வணக்கம் நண்பர்களே!
ஒவ்வொரு கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் மனிதனும் தன் வாழ்வில் ஏதாவது ஒரு ஏற்றம் வராதா என்று எதிர்பார்ப்போடு ஒவ்வொரு நாளும் வாழ்க்கையை ஒட்டிக்கொண்டு இருக்கின்றான்.
வாழ்வில் ஏற்றத்திற்க்கு வழிபாடு மற்றும் ஆன்மீக விசயங்களில் நாட்டம் செலுத்தி இறை வழியாக ஏற்றத்தை ஏற்படுத்த கடுமையாக போராடுகிறான். இதில் வெற்றி கண்டவர்களும் உண்டு, வெற்றி காணாமல் சென்றவர்களும் உண்டு.
ஒரு சிலர் சும்மா உட்கார்ந்துக்கொண்டு இருப்பார்கள். அவரை அனைவரும் வழியில் போகும்பொழுது பார்க்கலாம். ஒரு சில காலங்களில் அவரை பார்க்க அப்பாயிமெண்ட் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுபட்டுவிடும்.
சும்மா இருப்பவனை மேலே தூக்கிவிடுவதும் மேலே இருப்பவனை கீழே தள்ளிவிடுவதிலும் ஒவ்வொரு மனிதனின் ஜாதகத்தில் உள்ள தசாக்கள் மிகப்பெரிய பங்கு அளிக்கின்றன.
பல்வேறு பதிவுகளில் இதனைப்பற்றி சொல்லிவந்து இருக்கின்றேன். ஒவ்வொரு தசாவாக பார்த்து வந்துக்கொண்டு இருந்தோம். இடையில் உங்களிடம் எந்த தசாவை எழுதலாம் என்று கேட்டேன். அதற்கு பெரும்பாலான நண்பர்கள் சனி தசாவைப்பற்றி எழுதுங்கள் என்று கேட்டார்கள்.
திருநள்ளாருக்கு செல்லாமல் இருந்த என்னை திருநள்ளாருக்கு சென்று தீர்த்தம் ஆடிவிட்டு சனி பகவானை தரிசனம் செய்யும் வாய்ப்பும் இயற்கையாகவே அமைந்தது. சரி இறைவனும் முடிவு செய்துவிட்டார் நாம் சனி தசாவைப்பற்றி எழுதலாம் என்று எழுதஆரம்பித்துவிட்டேன்.
சனி தசாவை இன்று தைபூசம் அன்று தொடங்கலாம் என்று தொடங்கிவிட்டேன்.
நாளை மதியம் திருப்பூர் பயணம் மேற்க்கொள்கிறேன். வியாழன் அன்று திருப்பூர் நண்பர்களை சந்திக்கிறேன். கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் நண்பர்கள் என்னை சந்திப்பதாக இருந்தால் என்னை தொடர்புக்கொள்ளவும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
1 comment:
Ellaam avan seyal.ini sanithasa parri padikka aavalaaka ullom
Post a Comment