட்டுடன் (மீன ராசியில்) சம்பந்தப்பட்டு நடந்தால் வரும் வியாதிகள்:

கால்களில் வலி, நோயால் காலை எடுக்க வேண்டிய நிலை, நீர் கோர்வை போன்றவற்றை மீன ராசி குறிக்கும்.

விபத்தில் படுகாயம் பட்டு கோமா நிலையில் இருப்பது,கால்களில் வலி ஏற்பட்டு நடக்ககூட முடியாத நிலை, ஈரல் பிரச்சினை, பாத விரல்களில் வீக்கம், மூட்டுகளில் வலி ஏற்படுதல், புற்றுநோய் போன்ற நோய்கள் வரும்.

ஆறாம் வீட்டு அதிபர் ஒன்பதாம் வீட்டுடன் (மேஷ ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடந்தால் வரும் வியாதிகள்:

உடலில் தலை பகுதி, கண் பார்வை, மூளை போன்றவற்றை மேஷ ராசி குறிக்கும்.

காய்ச்சல் அதிகமாக ஏற்பட்டு நரம்புகள் பாதிக்கப்படும்,மலேரியா நோய், விட்டு விட்டு காய்ச்சல் வருதல், இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வரும்.

ஆறாம் வீட்டு அதிபர் பத்தாம் வீட்டுடன் (ரிஷப ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடந்தால் வரும் வியாதிகள்:

கழுத்து பகுதி,முகம், முகத்தில் உள்ள எலும்புகள் போன்றவற்றை ரிஷப ராசி குறிக்கும்.

தொழிற்சாலையில் அடிபடுதல்,பெண்களால் வரும் நோய், தாடையில் பிரச்சினை,தொண்டையில் கோளாறு போன்ற நோய்கள் வரும்.

ஆறாம் வீட்டு அதிபர் பதினொன்றாம் வீட்டுடன் (மிதுனம் ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடந்தால் வரும் வியாதிகள்:

நுரையீரல், ஆஸ்த்மா, இருமல், மூச்சு திணறல் போன்றவற்றை மிதுன ராசி குறிக்கும்.

தொண்டையில் கோளாறு ஏற்படுதல், நுரையிரல் பிரச்சினை, தோள்பட்டை எழும்பில் பிரச்சினை உருவாகும், மூச்சு திணறல் போன்ற நோய்கள் வரும்.

ஆறாம் வீட்டு அதிபர் பனிரெண்டாம் வீட்டுடன் (கடக ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடந்தால் வரும் வியாதிகள்:

வயிறு, வயிற்றில் இருக்கும் வால்வுகள், மார்பகம், உண்னும் உணவு செரிமானம் போன்றவற்றை கடக ராசி குறிக்கும்.

பாதங்களில் வலி, பாதங்கள் வீக்கம்,மஞ்சள் காமாலை,  நுரையீரல் கோளாறு, காசநோய்,  இருமல், மூச்சுகுழாயில் புண்,சளி தொல்லை, வலிப்பு நோய்,மூச்சு திணறல் போன்ற நோய்கள் ஏற்படும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

தேர் திருவிழா

வணக்கம் நண்பர்களே என்னுடைய ஊர் அருகில் கரம்பயம் என்ற ஊரில் ஸ்ரீ முத்துமாரியம்மன் என்ற கோவில் உள்ளது. அந்த பகுதியில் புகழ் வாய்ந்த கோவில் அது. அந்த கோவில் திருவிழா சித்திரை மாதத்தில் நடைபெறும். 

நல்ல சக்தி வாய்ந்த அம்மன். அந்த கோவிலில் தேரோட்டம்  ரொம்ப விசேஷமாக நடைபெறும். நான் சிறுவயதில் இருந்தே அந்த கோவில் விழாவில் கலந்துக்கொள்வேன். இன்றைக்கும் அந்த தேரோட்டம் விழாவில் நல்ல கூட்டம் கூடும். 

இன்றைக்கு பல ஊர்களில் கோவில் விழாகளில் தேரோட்டம் நடைபெறுகிறது. ஆனால் அந்த தேரோட்டத்திற்க்கு கூட்டம் வருவதில்லை தேர் இழுப்பதற்க்கு ஆட்கள் இல்லை. யாரும் தேரை இழுப்பதற்க்கு போவதில்லை. 

எனது பள்ளி படிப்பு தேசிய மேல்நிலைப்பள்ளி என்ற பள்ளியில் தான். அந்த பள்ளிக்கூடம் மன்னார்குடியில் இருக்கிறது. மன்னார்குடியில் ராஜகோபால சுவாமி கோவில் தேரோட்டத்தை தேசிய மேல்நிலை பள்ளியில் உள்ள மாணவர்கள் தான் இழுப்பார்கள். நான் படிக்கும் போது அந்த கோவில் தேரை இழுத்து இருக்கிறேன். 

அந்த காலத்தில் ஏதாவது ஒரு ஊரில் உள்ளவர்களுக்கு கரை என்று ஒதுக்கி இருப்பார்கள். நாள் ஆக ஆக அந்த ஊரில் இருந்தும் மக்கள் வருவதில்லை. அதனால் இழுப்பதற்க்கு மாணவர்களுக்கு கொடுத்து இருக்கலாம். என்ன என்று தெரியவில்லை. 

திருவாருர் தேர் அழகு என்று சொல்லுவார்கள் அந்த தேரோட்டத்தில் நான் கலந்து கொண்டது கிடையாது. இன்று பல ஊரில் உள்ள கோவில்களில் தேரோட்டம் நடைபெறுவது இயந்திரங்கள் துணைக்கொண்டு தான் நடைபெறுகிறது. மக்கள் இருந்தாலும் இழுப்பது இல்லை.

நான் சின்ன வயதில் பார்த்த தேர்க்கும் இப்பொழுது தேர்க்கும் உயரத்தில் வித்தியாசங்கள் நிறைய காணப்படுகிறது. அப்பொழுது தேரை எங்கு இருந்து பார்த்தாலும் தெரியும் ஆனால் இன்று தேரை அந்த இடத்தில் இருந்து பார்த்தாலும் தெரியவில்லை. உயரத்தை குறைத்துவிட்டார்கள்.

அந்த காலத்தில் உள்ளவர்கள் ஏன் கோவில் விழாக்களில் அதுவும் முக்கிய நிகழ்வாக ஏன் தேரோட்டத்தை வைத்து இருப்பார்கள் அந்த விழாவில் ஏதாவது ஒரு மிக பெரிய தெய்வ சக்தி கிடைப்பதால் தான் வைத்து இருப்பார்கள்.

இன்றைய மக்கள் அதை பயன்படுத்துவது இல்லை. தேர்களில் பார்த்தீர்கள் என்றால் அந்த தேரில் உள்ள சிற்பங்களில் அனைத்து தெய்வங்களின் சிற்பங்களும் செதுக்கி வைத்து இருப்பார்கள். அழகுக்கு என்று கிடையாது. அந்த கோவில் தெய்வத்தோடு அனைத்து தெய்வங்களும் சேர்ந்து நமக்கு அருள் தருவதாற்க்காக தான். அந்த கோவில் தெய்வத்தை நாம் இழுக்கும் போது கூடவே அனைத்து தெய்வங்களும் சேர்த்து இழுப்பதால் நமக்கு எல்லா தெய்வத்தின் அருளும் கிடைக்கும். 

உங்களுக்கு ஒரு வருடத்திற்க்கு விபத்து நடைபெறாமல் இருக்க வேண்டும் என்று நினைத்தால் உங்கள் ஊரில் உள்ள கோவில் தேரோட்டத்தில் கலந்து கொண்டு தேரை இழுக்க வேண்டும். 

உங்கள் ஊரில் தேர் திருவிழா நடைபெறவில்லை என்றால் அருகில் இருக்கும் கோவிலில் வருடத்திற்க்கு ஒரு முறை கலந்துக்கொள்ளுங்கள். நல்ல பலன் கிடைக்கும். நீங்கள் ஏதாவது காரியத்தில் வெற்றி பெற வேண்டும் என்றாலும் முதலில் கோவிலில் தேரோட்டத்தில் கலந்து கொண்டு எனக்கு இவ்வாறு நடைபெற வேண்டும் என்று மனதார வேண்டிக்கொண்டு தேரை இழுங்கள் அந்த காரியம் அடுத்த தேர் திருவிழாவிற்க்குள் நடைபெற்று விடும்.

பெண்களாக இருந்தால் அந்த தேரின் வடத்தை இழுக்கும் போது தொட்டு கும்பிடலாம் அல்லது தேர் வரும் வழியில் ஒரு தேங்காயில் சூடத்தை ஏற்றி தேரில் உள்ள தெய்வத்திற்க்கு தீபம் ஏற்றி தேங்காயயை சிதறகாயக உடைக்கலாம்.

இந்த பதிவு ஆறாவது வீட்டு தசாவிற்க்கு நல்ல பரிகாரம்.

என்ன உங்கள் ஊரில் உள்ள தேர் திருவிழாவில் கலந்து கொள்வீர்களா?

அன்புடன்

ராஜேஷ்சுப்பு. 

நான் பேச நினைப்பதெல்லாம்

வணக்கம் நண்பர்களே! நாம் ஆறாவது வீட்டு தசாவை வைத்து வரும் நோய்களை பற்றி பார்த்து வருகிறோம். நான் அதை ஒரே பதிவாக போட்டு இருக்கலாம். ஆனால் பல பேர் புதியவராக வரலாம் அவர்களின் நலன் கருதி உங்ளுக்கும் உருப்படியாக புரியும் படி போட்டு இருக்கிறேன். 

எப்பொழுது ஒரு விஷயங்கள் புரியவில்லேயோ அப்பொழுது உடனே குழப்பங்கள் வந்துவிடுகின்றன அதனால் எல்லோருக்கும் புரிகின்ற வரையில் அனைத்து ராசிகளுக்கும் தருகிறேன்.

ஒவ்வொரு ஜாதகத்திலும் ஒவ்வொரு விதமான நோய்கள் வரும் அது ஆறாம் வீட்டில் சம்பந்தப்படுகிற கிரகங்களின் தாக்கத்தை பொறுத்து மாறுபடும். நான் கொடுப்பது ஒவ்வொரு வீட்டின் குணத்தின் அடிப்படையில் தான் வருகின்ற நோய்யை பற்றி குறிப்பிட்டு உள்ளேன்.

சோதிடத்தில் நோய்க்கு என்று துறைகள் உள்ளன. வருகின்ற நோய்க்கு வந்த நோய்க்கு என்ன பரிகாரம் என்று பல தகவல்கள் உள்ளன. அத்தனையும் தருவது என்றால் முடியாத காரியம். முடிந்தரை பார்க்கலாம் ஏன் என்றால் இன்னும் சோதிடத்தில் பல விஷயங்களை நாம் பார்க்க வேண்டியுள்ளது.

பல நோய்களை பற்றி குறிப்பிடவில்லை என்று வருத்தபடாதீர்கள். அந்த நோய்கள் எல்லாம் எந்த மாதிரி கிரக நிலைகள் சேர்ந்தால் வரும் என்று அவ்வப்போது தனி பதிவாக தருகின்றேன் அது வரை பொறுமையாக இருக்கவும்.

ஆறாவது வீட்டை பற்றி பார்க்கவே பல பதிவுகள் போட வேண்டி உள்ளது.  இன்னும் தசாவின் மூலத்தை நாம் தொடவில்லை. இந்த மாதிரி பல வீடுகளில் உள்ள தசாவையும் பற்றி எழுதவேண்டும்.  சோதிடத்தின் பிரமாண்டத்தை எவ்வளவு உள்ளது என்று பாருங்கள். முடிந்தவரை தந்துவிடுகிறேன்.

உங்கள் உதவியின் காரணமாக பல புதிய நண்பர்கள் நமது Blog க்கு வர துவங்கி உள்ளார்கள். உங்களின் உதவிக்கு கோடி நன்றிகள். தொடர்ந்து அனைத்து நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். அது ஒன்று போதும்.

 நண்பர்களே தொடர்ந்து ஆறாவது வீட்டின் தசாவை பார்க்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Monday, July 2, 2012

கடகம் : நோய்கள்

கடக ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு ஆறாம் வீட்டு அதிபரின் தசா நடக்கும் போது வரும் நோய்கள்

ஆறாம் வீட்டு அதிபர் லக்கினத்தில் (கடக ராசியில்) சம்பந்தபட்டு தசா நடக்கும் போது வரும் வியாதிகள் :

வயிறு, வயிற்றில் இருக்கும் வால்வுகள், மார்பகம், உண்னும் உணவு செரிமானம் போன்றவற்றை கடக ராசி குறிக்கும்.

தலை பாகங்களில் அடிபடுதல், பல் வலி,   மஞ்சள் காமாலை,  நுரையீரல் கோளாறு, காசநோய்,  இருமல், மூச்சுகுழாயில் புண்,சளி தொல்லை, வலிப்பு நோய்,மூச்சு திணறல் போன்ற நோய்கள் ஏற்படும்.

ஆறாம் வீட்டு அதிபர் இரண்டாம் வீட்டுடன் (சிம்ம ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடக்கும் போது வரும் வியாதிகள் :

இதயம், இரத்த ஒட்டத்தின் தன்மை,இதய துடிப்பு, முதுகுத் தண்டு ஆகியவற்றை சிம்மராசி குறிக்கும்.

பேச்சில் கோளாறு,மயக்கம் ஏற்படுதல், மூச்சு திணறல், நரம்பு தளர்ச்சி, வலிப்பு நோய், தலைவலி போன்ற நோய்கள் ஏற்படும்.

ஆறாம் வீட்டு அதிபர் மூன்றாம் வீட்டுடன் (கன்னி ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடக்கும் போது வரும் வியாதிகள்:

வைட்டமின் குறைவு, நுண்கிருமிகள், காலரா, வயிற்றுபோக்கு, காய்ச்சல் ,தோல் வியாதி போன்றவற்றை கன்னி ராசி குறிக்கும்.

காது கேளாமை,அடிவயிற்றில் வலி, காலரா நோய்,மார்பில் கட்டி,கொக்கி புழு தாக்குதல் ,சிறு பயணத்தில் அடிபட்டு புண் ஏற்படுதல் போன்ற நோய்கள் ஏற்படும்.

ஆறாம் வீட்டு அதிபர் நான்காம் வீட்டுடன் (துலாம் ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடக்கும் போது வரும் வியாதிகள்:

மூட்டுகளில் வலி பிரச்சினை கர்ப்பபையில் கோளாறு மூத்திர பாதையில் கல் அடைப்பு சிறுநீரகம் பாதிப்பு போன்ற நோய்களை துலாம் ராசி குறிக்கும்.

இடுப்பிற்க்கு கீழ் வலி, தசை பிடிப்பு, தசை வலி ஏற்படுதல், குடல் வால் அகற்றும் நிலை, கிட்டினி பாதிப்பு, கிட்டினிக்கு செல்லும் இரத்த குழாயில் பாதிப்பு ஏற்படுதல், சிறுநீர் குழாயில் புண்,இன உறுப்பில் அரித்தல் போன்ற நோய்கள் வரும்.

ஆறாம் வீட்டு அதிபர் ஐந்தாம் வீட்டுடன் (விருச்சிக ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடந்தால் வரும் வியாதிகள்:

மாதவிலக்கு கோளாறு, மூத்திர பாதையில் கல் அடைப்பு, மூல நோய் போன்றவற்றை விருச்சிக ராசி குறிக்கும்.

மாதவிலக்கு காலத்தில் அதிக இரத்தம் வெளிவருதல், விந்து வெளிவரும் பாதையில் புண், ஆண்குறியில் வலி, துடைபகுதியில் வலி, இடுப்புகளில் புண் ஏற்பட்டு அதிக வலி ஏற்படுதல் போன்ற நோய்கள் வரும்.

ஆறாவது வீட்டு அதிபர் ஆறாம் வீட்டுடன் (தனுசு ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடந்தால் வரும் வியாதிகள்:

வாத நோய், நுரையீரல் கோளாறு, இடுப்பு தொடைப்பகுதி பாதிக்கப்படுதல் போன்றவற்றை தனுசு ராசி குறிக்கும்.

நுரையீரல் பிரச்சினை, இடுப்பு வலி,வாத நோய், ஆஸ்த்துமா, சிறுநீர் உடன் இரத்தம் கலந்து போகுதல், கழுத்தில் வீக்கம் ஏற்படுதல் போன்ற நோய்கள் வரும்.

ஆறாம் வீட்டு அதிபர் ஏழாம் வீட்டுடன் (மகர ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடந்தால் வரும் வியாதிகள்:

மூட்டு வலி, முழங்கால் வலி, தோல் வியாதி, வாத நோய், குஷ்டம் போன்றவற்றை மகர ராசி குறிக்கும்.

மூட்டு வலி, மூட்டுகள் உள்ள இடத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிவரும். முதுகெலும்பில் வலி ஏற்படும். மூட்டு விலகி போய்விடுவதால் நடக்க முடியாமல் நடப்பார்கள். கால்களில் அடிபடும். கால்களில் அடிப்பட்டு நொண்டி ஏற்படுதல்,விபத்தில் படுகாயம் பட்டு கோமா நிலையில் இருப்பது போன்ற நோய்கள் வரும்.

ஆறாம் வீட்டு அதிபர் எட்டாம் வீட்டுடன் (கும்ப ராசியில்) சம்பந்தப்பட்டு நடந்தால் வரும் வியாதிகள்:

அடிப்பட்டு கோமா நிலையில் இருப்பது,நரம்புகளில் கோளாறு மூட்டு வலி, வலிப்பு, இதய நோய், சருமத்தில் உள்ள தோல்கள் பாதிப்பு போன்றவற்றை கும்பராசி குறிக்கும்.

கால்கள் வீக்கம், முட்டிகால் பிரச்சினை, வாத நோய், குடலில் பிரச்சினை நரம்புகளில் இரத்த கசிவு, கால்களில் வலி, மலபாதையில் வலி, இன உறுப்புகள் வீக்கம் போன்ற நோய்கள் வரும்.

ஆறாம் வீட்டு அதிபர் ஒன்பதாம் வீட்டுடன் (மீன ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடந்தால் வரும் வியாதிகள்:

கால்களில் வலி, நோயால் காலை எடுக்க வேண்டிய நிலை, நீர் கோர்வை போன்றவற்றை மீன ராசி குறிக்கும்.

கால்களில் வலி ஏற்பட்டு நடக்ககூட முடியாத நிலை, ஈரல் பிரச்சினை, பாத விரல்களில் வீக்கம், மூட்டுகளில் வலி ஏற்படுதல், புற்றுநோய், பரம்பரை வியாதிகள் போன்ற நோய்கள் வரும்.

ஆறாம் வீட்டு அதிபர் பத்தாம் வீட்டுடன் (மேஷ ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடந்தால் வரும் வியாதிகள்:

உடலில் தலை பகுதி, கண் பார்வை, மூளை போன்றவற்றை மேஷ ராசி குறிக்கும்.

காய்ச்சல் அதிகமாக ஏற்பட்டு நரம்புகள் பாதிக்கப்படும்,மலேரியா நோய், விட்டு விட்டு காய்ச்சல் வருதல், இரத்த அழுத்தம் ,தொழில் செய்யும் இடங்களில் வரும் தொற்றுநோய் போன்ற நோய்கள் வரும்.

ஆறாம் வீட்டு அதிபர் பதினொன்றாம் வீட்டுடன் (ரிஷப ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடந்தால் வரும் வியாதிகள்:

கழுத்து பகுதி,முகம், முகத்தில் உள்ள எலும்புகள் போன்றவற்றை ரிஷப ராசி குறிக்கும்.

பித்த வெடிப்பு, பெண்களால் வரும் நோய், தாடையில் பிரச்சினை,தொண்டையில் கோளாறு போன்ற நோய்கள் வரும்.

ஆறாம் வீட்டு அதிபர் பனிரெண்டாம் வீட்டுடன் (மிதுன ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடந்தால் வரும் வியாதிகள்:

நுரையீரல், ஆஸ்த்மா, இருமல், மூச்சு திணறல் போன்றவற்றை மிதுன ராசி குறிக்கும்.

பாதங்களில் வெடிப்பு, தொண்டையில் கோளாறு ஏற்படுதல், நுரையிரல் பிரச்சினை, தோள்பட்டை எழும்பில் பிரச்சினை உருவாகும், மூச்சு திணறல் போன்ற நோய்கள் வரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

மிதுனம் : நோய்கள்

மிதுன ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு ஆறாம் வீட்டு அதிபரின் தசா நடக்கும் போது வரும் நோய்கள்

ஆறாம் வீட்டு அதிபர் லக்கினத்தில் (மிதுன ராசியில்) சம்பந்தபட்டு தசா நடக்கும் போது வரும் வியாதிகள் :

நுரையீரல், ஆஸ்த்மா, இருமல், மூச்சு திணறல் போன்றவற்றை மிதுன ராசி குறிக்கும்.

தலையில் அடிபடும்,தொண்டையில் கோளாறு ஏற்படுதல், நுரையிரல் பிரச்சினை, தோள்பட்டை எழும்பில் பிரச்சினை உருவாகும், மூச்சு திணறல் போன்ற நோய்கள் வரும்.

ஆறாம் வீட்டு அதிபர் இரண்டாம் வீட்டுடன் (கடக ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடக்கும் போது வரும் வியாதிகள் :

வயிறு, வயிற்றில் இருக்கும் வால்வுகள், மார்பகம், உண்னும் உணவு செரிமானம் போன்றவ்ற்றை கடக ராசி குறிக்கும்.

பேச்சில் பிரச்சினை, ஊமை, மஞ்சள் காமாலை, மார்பகத்தில் பிரச்சினை, நுரையீரல் கோளாறு, காசநோய்,  இருமல், மூச்சுகுழாயில் புண்,சளி தொல்லை, வலிப்பு நோய்,மூச்சு திணறல் போன்ற நோய்கள் ஏற்படும்.

ஆறாம் வீட்டு அதிபர் மூன்றாம் வீட்டுடன் (சிம்ம ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடக்கும் போது வரும் வியாதிகள்:

இதயம், இரத்த ஒட்டத்தின் தன்மை,இதய துடிப்பு, முதுகுத் தண்டு ஆகியவற்றை சிம்மராசி குறிக்கும்.

காதில் பிரச்சினை, காதுகளில் சீழ் வடிதல், காது கேளாமை, மயக்கம் ஏற்படுதல், மூச்சு திணறல், நரம்பு தளர்ச்சி, வலிப்பு நோய், தலைவலி போன்ற நோய்கள் ஏற்படும்.

ஆறாம் வீட்டு அதிபர் நான்காம் வீட்டுடன் (கன்னி ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடக்கும் போது வரும் வியாதிகள்:

வைட்டமின் குறைவு, நுண்கிருமிகள், காலரா, வயிற்றுபோக்கு, காய்ச்சல் போன்றவற்றை கன்னி ராசி குறிக்கும்.

அடிவயிற்றில் வலி, காலரா நோய்,மார்பில் கட்டி,கொக்கி புழு தாக்குதல், தாயார் வழி நோய் போன்ற நோய்கள் ஏற்படும்.

ஆறாம் வீட்டு அதிபர் ஐந்தாம் வீட்டுடன் (துலாம் ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடந்தால் வரும் வியாதிகள்:

மூட்டுகளில் வலி பிரச்சினை கர்ப்பபையில் கோளாறு மூத்திர பாதையில் கல் அடைப்பு சிறுநீரகம் பாதிப்பு போன்ற நோய்களை துலாம் ராசி குறிக்கும்.

இடுப்பிற்க்கு கீழ் வலி, தசை பிடிப்பு, தசை வலி ஏற்படுதல், குடல் வால் அகற்றும் நிலை, கிட்டினி பாதிப்பு, கிட்டினிக்கு செல்லும் இரத்த குழாயில் பாதிப்பு ஏற்படுதல், சிறுநீர் குழாயில் புண்,இன உறுப்பில் அரித்தல் போன்ற நோய்கள் வரும்.

ஆறாவது வீட்டு அதிபர் ஆறாம் வீட்டுடன் (விருச்சிக ராசியில் ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடந்தால் வரும் வியாதிகள்:

மாதவிலக்கு கோளாறு, கற்பப்பையில் கோளாறு,மூத்திர பாதையில் கல் அடைப்பு, மூல நோய் போன்றவற்றை விருச்சிக ராசி குறிக்கும்.

மாதவிலக்கு காலத்தில் அதிக இரத்தம் வெளிவருதல், விந்து வெளிவரும் பாதையில் புண், ஆண்குறியில் வலி, துடைபகுதியில் வலி, இடுப்புகளில் புண் ஏற்பட்டு அதிக வலி ஏற்படுதல் போன்ற நோய்கள் வரும்.

ஆறாம் வீட்டு அதிபர் ஏழாம் வீட்டுடன் (தனுசு ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடந்தால் வரும் வியாதிகள்:

வாத நோய், நுரையீரல் கோளாறு, இடுப்பு தொடைப்பகுதி பாதிக்கப்படுதல் போன்றவற்றை தனுசு ராசி குறிக்கும்.

முகத்தில் புண், நுரையீரல் பிரச்சினை, இடுப்பு வலி,வாத நோய், ஆஸ்த்துமா, மூத்திரத்தோடு இரத்தம் கலந்து போகுதல், கழுத்தில் வீக்கம் ஏற்படுதல் போன்ற நோய்கள் வரும்.

ஆறாம் வீட்டு அதிபர் எட்டாம் வீட்டுடன் (மகர ராசியில்) சம்பந்தப்பட்டு நடந்தால் வரும் வியாதிகள்:

மூட்டு வலி, முழங்கால் வலி, தோல் வியாதி, வாத நோய், குஷ்டம் போன்றவற்றை மகர ராசி குறிக்கும்.

மூட்டு வலி, மூட்டுகள் உள்ள இடத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிவரும். முதுகெலும்பில் வலி ஏற்படும். மூட்டு விலகி போய்விடுவதால் நடக்க முடியாமல் நடப்பார்கள். கால்களில் அடிபடும். கால்களில் அடிப்பட்டு நொண்டி ஏற்படுதல்,விபத்தில் படுகாயம் பட்டு கோமா நிலையில் இருப்பது போன்ற நோய்கள் வரும்.

ஆறாம் வீட்டு அதிபர் ஒன்பதாம் வீட்டுடன் (கும்ப ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடந்தால் வரும் வியாதிகள்:

நரம்புகளில் கோளாறு மூட்டு வலி, வலிப்பு, இதய நோய், சருமத்தில் உள்ள தோல்கள் பாதிப்பு, போன்றவற்றை கும்பராசி குறிக்கும்.

தந்தை வழி பரம்பரை வியாதிகள், கால்கள் வீக்கம், முட்டிகால் பிரச்சினை, வாத நோய், குடலில் பிரச்சினை நரம்புகளில் இரத்த கசிவு, கால்களில் வலி, மலபாதையில் வலி, பல் வலி, இன உறுப்புகள் வீக்கம்,வேலை செய்யும் இடங்களில் அடிபட்டு புண் ஏற்படுதல் போன்ற நோய்கள் வரும்.

ஆறாம் வீட்டு அதிபர் பத்தாம் வீட்டுடன் (மீன ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடந்தால் வரும் வியாதிகள்:

கால்களில் வலி, நோயால் காலை எடுக்க வேண்டிய நிலை, நீர் கோர்வை போன்றவற்றை மீன ராசி குறிக்கும்.

கால்களில் வலி ஏற்பட்டு நடக்ககூட முடியாத நிலை, ஈரல் பிரச்சினை,  பாத விரல்களில் வீக்கம், மூட்டுகளில் வலி ஏற்படுதல், தொழில் செய்யும் இடங்களில் அடிப்படுதல்,மலக்குடல் புற்றுநோய் போன்ற நோய்கள் வரும்.

ஆறாம் வீட்டு அதிபர் பதினொன்றாம் வீட்டுடன் (மேஷ ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடந்தால் வரும் வியாதிகள்:

உடலில் தலை பகுதி, கண் பார்வை, மூளை போன்றவற்றை மேஷ ராசி குறிக்கும்.

காய்ச்சல் அதிகமாக ஏற்பட்டு நரம்புகள் பாதிக்கப்படும்,மலேரியா நோய், விட்டு விட்டு காய்ச்சல் வருதல், இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வரும்.

ஆறாம் வீட்டு அதிபர் பனிரெண்டாம் வீட்டுடன் (ரிஷப ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடந்தால் வரும் வியாதிகள்:

கழுத்து பகுதி,முகம், முகத்தில் உள்ள எலும்புகள் போன்றவற்றை ரிஷப ராசி குறிக்கும்.

பாதங்களில் வலி, பித்த வெடிப்பு, பெண்களால் வரும் நோய், கண்கள் பாதிப்படைதல் போன்ற நோய்கள் வரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

ரிஷபம் : நோய்கள்

ரிஷபம் ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு ஆறாம் வீட்டு அதிபரின் தசா நடக்கும் போது வரும் நோய்கள்.

ஆறாம் வீட்டு அதிபர் லக்கினத்தில் (ரிஷப ராசியில்) சம்பந்தபட்டு தசா நடக்கும் போது வரும் வியாதிகள் :

கழுத்து பகுதி, முகம், முகத்தில் உள்ள எலும்புகள் போன்றவற்றை ரிஷப ராசி குறிக்கும்.

தலையில் அடிபடும், விபத்துக்களால் தலையில் அடிபட்டு இரத்தம் வெளிவரும். கண் பாதிக்க செய்யும். கண்கள் சிவக்கும் கண்கள் சோர்வடையும். கழுத்தில் வலி ஏற்படும் கழுத்து எலும்பு பாதிக்கப்பட்டு கழுத்தில் கழுத்துபட்டை அணிவது.தொண்டையில் கோளாறு ஏற்படுதல். தாடையில் பிரச்சினை ஏற்படும்.

ஆறாம் வீட்டு அதிபர் இரண்டாம் வீட்டுடன் (மிதுன ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடக்கும் போது வரும் வியாதிகள் :

நுரையீரல், ஆஸ்த்மா, இருமல், மூச்சு திணறல் போன்றவற்றை மிதுன ராசி குறிக்கும்.

தொண்டையில் கோளாறு ஏற்படுதல், பேச்சில் கோளாறு, நுரையிரல் பிரச்சினை உருவாகும். தோள்பட்டை எழும்பில் பிரச்சினை உருவாகும்,மூச்சு திணறல் போன்ற நோய்கள் வரும்.

ஆறாம் வீட்டு அதிபர் மூன்றாம் வீட்டுடன் (கடக ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடக்கும் போது வரும் வியாதிகள் :

வயிறு, வயிற்றில் இருக்கும் வால்வுகள், மார்பகம், உண்னும் உணவு செரிமானம் போன்றவ்ற்றை கடக ராசி குறிக்கும்.

காதில் பிரச்சினை, காதுகளில் சீழ் வடிதல் மஞ்சள் காமாலை, மார்பகத்தில் பிரச்சினை, ஈரல் பாதிப்பு, நுரையீரல் கோளாறு , போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் நோய்கள்,காசநோய், இருமல், மூச்சுகுழாயில் புண்,  குடிப்பதால் ஈரல் பாதிப்பு,சளி தொல்லை, வலிப்பு நோய்,மூச்சு திணறல் போன்ற நோய்கள் ஏற்படும்.

ஆறாம் வீட்டு அதிபர் நான்காம் வீட்டுடன் (சிம்ம ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடக்கும் போது வரும் வியாதிகள்:

இதயம், இரத்த ஒட்டத்தின் தன்மை,இதய துடிப்பு, முதுகுத் தண்டு ஆகியவற்றை சிம்மராசி குறிக்கும்.

இதய துடிப்பு குறைவதால் அல்லது அதிகமாவதால் இரத்த அழுத்த நோய் வரும், மயக்கம் ஏற்படுதல், மூச்சு திணறல், நரம்பு தளர்ச்சி, வலிப்பு நோய், உடலில் புண், தலைவலி,தீ புண்,வாகன விபத்து, விபத்தில் இதயம் பாதிக்கப்படுதல் போன்ற நோய்கள் ஏற்படும்.

ஆறாம் வீட்டு அதிபர் ஐந்தாம் வீட்டுடன் (கன்னி ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடந்தால் வரும் வியாதிகள்:

வைட்டமின் குறைவு, நுண்கிருமிகள், காலரா, வயிற்றுபோக்கு, காய்ச்சல் போன்றவற்றை கன்னி ராசி குறிக்கும்.

அடிவயிற்றில் வலி, காலரா நோய்,மார்பில் கட்டி, நுண் கிருமிகள் தாக்குதல்,மகன் அடித்து காயம் போன்ற நோய்கள் ஏற்படும்.

ஆறாவது வீட்டு அதிபர் ஆறாம் வீட்டுடன் (துலாம் ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடந்தால் வரும் வியாதிகள்:

மூட்டுகளில் வலி பிரச்சினை கர்ப்பபையில் கோளாறு மூத்திர பாதையில் கல் அடைப்பு சிறுநீரகம் பாதிப்பு போன்ற நோய்களை துலாம் ராசி குறிக்கும்.

இடுப்பிற்க்கு கீழ் வலி, தசை பிடிப்பு, தசை வலி ஏற்படுதல், குடல் வால் அகற்றும் நிலை, கிட்டினி பாதிப்பு, கிட்டினிக்கு செல்லும் இரத்த குழாயில் பாதிப்பு ஏற்படுதல், சிறுநீர் குழாயில் புண்,இன உறுப்பில் அரித்தல் போன்ற நோய்கள் வரும்.

ஆறாம் வீட்டு அதிபர் ஏழாம் வீட்டுடன் (விருச்சிக ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடந்தால் வரும் வியாதிகள்:

மாதவிலக்கு கோளாறு, கற்பப்பையில் கோளாறு,மூத்திர பாதையில் கல் அடைப்பு, மூல நோய் போன்றவற்றை விருச்சிக ராசி குறிக்கும்.

மாதவிலக்கு காலத்தில் அதிக இரத்தம் வெளிவருதல், விந்து வெளிவரும் பாதையில் புண், ஆண்குறியில் வலி, துடைபகுதியில் வலி, இடுப்புகளில் புண் ஏற்பட்டு அதிக வலி ஏற்படுதல், எய்ட்ஸ்,முகத்தில் வெட்டப்பட்ட காயம் போன்ற நோய்கள் வரும்.

ஆறாம் வீட்டு அதிபர் எட்டாம் வீட்டுடன் (தனுசு ராசியில்) சம்பந்தப்பட்டு நடந்தால் வரும் வியாதிகள்:

வாத நோய், நுரையீரல் கோளாறு, இடுப்பு தொடைப்பகுதி பாதிக்கப்படுதல் போன்றவற்றை தனுசு ராசி குறிக்கும்.

முகத்தில் புண், நுரையீரல் பிரச்சினை, இடுப்பு வலி, மலக்குடல் இறுதிபகுதியில் வலி, இடுப்பு மூட்டுக்களில் புண், வாத நோய், ஆஸ்த்துமா, மூத்திரத்தோடு இரத்தம் கலந்து போகுதல், கழுத்தில் வீக்கம் ஏற்படுதல்,விபத்தில் படுகாயம் பட்டு கோமா நிலையில் இருப்பது போன்ற நோய்கள் வரும்.

ஆறாம் வீட்டு அதிபர் ஒன்பதாம் வீட்டுடன் (மகர ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடந்தால் வரும் வியாதிகள்:

மூட்டு வலி, முழங்கால் வலி, தோல் வியாதி, வாத நோய், குஷ்டம் போன்றவற்றை மகர ராசி குறிக்கும்.

மூட்டு வலி, மூட்டுகள் உள்ள இடத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிவரும். முதுகெலும்பில் வலி ஏற்படும். மூட்டு விலகி போய்விடுவதால் நடக்க முடியாமல் நடப்பார்கள். கால்களில் அடிபடும். கால்களில் அடிப்பட்டு நொண்டி ஏற்படுதல்,பரம்பரை நோய் போன்ற நோய்கள் வரும்.

ஆறாம் வீட்டு அதிபர் பத்தாம் வீட்டுடன் (கும்ப  ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடந்தால் வரும் வியாதிகள்:

நரம்புகளில் கோளாறு மூட்டு வலி, வலிப்பு, இதய நோய், சருமத்தில் உள்ள தோல்கள் பாதிப்பு போன்றவற்றை கும்பராசி குறிக்கும்.

கால்கள் வீக்கம், முட்டிகால் பிரச்சினை, வாத நோய், குடலில் பிரச்சினை, இதய நோய், நரம்புகளில் இரத்த கசிவு, கால்களில் வலி, மலபாதையில் வலி, பல் வலி, இன உறுப்புகள் வீக்கம்,வேலை செய்யும் இடங்களில் அடிபட்டு புண் ஏற்படுதல் போன்ற நோய்கள் வரும்.

ஆறாம் வீட்டு அதிபர் பதினொன்றாம் வீட்டுடன் (மீன ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடந்தால் வரும் வியாதிகள்:

கால்களில் வலி, பாதங்களில் வெடிப்பு, குடியால் பிரச்சினை, நோயால் காலை எடுக்க வேண்டிய நிலை போன்றவற்றை மீன ராசி குறிக்கும்.

கால்களில் வலி ஏற்பட்டு நடக்ககூட முடியாத நிலை, ஈரல் பிரச்சினை,  பாத விரல்களில் வீக்கம், மூட்டுகளில் வலி ஏற்படுதல், மலக்குடல் புற்றுநோய், போன்ற நோய்கள் வரும்.

ஆறாம் வீட்டு அதிபர் பனிரெண்டாம் வீட்டுடன் (மேஷ ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடந்தால் வரும் வியாதிகள் :

தலை பகுதி, கண் பார்வை போன்றவற்றை மேஷ ராசி குறிக்கும்.

காய்ச்சல் அதிகமாக ஏற்பட்டு நரம்புகள் பாதிக்கப்படும். மலேரியா நோய் தாக்கும், பாத விரல்களில் வீக்கம், பாதங்களில் வலி, பித்த வெடிப்பு, பாதங்களில் தீ புண், காதுகளில் பிரச்சினை போன்ற நோய்கள் வரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

மேஷம் : நோய்கள்

மேஷ ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு ஆறாம் வீட்டு அதிபரின் தசா நடக்கும் போது வரும் நோய்கள்.

ஆறாம் வீட்டு அதிபர் லக்கினத்தில் (மேஷ ராசியில்) சம்பந்தபட்டு தசா நடக்கும் போது வரும் வியாதிகள் :

உடலில் தலை பகுதி, கண் பார்வை, மூளை போன்றவற்றை மேஷ ராசி குறிக்கும்.

தலையில் அடிபடும். பகைவர்களால் தாக்கபட்டு கோமா நிலைக்கு செல்ல வைக்கும். காய்ச்சல் அதிகமாக ஏற்பட்டு நரம்புகள் பாதிக்கப்படும். மலேரியா நோய் தாக்கும், மூளையில் பாதிப்பு ஏற்படும். அம்மை நோய் ஏற்படும், உடலில் புண் ஏற்படும்.

ஆறாம் வீட்டு அதிபர் இரண்டாம் வீட்டுடன் (ரிஷப ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடக்கும் போது வரும் வியாதிகள் :

கழுத்து பகுதி, முகம், முகத்தில் உள்ள எலும்புகள் போன்றவற்றை ரிஷப ராசி குறிக்கும்.

கண் பாதிக்க செய்யும். கண்கள் சிவக்கும் கண்கள் சோர்வடையும். கழுத்தில் வலி ஏற்படும் கழுத்து எலும்பு பாதிக்கப்பட்டு கழுத்தில் கழுத்துபட்டை அணிவது.தொண்டையில் கோளாறு ஏற்படுதல். தாடையில் பிரச்சினை ஏற்படும்.  முறையற்ற மாதவிலக்கு ஏற்படும். பேச்சில் கோளாறு ஏற்படும்.

ஆறாம் வீட்டு அதிபர் மூன்றாம் வீட்டுடன் (மிதுன ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடக்கும் போது வரும் வியாதிகள் :

நுரையீரல், ஆஸ்த்மா, இருமல், மூச்சு திணறல் போன்றவற்றை மிதுன ராசி குறிக்கும்.

காதில் பிரச்சினை உருவாகும். நுரையிரல் பிரச்சினை உருவாகும். தோள்பட்டை எழும்பில் பிரச்சினை உருவாகும். காது கேட்கும் திறனை இழந்துவிடும்.

ஆறாம் வீட்டு அதிபர் நான்காம் வீட்டுடன் (கடக ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடக்கும் போது வரும் வியாதிகள்:

வயிறு, வயிற்றில் இருக்கும் வால்வுகள், மார்பகம், உண்னும் உணவு செரிமானம் போன்றவ்ற்றை கடக ராசி குறிக்கும்.

மஞ்சள் காமாலை, மார்பகத்தில் பிரச்சினை, ஈரல் பாதிப்பு, நுரையீரல் கோளாறு, காசநோய்,இருமல், மூச்சுகுழாயில் புண், குடிப்பதால் ஈரல் பாதிப்பு, சளி தொல்லை, வலிப்பு நோய் ,மூச்சு திணறல் போன்ற நோய்கள் ஏற்படும்.

ஆறாம் வீட்டு அதிபர் ஐந்தாம் வீட்டுடன் (சிம்ம ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடந்தால் வரும் வியாதிகள்:

இதயத்தை குறிக்கும், இரத்த ஒட்டத்தின் தன்மை, இதய துடிப்பு , முதுகுத் தண்டு ஆகியவற்றை சிம்மராசி குறிக்கும்.

இதய துடிப்பு குறைவதால் அல்லது அதிகமாவதால் இரத்த அழுத்த நோய் வரும், மயக்கம் ஏற்படுதல், மூச்சு திணறல், நரம்பு தளர்ச்சி, வலிப்பு நோய், உடலில் புண், தலைவலி போன்றவை ஏற்படும்.

ஆறாவது வீட்டு அதிபர் ஆறாம் வீட்டுடன் (கன்னி ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடந்தால் வரும் வியாதிகள்:

வைட்டமின் குறைவு, நுண்கிருமிகள், காலரா, வயிற்றுபோக்கு, காய்ச்சல் போன்றவற்றை கன்னி ராசி குறிக்கும்.

சாப்பிடுகின்ற சாப்பாட்டில் ஏற்படுகின்ற பிரச்சினையால் வயிற்றுபோக்கு , அடிவயிற்றில் வலி,வயிற்று புண் ஏற்பட்டு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும்.  பெண்களாக இருந்தால் மார்பில் கட்டி ஏற்படும். மாமிச உணவை விரும்பி உண்பதால் அஜிரண கோளாறு ஏற்படும். இடுப்பு வலி ஏற்படும். காலரா நோய், டைபாயிட் இனிப்பு வகைகளை அதிகம் உண்னுவதால் வயிற்றில் பூச்சி உருவாகி வயிற்றுபோக்கு மற்றும் திடீர் என்று உடம்பை தூக்கிபோடுவது ஏற்படும்.

ஆறாம் வீட்டு அதிபர் ஏழாம் வீட்டுடன் (துலாம் ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடந்தால் வரும் வியாதிகள்:

மூட்டுகளில் வலி பிரச்சினை கர்ப்பபையில் கோளாறு மூத்திர பாதையில் கல் அடைப்பு சிறுநீரகம் பாதிப்பு போன்ற நோய்களை துலாம் ராசி குறிக்கும்.

தோல்வியாதி ஏற்படும், அடிவயிற்றில் வலி ஏற்படுதல், பெண்களாக இருந்தால் மாதவிலக்கு ஒழுங்காக வராத நிலை ஏற்படும், இடுப்பிற்க்கு கீழ் வலி, தசை பிடிப்பு, தசை வலி ஏற்படுதல், குடல் வால் அகற்றும் நிலை, கிட்டினி பாதிப்பு, கிட்டினிக்கு செல்லும் இரத்த குழாயில் பாதிப்பு ஏற்படும், சிறுநீர் குழாயில் புண் போன்ற நோய்கள் வரும்.

ஆறாம் வீட்டு அதிபர் எட்டாம் வீட்டுடன் (விருச்சக ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடந்தால் வரும் வியாதிகள்:

மாதவிலக்கு கோளாறு, கற்பப்பையில் கோளாறு ,மூத்திர பாதையில் கல் அடைப்பு, மூல நோய் போன்றவற்றை விருச்சக ராசி குறிக்கும்.

மாதவிலக்கு காலத்தில் அதிக இரத்தம் வெளிவருதல், விந்து வெளிவரும் பாதையில் புண், ஆண்குறியில் வலி துடைபகுதியில் வலி, இடுப்புகளில் புண் ஏற்பட்டு அதிக வலி ஏற்படுதல். எய்ட்ஸ் போன்ற வியாதிகள் ஏற்படும்.

ஆறாம் வீட்டு அதிபர் ஒன்பதாம் வீட்டுடன் (தனுசு ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடந்தால் வரும் வியாதிகள் :

வாத நோய், நுரையீரல் கோளாறு, இடுப்பு தொடைப்பகுதி பாதிக்கப்படுதல் போன்றவற்றை தனுசு ராசி குறிக்கும்.

முகத்தில் புண், நுரையீரல் பிரச்சினை, இடுப்பு வலி, மலக்குடல் இறுதிபகுதியில் வலி, இடுப்பு மூட்டுக்களில் புண், வாத நோய், ஆஸ்த்துமா, மூத்திரத்தோடு இரத்தம் கலந்து போகுதல், பரம்பரை நோய் அதவாது தந்தை வழி நோய், கழுத்தில் வீக்கம் ஏற்படுதல் போன்ற நோய்கள் வரும்.

ஆறாம் வீட்டு அதிபர் பத்தாம் வீட்டுடன் (மகர ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடந்தால் வரும் வியாதிகள்:

மூட்டு வலி, முழங்கால் வலி, தோல் வியாதி, வாத நோய், குஷ்டம் போன்றவற்றை மகர ராசி குறிக்கும்.

மூட்டு வலி மூட்டுகள் உள்ள இடத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிவரும். பெண்களாக இருந்தால் மார்பில் புற்று நோய் வரும். இருதய சம்பந்தமாக பிரச்சினைகளும் வரும். முதுகெலும்பில் வலி ஏற்படும். மூட்டு விலகி போய்விடுவதால் நடக்க முடியாமல் நடப்பார்கள். கால்களில் அடிபடும். வேலை செய்யும் இடங்களில் தீ புண் ஏற்படுதல்,மூலநோய் ஏற்படும். கால்களில் அடிப்பட்டு நொண்டி ஏற்படுதல் போன்ற நோய்கள் வரும்.

ஆறாம் வீட்டு அதிபர் பதினொன்றாம் வீட்டுடன் (கும்ப ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடந்தால் வரும் வியாதிகள்:

நரம்புகளில் கோளாறு மூட்டு வலி, வலிப்பு, இதய நோய் சருமத்தில் உள்ள தோல்கள் பாதிப்பு போன்றவற்றை கும்பராசி குறிக்கும்.

கால்கள் வீக்கம், முட்டிகால் பிரச்சினை, வாத நோய், குடலில் பிரச்சினை, இதய நோய், நரம்புகளில் இரத்த கசிவு, கால்களில் வலி, மலபாதையில் வலி, பல் வலி, இன உறுப்புகள் வீக்கம் போன்ற நோய்கள் வரும்.

ஆறாம் வீட்டு அதிபர் பனிரெண்டாம் வீட்டுடன் (மீன ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடந்தால் வரும் வியாதிகள் :

கால்களில் வலி, பாதங்களில் வெடிப்பு, குடியால் பிரச்சினை, நோயால் காலை எடுக்க வேண்டிய நிலை போன்றவற்றை மீன ராசி குறிக்கும்.

கால்களில் வலி ஏற்பட்டு நடக்ககூட முடியாத நிலை, ஈரல் பிரச்சினை, பாதங்களில் வெடிப்பு ஏற்பட்டு நடக்க முடியாத நிலை, பாத விரல்களில் வீக்கம், மூட்டுகளில் வலி ஏற்படுதல், மலக்குடல் புற்றுநோய், காதுகளில் பிரச்சினை போன்ற நோய்கள் வரும்.

மேலே சொன்ன அனைத்து நோய்களும் வரலாம் அல்லது வராமல் இருக்கலாம் அது அவர்களின் ஜாதங்களில் இருக்கும் அனைத்து கிரக நிலைகளை பொறுத்து வரும். அனைத்தையும் பார்த்த பிறகு முடிவு செய்ய வேண்டும். எனக்கு இந்த நோய் வரவில்லை என்று கேட்க வேண்டாம். சோதிடம் என்றால் என்ன சும்மாவா ஒரு கட்டத்தில் பல கோடி விஷயங்களை வைத்திருக்கிறார்கள் அனைத்தையும் படிப்பது என்றால் இந்த பிறவி போதாது. முடிந்தரை பார்க்கலாம். 

வரும் பதிவுகளில் அனைத்து ராசிக்கும் வரும் நோய்களை ஆறாம் வீட்டு தசாவுடன் பார்க்கலாம்.

இப்பதிவு நன்றாக இருந்தால் எனக்கு நன்றி சொல்ல வேண்டாம். உங்கள் நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.