Followers

Wednesday, February 4, 2015

விதி வலியது


வணக்கம் நண்பர்களே!
                      என்னிடம் தொழில் சம்பந்தமாக முன்னேற்றம் அடைவதற்க்கு வரும் நண்பர்கள் பற்றிய பதிவு இது. தொழில் என்று வந்தால் அவர்களிடம் பணம் வாங்குவது கிடையாது. முதலில் உங்களுக்காக ஒன்றை செய்கிறேன். உங்களுக்கு பணம் வந்த பிறகு எனக்கு பணத்தை கொடுங்கள் என்று சொல்லுவேன்.

நீங்கள் செய்ய வேண்டியது தினமும் எனக்கு போன் செய்து என்ன நடக்கிறது என்பதை மட்டும் சொல்லுங்கள் என்று சொல்லுவேன். தினமும் அவர்களுக்கு செலவு என்பது ஒரு ரூபாய் தான் வரும். பெரும்பாலான நண்பர்கள் இதனை செய்யமாட்டார்கள். என்னை வந்து சந்தித்து இரண்டு நாட்களுக்கு போன் செய்வார்கள். அதன் பிறகு அவர்கள் என்னை தொடர்புக்கொள்வது குறைந்துவிடும்.

உண்மையில் அவர்களின் விதி அவர்களை விடுவதில்லை. அவர்களை சுற்றிவிடுகிறது. அதனை மீறி என்னை தொடர்புக்கொள்ள முடிவதில்லை. நானும் கண்டுக்கொள்ளாமல் விட்டுவிடுவது உண்டு.

மனிதனை நாம் குறைச்சொல்லமுடியாது. அவனவன் வாங்கி வந்திருக்கிற கர்மா அப்படிப்பட்டது. அந்த கர்மாவை மீற முடியாமல் தவிக்கின்றார்கள்.மிக குறைந்த நபர்கள் என்ன தான் நடந்தாலும் நடக்கட்டும் என்று விடாமல் பிடித்துக்கொண்டுவிடுவார்கள். அவர்கள் தான் என்னிடம் நல்ல பயன்அடைந்தவர்கள்.

நாம் வெற்றி பெறவேண்டும் என்றால் நமது நிலைமை என்ன என்று நன்றாக புரிந்துக்கொள்ளவேண்டும். நமது ஜாதகத்தின் நிலைமை என்ன என்றும் புரிந்துக்கொள்ளவேண்டும். அதன் பிறகு என்னிடம் வந்து உங்களுக்கு தேவையானவற்றை பெற்றுக்கொள்ளலாம். விதியை புரிந்துக்கொண்டு நடப்பது நல்லது நடக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, February 3, 2015

இனிய தொடக்கம்


வணக்கம் நண்பர்களே!
                      ஒவ்வொரு கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் மனிதனும் தன் வாழ்வில் ஏதாவது ஒரு ஏற்றம் வராதா என்று எதிர்பார்ப்போடு ஒவ்வொரு நாளும் வாழ்க்கையை ஒட்டிக்கொண்டு இருக்கின்றான். 

வாழ்வில் ஏற்றத்திற்க்கு வழிபாடு மற்றும் ஆன்மீக விசயங்களில் நாட்டம் செலுத்தி இறை வழியாக ஏற்றத்தை ஏற்படுத்த கடுமையாக போராடுகிறான். இதில் வெற்றி கண்டவர்களும் உண்டு, வெற்றி காணாமல் சென்றவர்களும் உண்டு.

ஒரு சிலர் சும்மா உட்கார்ந்துக்கொண்டு இருப்பார்கள். அவரை அனைவரும் வழியில் போகும்பொழுது பார்க்கலாம். ஒரு சில காலங்களில் அவரை பார்க்க அப்பாயிமெண்ட் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுபட்டுவிடும். 

சும்மா இருப்பவனை மேலே தூக்கிவிடுவதும் மேலே இருப்பவனை கீழே தள்ளிவிடுவதிலும் ஒவ்வொரு மனிதனின் ஜாதகத்தில் உள்ள தசாக்கள் மிகப்பெரிய பங்கு அளிக்கின்றன.

பல்வேறு பதிவுகளில் இதனைப்பற்றி சொல்லிவந்து இருக்கின்றேன். ஒவ்வொரு தசாவாக பார்த்து வந்துக்கொண்டு இருந்தோம். இடையில் உங்களிடம் எந்த தசாவை எழுதலாம் என்று கேட்டேன். அதற்கு பெரும்பாலான நண்பர்கள் சனி தசாவைப்பற்றி எழுதுங்கள் என்று கேட்டார்கள்.

திருநள்ளாருக்கு செல்லாமல் இருந்த என்னை திருநள்ளாருக்கு சென்று தீர்த்தம் ஆடிவிட்டு சனி பகவானை தரிசனம் செய்யும் வாய்ப்பும் இயற்கையாகவே அமைந்தது. சரி இறைவனும் முடிவு செய்துவிட்டார் நாம் சனி தசாவைப்பற்றி எழுதலாம் என்று எழுதஆரம்பித்துவிட்டேன்.

சனி தசாவை இன்று தைபூசம் அன்று தொடங்கலாம் என்று தொடங்கிவிட்டேன். 

நாளை மதியம் திருப்பூர் பயணம் மேற்க்கொள்கிறேன். வியாழன் அன்று திருப்பூர் நண்பர்களை சந்திக்கிறேன். கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் நண்பர்கள் என்னை சந்திப்பதாக இருந்தால் என்னை தொடர்புக்கொள்ளவும்.  

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, February 2, 2015

தவிர்க்கலாம்


வணக்கம் நண்பர்களே!
                      ஜாதககதம்பம் பல நல்ல உள்ளங்களை எனக்கு பெற்றுக்கொடுத்தாலும் அவ்வப்பொழுது யாராவது வந்து தொல்லை கொடுத்துக்கொண்டும் இருப்பார்கள். அதனை நான் அதிகம் கண்டுக்கொள்ளாமல் இருந்தாலும்  அவ்வப்பொழுது வந்து தொந்தரவைக் கொடுக்கிறார்கள்.

இலவசசோதிட சேவையை நிறுத்திவிட்டேன். பிற்காலத்தில் நேரம் கிடைக்கும்பொழுது அந்த சேவையை தொடங்கவேண்டும் என்று அந்த லிங்கை வைத்திருக்கிறேன். அதில் வந்து பல பேர் தொந்தரவுக்கொடுக்கிறார்கள். அதனை கொஞ்சம் மாற்றிக்கொள்ளுங்கள்.

கட்டண சோதிடத்தில் உள்ள மெயிலுக்கு மெயிலை அனுப்பி நான் உங்களின் வங்கி கணக்கிற்க்கு பணத்தை அனுப்பிவிட்டேன் என்று போலியாக ஒரு டிரஸ்பெர் எண்ணை கொடுத்துவிட்டு எனக்கு பலனை அனுப்புங்கள் என்று மெயில் செய்கின்றார்கள். இதனையும் தவிருங்கள்.

என்னிடம் ஐந்து ஜாதகம் இருக்கின்றது. உங்களின் வங்கிக்கணக்கிற்க்கு பணத்தை அனுப்புகிறேன். அவசரமாக எனக்கு ஒரு ஜாதகத்தை மட்டும் இப்பொழுது பார்த்து சொல்லுங்கள் என்று கேட்கிறார்கள். பொதுவாக எனக்கு பணத்தை கட்டிய பிறகு அவர்களுக்கு நான் பலன் சொல்ல ஒரு வாரம் எடுக்கும். ஐந்து ஜாதகம் வைத்திருப்பதால் உங்களுக்கு உடனே பலனை சொல்லிவிடமாட்டேன்.

பொதுவாக நான் யாருக்கும் உடனே நல்லது செய்துவிடுவது கிடையாது. நன்றாக பார்த்து இவர் கடைசிவரை நம்மிடம் இருப்பார் என்றால் செய்வது உண்டு. நல்ல டைம் எடுத்து தான் செய்வது உண்டு. ஜாதககதம்பத்தில் இருந்து வந்த நல்ல குடும்பங்கள் எல்லாம் இப்படி தான் பயன் அடைந்திருக்கிறார்கள்.

நல்லது செய்யவேண்டும் என்று தான் நான் நினைக்கிறேன். அதற்கு காலம் கொஞ்சம் ஒத்துழைக்கவேண்டும். காலம் தீர்மானிக்கவேண்டும் என்று நான் கொஞ்சம் நேரம் எடுப்பது உண்டு.

ஒன்று இருக்கின்றது என்றால் அதனை நல்ல முறையில் பயன்படுத்துங்கள். அதனைவிட்டுவிட்டு தேவையற்றை விசயங்களில் கவனம் செலுத்தி உங்களின் சக்தியை வீணடிக்கவேண்டாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

வாங்கி கட்டிய வரம்


வணக்கம் நண்பர்களே!
                      வாங்கி கட்டிய வரம் என்று ஒன்றைப்பற்றி பார்த்தோம். அதில் பணத்தைப்பற்றி பார்த்தோம். கடன் வாங்குவதால் ஏற்படும் சிக்கலைப்பற்றி பார்த்தோம். இப்பதிவில் ஒரு தகவலைப்பற்றி பார்க்கலாம்.

எப்படி எல்லாம் நாம் வாங்கிக்கட்டிக்கொள்கிறோம் என்பதை பற்றி தான் பார்த்து வருகிறோம். காமம் என்ற ஒன்று நல்ல வழியில் பயன்படுத்தினால் அது நல்ல வழிக்கு கொண்டு செல்லும் அதனை கொஞ்சம் தவறான வழியில் பயன்படுத்தும்பொழுது அதுவே பிரச்சினையாகவும் நமக்கு வந்துவிடும்.

இயற்கை ஒருவனுக்கு ஒருத்தி என்ற மாதிரி தான் இயங்குகிறது. அதுவே ஒருத்திக்கு மேல் போனால் வியாதி வரும் என்பதை இயற்கையே உணர்த்தும்பொழுது ஒருத்தனுக்கு ஒருத்தியோடு இருப்பது நல்லது. 

காமத்தால் எப்படி சூட்சமசரீரம் பாதிப்படைகிறது என்றால் ஒருவரிடம் இருந்து மகிழ்ச்சியை நாம் பெறும்பொழுது அவர்களின் தோஷத்தை அதாவது அவர்களின் கஷ்டத்தையும் நாம் பெற்றுக்கொள்ளதான் வேண்டும்.

ஒவ்வொருக்கும் ஜாதகத்தில் தோஷம் இருக்கும் அவர்களோடு நாம் கலக்கும்பொழுது அவர்களின் தோஷமும் நமக்கு வரும். திருமணத்திற்க்கு பிறகு ஒவ்வொருவரின் வாழ்விலும் மாற்றம் என்பது வரும் அது ஆணும் பெண்ணும் ஜாதகமும் இணைந்து செயல்படும். 

கண்ட கண்ட பெண்களை நாம் பார்த்துக்கொண்டே இருந்தால் அவர்களிடம் உள்ள கெட்ட விசயங்கள் உங்களை பிரச்சினையில் தாழ்த்திவிடும். இப்படி இருப்பவர்களுக்கும் நாம் செய்வது கடினமாகதான் இருக்கும்.

இதுவரை தவறு செய்துவந்தாலும் பரவாயில்லை என்று விட்டு விட்டு இனிமேல் தவறை செய்யவேண்டாம் என்று மனம் திருந்தி நல்ல வழியில் செல்லுங்கள். இறையருள் உங்களை மேலே தூக்கிவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

கோவில் தரிசனம்


வணக்கம் நண்பர்களே!
                      இன்று காலை பதிவை எழுதிவிட்டு நேராக மன்னார்குடி இராஜாகோபால சுவாமி கோவிலுக்கு சென்று வந்தேன். மன்னார்குடியில் நான் படிக்கும் காலத்தில் அடிக்கடி இந்த கோவிலுக்கு சென்று வந்து இருக்கிறேன். அதன் பிறகு நீண்ட நாள்களுக்கு பிறகு இப்பொழுது தான் சென்று வந்தேன். மன்னார்குடி பெரிய கோவில் என்றால் அனைவருக்கும் தெரியும்.

பெருமாள் இராஜாகோபாலனாகவும் தாயார் செங்கலமதாயார் என்பதாகவும் அழைக்கின்றார்கள். இந்த பகுதிக்கு சென்றால் இந்த கோவிலை தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்.  தஞ்சாவூர் பகுதியில் உள்ள கோவில்கள் அனைத்தையும் நீங்கள் சென்று தரிசனம் செய்துவிட்டு வாருங்கள். 

திருவெண்காடு புதன் ஸ்தலம் கண்டிப்பாக சோதிடராக மற்றும் ஆன்மீகவாதியாக இருப்பவர்கள் சென்று வரவேண்டும். அதேப்போல் திருநாகேஸ்வரமும் நீங்கள் பார்க்கவேண்டிய ஸ்தலம்.

பல கோவில்களை நான் தரிசனம் செய்து இருக்கிறேன். அனைத்தையும் மறுமுறை இப்பொழுது தரிசனம் செய்து வருகிறேன்.ஒவ்வொரு கோவிலையும் படம் எடுத்து பதிவில் போடமுடியாது. அதனை நீங்கள் நேரில் சென்று தரிசனம் செய்யும்பொழுது அதன் அற்புதத்தை காணமுடியும்.

பெளர்ணமி அன்று ஏதாவது ஒரு சிவாலயத்திற்க்கு அல்லது ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று வாருங்கள். பெளர்ணமி வழிபாடு மிகவும் நல்லது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை


வணக்கம் நண்பர்களே!
                      இந்த மாதம் அம்மன் பூஜை வரும் 10 தேதிக்குள் நடத்தலாம் என்று திட்டமிட்டுள்ளேன். அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்துபவர்கள் அனுப்பி வையுங்கள். 

ஒவ்வொரு மாதமும் அம்மன் பூஜை உங்களுக்காக சிறப்பான முறையில் நடத்தப்படுகிறது. சிறப்பான முறையில் அம்மன் பூஜை நடத்தப்படுபவதற்க்கு உங்களுக்கு தான் நன்றி சொல்லவேண்டும். நீங்கள் அளிக்கும் நிதி தான் அம்மன் பூஜை நல்ல முறையில் நடைபெறுகிறது. 

பல குடும்பங்கள் அம்மனால் நல்ல முறையில் வளர்ந்து வருகிறார்கள். மேலும் பல குடும்பங்களை காப்பாற்றவேண்டும் என்று அம்மனிடம் நான் தினமும் பிராத்தனை செய்துக்கொண்டு இருக்கிறேன். 

நல்ல வளர்ச்சியை நோக்கி உங்களின் குடும்பங்கள் வளர்ந்து வந்த பிறகு அம்மன் பூஜையில் கலந்துக்கொள்ளுங்கள். வளமான வாழ்வு வந்த பிறகு உங்களை அம்மன் நிச்சயம் கூப்பிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, February 1, 2015

கோவில் தரிசனம்


வணக்கம் நண்பர்களே!
                                 நேற்று திருநள்ளார் சனி பகவான் ,அம்பகரத்தூர் பத்திரகாளி அம்மன், பூம்புகார் பீச்,திருவெண்காடு புதன் ஸ்தலம், கீழ்பெரும்பள்ளம் கேது ஸ்தலம், திருநாகேஷ்வரம் இராகு ஸ்தலம் ஆகியவற்றை தரிசனம் செய்துவிட்டு வந்தேன். இந்த தலங்கள் அனைத்தும் சென்று வருவதற்க்கு எனது குடும்பத்தார்கள் ஏற்பாடு செய்து இருந்தார்கள்.

பொதுவாக நான் கோவில்களுக்கு சென்றால் எனது வழிபாட்டு முறைகள் அனைத்தும் வித்தியாசப்படும். நான் எனது குருவோடு சென்று வந்தால் கோவிலுக்கு உள்ளே சென்று வரமாட்டோம் கோவில் கோபுர தரிசனம் மட்டும் செய்வது உண்டு. குடும்பத்தார்களோடு சென்றதால் கோவிலுக்கு உள்ளே சென்று வந்தேன்.

உங்களுக்கு சொல்ல வந்த விசயத்தை சொல்லவருகிறேன். ஒரே நாளில் நாங்கள் தொடர்ச்சியாக பயணம் செய்து பார்த்துவிட்டு வந்தோம். நன்றாக பாருங்கள் பார்த்துவிட்டு வந்தோம் என்று சொல்லிருக்கிறேன். கோவிலுக்கு நீங்கள் சென்றால் அதுவும் நெடும்தூரம் பயணம் செய்து கோவிலுக்கு சென்று வந்தால் பயண களைப்பு உடலுக்கு ஏற்பட்டுவிடும். கோவிலுக்குள் சென்றால் இந்த களைப்பால் உங்களுக்கு கோவிலின் சக்தி கிடைக்காது.

நான் எனது குருவோடு சென்றால் முதலில் அவர் சொல்லுவது நன்றாக ஒய்வு எடுத்துக்கொள் அதன் பிறகு பார்க்கலாம் என்று சொல்லுவார். நமது உடல் ஒரு இடத்தில் இருந்து அடுத்த இடத்திற்க்கு செல்லும்பொழுது அங்குள்ள இடத்திற்க்கு தகுந்தவாறு மாற்றிக்கொள்வதற்க்கு கொஞ்ச நேரம் எடுக்கும். அந்த நேரத்திற்க்கு வழி செய்துக்கொடுப்பார் குரு. 

ஒவ்வொரு கோவிலிலும் தீர்த்தம் வைத்த இருப்பார்கள். சனிபகவான் கோவிலில் நளதீர்த்த்தில் நீராடிவிட்டு அதன் பிறகு தரிசனம் செய்யுங்கள் என்று சொல்லியுள்ளனர். உங்களின் உடலுக்கு புத்துணர்வு கொடுத்தபிறகு சாமி தரிசனம் செய்யுங்கள் என்று மறைமுகமாக இதனை வைத்துள்ளனர். 

நல்ல குரு ஆன்மீகத்தை கற்றுக்கொடுத்தால் இப்படி தான் செய்வார். உடலுக்கு புத்துணர்வு கொடுத்தபிறகு தான் ஆன்மீகத்தை கொடுப்பார்கள். நீங்களும் கோவிலுக்கு சென்றால் உடலுக்கு ஒய்வு கொடுத்தபிறகு சாமி தரிசனம் செய்யுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு