மேஷ ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு ஆறாம் வீட்டு அதிபரின் தசா நடக்கும் போது வரும் நோய்கள்.
ஆறாம் வீட்டு அதிபர் லக்கினத்தில் (மேஷ ராசியில்) சம்பந்தபட்டு தசா நடக்கும் போது வரும் வியாதிகள் :
உடலில் தலை பகுதி, கண் பார்வை, மூளை போன்றவற்றை மேஷ ராசி குறிக்கும்.
தலையில் அடிபடும். பகைவர்களால் தாக்கபட்டு கோமா நிலைக்கு செல்ல வைக்கும். காய்ச்சல் அதிகமாக ஏற்பட்டு நரம்புகள் பாதிக்கப்படும். மலேரியா நோய் தாக்கும், மூளையில் பாதிப்பு ஏற்படும். அம்மை நோய் ஏற்படும், உடலில் புண் ஏற்படும்.
ஆறாம் வீட்டு அதிபர் இரண்டாம் வீட்டுடன் (ரிஷப ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடக்கும் போது வரும் வியாதிகள் :
கழுத்து பகுதி, முகம், முகத்தில் உள்ள எலும்புகள் போன்றவற்றை ரிஷப ராசி குறிக்கும்.
கண் பாதிக்க செய்யும். கண்கள் சிவக்கும் கண்கள் சோர்வடையும். கழுத்தில் வலி ஏற்படும் கழுத்து எலும்பு பாதிக்கப்பட்டு கழுத்தில் கழுத்துபட்டை அணிவது.தொண்டையில் கோளாறு ஏற்படுதல். தாடையில் பிரச்சினை ஏற்படும். முறையற்ற மாதவிலக்கு ஏற்படும். பேச்சில் கோளாறு ஏற்படும்.
ஆறாம் வீட்டு அதிபர் மூன்றாம் வீட்டுடன் (மிதுன ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடக்கும் போது வரும் வியாதிகள் :
நுரையீரல், ஆஸ்த்மா, இருமல், மூச்சு திணறல் போன்றவற்றை மிதுன ராசி குறிக்கும்.
காதில் பிரச்சினை உருவாகும். நுரையிரல் பிரச்சினை உருவாகும். தோள்பட்டை எழும்பில் பிரச்சினை உருவாகும். காது கேட்கும் திறனை இழந்துவிடும்.
ஆறாம் வீட்டு அதிபர் நான்காம் வீட்டுடன் (கடக ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடக்கும் போது வரும் வியாதிகள்:
வயிறு, வயிற்றில் இருக்கும் வால்வுகள், மார்பகம், உண்னும் உணவு செரிமானம் போன்றவ்ற்றை கடக ராசி குறிக்கும்.
மஞ்சள் காமாலை, மார்பகத்தில் பிரச்சினை, ஈரல் பாதிப்பு, நுரையீரல் கோளாறு, காசநோய்,இருமல், மூச்சுகுழாயில் புண், குடிப்பதால் ஈரல் பாதிப்பு, சளி தொல்லை, வலிப்பு நோய் ,மூச்சு திணறல் போன்ற நோய்கள் ஏற்படும்.
ஆறாம் வீட்டு அதிபர் ஐந்தாம் வீட்டுடன் (சிம்ம ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடந்தால் வரும் வியாதிகள்:
இதயத்தை குறிக்கும், இரத்த ஒட்டத்தின் தன்மை, இதய துடிப்பு , முதுகுத் தண்டு ஆகியவற்றை சிம்மராசி குறிக்கும்.
இதய துடிப்பு குறைவதால் அல்லது அதிகமாவதால் இரத்த அழுத்த நோய் வரும், மயக்கம் ஏற்படுதல், மூச்சு திணறல், நரம்பு தளர்ச்சி, வலிப்பு நோய், உடலில் புண், தலைவலி போன்றவை ஏற்படும்.
ஆறாவது வீட்டு அதிபர் ஆறாம் வீட்டுடன் (கன்னி ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடந்தால் வரும் வியாதிகள்:
வைட்டமின் குறைவு, நுண்கிருமிகள், காலரா, வயிற்றுபோக்கு, காய்ச்சல் போன்றவற்றை கன்னி ராசி குறிக்கும்.
சாப்பிடுகின்ற சாப்பாட்டில் ஏற்படுகின்ற பிரச்சினையால் வயிற்றுபோக்கு , அடிவயிற்றில் வலி,வயிற்று புண் ஏற்பட்டு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும். பெண்களாக இருந்தால் மார்பில் கட்டி ஏற்படும். மாமிச உணவை விரும்பி உண்பதால் அஜிரண கோளாறு ஏற்படும். இடுப்பு வலி ஏற்படும். காலரா நோய், டைபாயிட் இனிப்பு வகைகளை அதிகம் உண்னுவதால் வயிற்றில் பூச்சி உருவாகி வயிற்றுபோக்கு மற்றும் திடீர் என்று உடம்பை தூக்கிபோடுவது ஏற்படும்.
ஆறாம் வீட்டு அதிபர் ஏழாம் வீட்டுடன் (துலாம் ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடந்தால் வரும் வியாதிகள்:
மூட்டுகளில் வலி பிரச்சினை கர்ப்பபையில் கோளாறு மூத்திர பாதையில் கல் அடைப்பு சிறுநீரகம் பாதிப்பு போன்ற நோய்களை துலாம் ராசி குறிக்கும்.
தோல்வியாதி ஏற்படும், அடிவயிற்றில் வலி ஏற்படுதல், பெண்களாக இருந்தால் மாதவிலக்கு ஒழுங்காக வராத நிலை ஏற்படும், இடுப்பிற்க்கு கீழ் வலி, தசை பிடிப்பு, தசை வலி ஏற்படுதல், குடல் வால் அகற்றும் நிலை, கிட்டினி பாதிப்பு, கிட்டினிக்கு செல்லும் இரத்த குழாயில் பாதிப்பு ஏற்படும், சிறுநீர் குழாயில் புண் போன்ற நோய்கள் வரும்.
ஆறாம் வீட்டு அதிபர் எட்டாம் வீட்டுடன் (விருச்சக ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடந்தால் வரும் வியாதிகள்:
மாதவிலக்கு கோளாறு, கற்பப்பையில் கோளாறு ,மூத்திர பாதையில் கல் அடைப்பு, மூல நோய் போன்றவற்றை விருச்சக ராசி குறிக்கும்.
மாதவிலக்கு காலத்தில் அதிக இரத்தம் வெளிவருதல், விந்து வெளிவரும் பாதையில் புண், ஆண்குறியில் வலி துடைபகுதியில் வலி, இடுப்புகளில் புண் ஏற்பட்டு அதிக வலி ஏற்படுதல். எய்ட்ஸ் போன்ற வியாதிகள் ஏற்படும்.
ஆறாம் வீட்டு அதிபர் ஒன்பதாம் வீட்டுடன் (தனுசு ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடந்தால் வரும் வியாதிகள் :
வாத நோய், நுரையீரல் கோளாறு, இடுப்பு தொடைப்பகுதி பாதிக்கப்படுதல் போன்றவற்றை தனுசு ராசி குறிக்கும்.
முகத்தில் புண், நுரையீரல் பிரச்சினை, இடுப்பு வலி, மலக்குடல் இறுதிபகுதியில் வலி, இடுப்பு மூட்டுக்களில் புண், வாத நோய், ஆஸ்த்துமா, மூத்திரத்தோடு இரத்தம் கலந்து போகுதல், பரம்பரை நோய் அதவாது தந்தை வழி நோய், கழுத்தில் வீக்கம் ஏற்படுதல் போன்ற நோய்கள் வரும்.
ஆறாம் வீட்டு அதிபர் பத்தாம் வீட்டுடன் (மகர ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடந்தால் வரும் வியாதிகள்:
மூட்டு வலி, முழங்கால் வலி, தோல் வியாதி, வாத நோய், குஷ்டம் போன்றவற்றை மகர ராசி குறிக்கும்.
மூட்டு வலி மூட்டுகள் உள்ள இடத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிவரும். பெண்களாக இருந்தால் மார்பில் புற்று நோய் வரும். இருதய சம்பந்தமாக பிரச்சினைகளும் வரும். முதுகெலும்பில் வலி ஏற்படும். மூட்டு விலகி போய்விடுவதால் நடக்க முடியாமல் நடப்பார்கள். கால்களில் அடிபடும். வேலை செய்யும் இடங்களில் தீ புண் ஏற்படுதல்,மூலநோய் ஏற்படும். கால்களில் அடிப்பட்டு நொண்டி ஏற்படுதல் போன்ற நோய்கள் வரும்.
ஆறாம் வீட்டு அதிபர் பதினொன்றாம் வீட்டுடன் (கும்ப ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடந்தால் வரும் வியாதிகள்:
நரம்புகளில் கோளாறு மூட்டு வலி, வலிப்பு, இதய நோய் சருமத்தில் உள்ள தோல்கள் பாதிப்பு போன்றவற்றை கும்பராசி குறிக்கும்.
கால்கள் வீக்கம், முட்டிகால் பிரச்சினை, வாத நோய், குடலில் பிரச்சினை, இதய நோய், நரம்புகளில் இரத்த கசிவு, கால்களில் வலி, மலபாதையில் வலி, பல் வலி, இன உறுப்புகள் வீக்கம் போன்ற நோய்கள் வரும்.
ஆறாம் வீட்டு அதிபர் பனிரெண்டாம் வீட்டுடன் (மீன ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடந்தால் வரும் வியாதிகள் :
கால்களில் வலி, பாதங்களில் வெடிப்பு, குடியால் பிரச்சினை, நோயால் காலை எடுக்க வேண்டிய நிலை போன்றவற்றை மீன ராசி குறிக்கும்.
கால்களில் வலி ஏற்பட்டு நடக்ககூட முடியாத நிலை, ஈரல் பிரச்சினை, பாதங்களில் வெடிப்பு ஏற்பட்டு நடக்க முடியாத நிலை, பாத விரல்களில் வீக்கம், மூட்டுகளில் வலி ஏற்படுதல், மலக்குடல் புற்றுநோய், காதுகளில் பிரச்சினை போன்ற நோய்கள் வரும்.
மேலே சொன்ன அனைத்து நோய்களும் வரலாம் அல்லது வராமல் இருக்கலாம் அது அவர்களின் ஜாதங்களில் இருக்கும் அனைத்து கிரக நிலைகளை பொறுத்து வரும். அனைத்தையும் பார்த்த பிறகு முடிவு செய்ய வேண்டும். எனக்கு இந்த நோய் வரவில்லை என்று கேட்க வேண்டாம். சோதிடம் என்றால் என்ன சும்மாவா ஒரு கட்டத்தில் பல கோடி விஷயங்களை வைத்திருக்கிறார்கள் அனைத்தையும் படிப்பது என்றால் இந்த பிறவி போதாது. முடிந்தரை பார்க்கலாம்.
வரும் பதிவுகளில் அனைத்து ராசிக்கும் வரும் நோய்களை ஆறாம் வீட்டு தசாவுடன் பார்க்கலாம்.
இப்பதிவு நன்றாக இருந்தால் எனக்கு நன்றி சொல்ல வேண்டாம். உங்கள் நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment