வணக்கம் நண்பர்களே!
என்னிடம் தொழில் சம்பந்தமாக முன்னேற்றம் அடைவதற்க்கு வரும் நண்பர்கள் பற்றிய பதிவு இது. தொழில் என்று வந்தால் அவர்களிடம் பணம் வாங்குவது கிடையாது. முதலில் உங்களுக்காக ஒன்றை செய்கிறேன். உங்களுக்கு பணம் வந்த பிறகு எனக்கு பணத்தை கொடுங்கள் என்று சொல்லுவேன்.
நீங்கள் செய்ய வேண்டியது தினமும் எனக்கு போன் செய்து என்ன நடக்கிறது என்பதை மட்டும் சொல்லுங்கள் என்று சொல்லுவேன். தினமும் அவர்களுக்கு செலவு என்பது ஒரு ரூபாய் தான் வரும். பெரும்பாலான நண்பர்கள் இதனை செய்யமாட்டார்கள். என்னை வந்து சந்தித்து இரண்டு நாட்களுக்கு போன் செய்வார்கள். அதன் பிறகு அவர்கள் என்னை தொடர்புக்கொள்வது குறைந்துவிடும்.
உண்மையில் அவர்களின் விதி அவர்களை விடுவதில்லை. அவர்களை சுற்றிவிடுகிறது. அதனை மீறி என்னை தொடர்புக்கொள்ள முடிவதில்லை. நானும் கண்டுக்கொள்ளாமல் விட்டுவிடுவது உண்டு.
மனிதனை நாம் குறைச்சொல்லமுடியாது. அவனவன் வாங்கி வந்திருக்கிற கர்மா அப்படிப்பட்டது. அந்த கர்மாவை மீற முடியாமல் தவிக்கின்றார்கள்.மிக குறைந்த நபர்கள் என்ன தான் நடந்தாலும் நடக்கட்டும் என்று விடாமல் பிடித்துக்கொண்டுவிடுவார்கள். அவர்கள் தான் என்னிடம் நல்ல பயன்அடைந்தவர்கள்.
நாம் வெற்றி பெறவேண்டும் என்றால் நமது நிலைமை என்ன என்று நன்றாக புரிந்துக்கொள்ளவேண்டும். நமது ஜாதகத்தின் நிலைமை என்ன என்றும் புரிந்துக்கொள்ளவேண்டும். அதன் பிறகு என்னிடம் வந்து உங்களுக்கு தேவையானவற்றை பெற்றுக்கொள்ளலாம். விதியை புரிந்துக்கொண்டு நடப்பது நல்லது நடக்கும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment