கடக ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு ஆறாம் வீட்டு அதிபரின் தசா நடக்கும் போது வரும் நோய்கள்
ஆறாம் வீட்டு அதிபர் லக்கினத்தில் (கடக ராசியில்) சம்பந்தபட்டு தசா நடக்கும் போது வரும் வியாதிகள் :
வயிறு, வயிற்றில் இருக்கும் வால்வுகள், மார்பகம், உண்னும் உணவு செரிமானம் போன்றவற்றை கடக ராசி குறிக்கும்.
தலை பாகங்களில் அடிபடுதல், பல் வலி, மஞ்சள் காமாலை, நுரையீரல் கோளாறு, காசநோய், இருமல், மூச்சுகுழாயில் புண்,சளி தொல்லை, வலிப்பு நோய்,மூச்சு திணறல் போன்ற நோய்கள் ஏற்படும்.
ஆறாம் வீட்டு அதிபர் இரண்டாம் வீட்டுடன் (சிம்ம ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடக்கும் போது வரும் வியாதிகள் :
இதயம், இரத்த ஒட்டத்தின் தன்மை,இதய துடிப்பு, முதுகுத் தண்டு ஆகியவற்றை சிம்மராசி குறிக்கும்.
பேச்சில் கோளாறு,மயக்கம் ஏற்படுதல், மூச்சு திணறல், நரம்பு தளர்ச்சி, வலிப்பு நோய், தலைவலி போன்ற நோய்கள் ஏற்படும்.
ஆறாம் வீட்டு அதிபர் மூன்றாம் வீட்டுடன் (கன்னி ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடக்கும் போது வரும் வியாதிகள்:
வைட்டமின் குறைவு, நுண்கிருமிகள், காலரா, வயிற்றுபோக்கு, காய்ச்சல் ,தோல் வியாதி போன்றவற்றை கன்னி ராசி குறிக்கும்.
காது கேளாமை,அடிவயிற்றில் வலி, காலரா நோய்,மார்பில் கட்டி,கொக்கி புழு தாக்குதல் ,சிறு பயணத்தில் அடிபட்டு புண் ஏற்படுதல் போன்ற நோய்கள் ஏற்படும்.
ஆறாம் வீட்டு அதிபர் நான்காம் வீட்டுடன் (துலாம் ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடக்கும் போது வரும் வியாதிகள்:
மூட்டுகளில் வலி பிரச்சினை கர்ப்பபையில் கோளாறு மூத்திர பாதையில் கல் அடைப்பு சிறுநீரகம் பாதிப்பு போன்ற நோய்களை துலாம் ராசி குறிக்கும்.
இடுப்பிற்க்கு கீழ் வலி, தசை பிடிப்பு, தசை வலி ஏற்படுதல், குடல் வால் அகற்றும் நிலை, கிட்டினி பாதிப்பு, கிட்டினிக்கு செல்லும் இரத்த குழாயில் பாதிப்பு ஏற்படுதல், சிறுநீர் குழாயில் புண்,இன உறுப்பில் அரித்தல் போன்ற நோய்கள் வரும்.
ஆறாம் வீட்டு அதிபர் ஐந்தாம் வீட்டுடன் (விருச்சிக ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடந்தால் வரும் வியாதிகள்:
மாதவிலக்கு கோளாறு, மூத்திர பாதையில் கல் அடைப்பு, மூல நோய் போன்றவற்றை விருச்சிக ராசி குறிக்கும்.
மாதவிலக்கு காலத்தில் அதிக இரத்தம் வெளிவருதல், விந்து வெளிவரும் பாதையில் புண், ஆண்குறியில் வலி, துடைபகுதியில் வலி, இடுப்புகளில் புண் ஏற்பட்டு அதிக வலி ஏற்படுதல் போன்ற நோய்கள் வரும்.
ஆறாவது வீட்டு அதிபர் ஆறாம் வீட்டுடன் (தனுசு ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடந்தால் வரும் வியாதிகள்:
வாத நோய், நுரையீரல் கோளாறு, இடுப்பு தொடைப்பகுதி பாதிக்கப்படுதல் போன்றவற்றை தனுசு ராசி குறிக்கும்.
ஆறாம் வீட்டு அதிபர் ஏழாம் வீட்டுடன் (மகர ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடந்தால் வரும் வியாதிகள்:
மூட்டு வலி, முழங்கால் வலி, தோல் வியாதி, வாத நோய், குஷ்டம் போன்றவற்றை மகர ராசி குறிக்கும்.
மூட்டு வலி, மூட்டுகள் உள்ள இடத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிவரும். முதுகெலும்பில் வலி ஏற்படும். மூட்டு விலகி போய்விடுவதால் நடக்க முடியாமல் நடப்பார்கள். கால்களில் அடிபடும். கால்களில் அடிப்பட்டு நொண்டி ஏற்படுதல்,விபத்தில் படுகாயம் பட்டு கோமா நிலையில் இருப்பது போன்ற நோய்கள் வரும்.
ஆறாம் வீட்டு அதிபர் எட்டாம் வீட்டுடன் (கும்ப ராசியில்) சம்பந்தப்பட்டு நடந்தால் வரும் வியாதிகள்:
அடிப்பட்டு கோமா நிலையில் இருப்பது,நரம்புகளில் கோளாறு மூட்டு வலி, வலிப்பு, இதய நோய், சருமத்தில் உள்ள தோல்கள் பாதிப்பு போன்றவற்றை கும்பராசி குறிக்கும்.
கால்கள் வீக்கம், முட்டிகால் பிரச்சினை, வாத நோய், குடலில் பிரச்சினை நரம்புகளில் இரத்த கசிவு, கால்களில் வலி, மலபாதையில் வலி, இன உறுப்புகள் வீக்கம் போன்ற நோய்கள் வரும்.
ஆறாம் வீட்டு அதிபர் ஒன்பதாம் வீட்டுடன் (மீன ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடந்தால் வரும் வியாதிகள்:
கால்களில் வலி, நோயால் காலை எடுக்க வேண்டிய நிலை, நீர் கோர்வை போன்றவற்றை மீன ராசி குறிக்கும்.
கால்களில் வலி ஏற்பட்டு நடக்ககூட முடியாத நிலை, ஈரல் பிரச்சினை, பாத விரல்களில் வீக்கம், மூட்டுகளில் வலி ஏற்படுதல், புற்றுநோய், பரம்பரை வியாதிகள் போன்ற நோய்கள் வரும்.
ஆறாம் வீட்டு அதிபர் பத்தாம் வீட்டுடன் (மேஷ ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடந்தால் வரும் வியாதிகள்:
உடலில் தலை பகுதி, கண் பார்வை, மூளை போன்றவற்றை மேஷ ராசி குறிக்கும்.
காய்ச்சல் அதிகமாக ஏற்பட்டு நரம்புகள் பாதிக்கப்படும்,மலேரியா நோய், விட்டு விட்டு காய்ச்சல் வருதல், இரத்த அழுத்தம் ,தொழில் செய்யும் இடங்களில் வரும் தொற்றுநோய் போன்ற நோய்கள் வரும்.
ஆறாம் வீட்டு அதிபர் பதினொன்றாம் வீட்டுடன் (ரிஷப ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடந்தால் வரும் வியாதிகள்:
கழுத்து பகுதி,முகம், முகத்தில் உள்ள எலும்புகள் போன்றவற்றை ரிஷப ராசி குறிக்கும்.
பித்த வெடிப்பு, பெண்களால் வரும் நோய், தாடையில் பிரச்சினை,தொண்டையில் கோளாறு போன்ற நோய்கள் வரும்.
ஆறாம் வீட்டு அதிபர் பனிரெண்டாம் வீட்டுடன் (மிதுன ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடந்தால் வரும் வியாதிகள்:
நுரையீரல், ஆஸ்த்மா, இருமல், மூச்சு திணறல் போன்றவற்றை மிதுன ராசி குறிக்கும்.
பாதங்களில் வெடிப்பு, தொண்டையில் கோளாறு ஏற்படுதல், நுரையிரல் பிரச்சினை, தோள்பட்டை எழும்பில் பிரச்சினை உருவாகும், மூச்சு திணறல் போன்ற நோய்கள் வரும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment