Followers

Monday, September 23, 2013

ராகு தசாவில் சில சந்தேகங்கள் & விளக்கம்


வணக்கம் நண்பர்களே !
                     ராகு தசாவை படித்துவிட்டு பல நண்பர்கள் என்னது சித்தர்கள் மந்திரவாதிகள் என்று சொல்லிவிட்டீர்களே என்று கேட்டார்கள். எனது எண்ணத்தை மட்டுமே அதில் சொன்னேனே தவிர வேறு ஒன்றும் இல்லை.

அவர்கள் நல்லது செய்கிறார்கள் அவர்கள் நோயை குணப்படுத்துகிறார்கள் அவர்கள் நல்லது செய்கிறார்களே என்றும் சொல்லுகிறார்கள். மந்திரவாதிகள் என்றால் அவர்கள் தீயவை மட்டும் செய்கின்றவர்கள் என்று அர்த்தம் கிடையாது. அவர்களும் நல்லது செய்வார்கள். உலகில் உள்ள அனைவரும் மந்திரவாதிகள் தான் என்னுடைய தனிப்பட்ட கருத்து ஏன் என்றால் மந்திரவாதிகளின் வேலை தான் வசியப்படுத்துதல். அந்த வசியப்படுத்துதல் மந்திரவாதிகளின் வேலை என்றால் நாம் கோவிலுக்கு செல்லுகிறோம் அல்லது வீட்டில் பூஜை செய்கிறோம் அப்பொழுது ஒரு ஊதுவத்தி அல்லது சாம்பிராணி ஏதாவது ஒரு நறுமணத்தை ஏற்றி வைக்கிறோம். இப்படி செய்வதே ஒரு வசியம் தான். இதனை அனைவரும் செய்கிறார்கள் அவர்களை மந்திரவாதிகளாக நாம் பார்க்கிறோம்.

நீங்கள் கடவுளிடம் எனக்கு மற்றும் எனது குடும்பத்திற்க்கு எனது ஊரில் உள்ளவர்களுக்கு நல்லதை செய் என்று கேட்டால் அது ஆன்மீகம். அதே கடவுளிடம் பக்கத்துவீட்டுக்காரன் அழிந்துபோக வேண்டும் என்று கேட்டால் அது மாந்தீரிகம் என்ற கணக்கில் வரும். 

ஒரு செயல் செய்து நல்லது நடந்தால் அது ஆன்மீகம் கெட்டது நடந்தால் அதனை எதவாது பெயர் சொல்லி அழைக்க வேண்டியது தான். அனைத்தும் பின்னிக்கு கொண்டு ஒன்றோடு ஒன்றாக இணைந்து தான் உள்ளது. பயன்படுத்தும் விதத்தில் தான் அதன் பயன்பாடு இருக்கின்றது. எது செய்தாலும் அந்த செயல் வழியாக நன்மை இருந்தால் நல்லது. கெட்டது நடக்காமல் இருக்க ஆண்டவனை பிராத்திக்க வேண்டியது தான்.

ஆன்மீக உலகத்தில் சென்றால் அங்கு மாந்தீரிகம் இல்லாமல் இருக்காது என்ன வெளியில் சொல்லமாட்டார்கள். செய்வது எல்லாம் மாந்தீரிக வேலை யாக இருக்கும். இன்று நடமாடும் உங்களுக்கு பிடித்த மகான்கள் அனைவரும் பின்புலத்தில் மாந்தீரிகம் செய்யாமல் இருக்கமாட்டார்கள். வெளியில் சொல்லாமல் இருப்பார்கள். அனைத்தும் ரகசியமான முறையில் நடக்கும். இதனை பற்றி தெரிந்ததை தருகிறேன். எனக்கு தெரிந்த விசயங்கள் மட்டுமே உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன். ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் உங்களின் விருப்பம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

ராகு தசா பலன்கள் பகுதி 36


வணக்கம் நண்பர்களே!
                     ராகு தசாவைப்பற்றி பார்த்துவருகிறோம். ராகு தசாவில் ஒரு முக்கியமான தகவலை தரவேண்டும் என்று நினைத்து இருந்தேன். காலையில் அந்த எண்ணம் வந்தது. அதனைப்பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

ராகு நட்சத்திரத்தை உடையவர்கள் மற்றும் ராகு தசா நடப்பவர்கள் பார்த்தால் அவர்கள் சித்தர்கள் மீது அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருக்கின்றார்கள். அவர்களின் தேடுதலில் சித்தர்கள் அதிகமாக இருக்கும். சித்தர்கள் மீது இவர்களுக்கு ஏன் இவ்வளவு ஈடுபாடு வருகின்றது என்று நான் நினைத்தது உண்டு. 

எனக்கு ராகு தசா நடக்கும்பொழுதும் இப்படி தேடுதல் இருந்தது ஆனால் தேடி போக வாய்ப்புவரவில்லை. சித்தர்களை பற்றி நான் தேடும்பொழுது (நெட்டில் தாங்க) அவர்கள் அதிகமாக மூலிகைகளைப்பற்றி ஆராய்ச்சி செய்கிறார்கள் என்று தெரியவந்தது. மூலிகைகளைப்பற்றி ஆராய்ச்சி செய்கிறார்கள் என்றால் இந்த காலத்தில் யார் இதனை ஆராய்ச்சி செய்கிறார்கள் அல்லது பயன்படுத்துகிறார்கள் என்று பார்க்கும்பொழுது இந்த காலத்தில் மாந்தீரிகம் செய்பவர்கள் மூலிகைகளைப்பற்றி ஆராய்ச்சி செய்கிறார்கள் மற்றும் பயன்படுத்துகிறார்கள்.

அந்த காலத்தில் சித்தர்கள் என்பவர்கள் மாந்தீரிகம் வேலை செய்பவர்களாக இருக்ககூடும் என்று என் மனது நினைத்தது. ஏன் என்றால் மாந்தீரிகத்திற்க்கும் ராகுக்கும் ஏகாப்பொருத்தம். இது எனது கணிப்பு தானே தவிர ஆதாரபூர்வமான தகவல் இல்லை.

இன்றைய காலத்தில் சித்தர்கள் பரம்பரை என்று சொல்லிக்கொள்வதில் பெருமைக்கொள்ளும் அனைவரும் என் பார்வையில் இவர்கள் மாந்தீரிகவாதியாக இருப்பார்களோ என்று எனக்கு தோன்றும். ஏன் என்றால் சித்தர்கள் செய்த மை வேலையை இவர்கள் செய்துக்கொண்டு இருக்கிறார்கள். 

அஞ்சனம் செய்வது ரசமணி செய்வது இது எல்லாம் இந்த காலத்தில் உள்ள மாந்தீரிகம் செய்பவர்கள் செய்கிறார்கள். இருவருக்கும் உள்ள தொடர்பை பார்த்தால் அவர்கள தான் இவர்களோ அல்லது இவர்கள் தான் அவர்களோ என்று தோன்றுகிறது.

ராகு தசா நடப்பவர்களுக்கு மற்றும் ராகுவின் நட்சத்திரத்தை உடையவர்கள் அனைவரும் இந்த தொழில் மீது ஈடுபாடு அதிகமான வைத்திருக்கிறார்கள். ராகு தசாவில் ஒருவருக்கு இதன் மீது அதிகஈடுபாடு வரும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Sunday, September 22, 2013

புகழ்ச்சி


 வணக்கம் நண்பர்களே!
                     புதன் கிரகத்தை பொருத்தவரை கொஞ்சம் புகழ்ச்சிக்கு மயங்கும் கிரகம். இந்த புகழ்ச்சியால் தான் பல சோதிடர்களை பார்த்தால் புதனின் புகழ்ச்சி மற்றும் தலைகணம் என்ன என்று தெரியும்.

ஒரு சோதிடபுத்தகத்தை படித்துவிட்டு நான் சோதிடத்தில் பெரிய புலி என்று சொல்லிக்கொண்டு திரிவது. தன் பெயருக்கு பின் சோதிடபுயல் சோதிடசிகாமணி என்ன என்ன இருக்கிறதோ அத்தனையும் சொல்லிக்கொண்டு இருப்பது. இது எல்லாம் புகழ்ச்சி மட்டுமே. இது மாதிரி நீங்கள் செய்துவிடாதீர்கள். உங்களின் சோதிடபலன் நன்றாக இருந்தால் உங்களை தேடி ஆட்கள் வரபோகிறார்கள். பிறகு எதற்கு இந்த மாதிரி பட்டம் எல்லாம். 

தமிழனுக்கு பட்டம் இல்லாமல் வாழமுடியாது என்று நினைக்கிறேன். நடிகர்களில் இருந்து சோதிடர்கள் வரை பட்டத்தோடு தான் திரிகிறார்கள். பல பேர் பார்த்தால் சோதிட ஆராய்ச்சி நிலையம் என்று வைத்துக்கொண்டு சோதிட தொழில் பார்ப்பார்கள். அதில் இதனை கண்டுபிடித்துவிட்டேன். அதனை கண்டுபிடித்துவிட்டேன் என்று சொல்லுவது உண்மையில் இது தேவையற்ற ஒன்று. 

வரும் நபர்கள் கஷ்டத்தில் வருகிறார்கள் அவர்களிடம் நான் இந்த ஆராய்ச்சி செய்துக்கொண்டு இருக்கிறேன் என்று சொல்லுவது வருகின்றவர்களுக்கு நல்லது செய்தால் போதுமான ஒன்று அதனை விட்டுவிட்டு நமது பெருமையை பேசிக்கொண்டு இருப்பதற்கு அல்ல.

சோதிடபட்டத்தை வாங்கிய போட்டோவை எடுத்து அறையில் மாட்டிவைப்பது. இப்பொழுது எல்லாம் பதிவுகளில் அது தான் அவர்களின் முகப்பு பக்கமாகவே பலபேர்க்கு இருக்கின்றது.

இது எல்லாம் வேண்டியதில்லை வரும் மக்களுக்கு நல்லது செய்ய என்ன வழி என்று பார்த்தாலே போதும். கடவுளின் லீலையை கணிக்கும் தொழிலில் இருந்துக்கொண்டு வரும் மக்களுக்கு இடரை நீக்கினால் போதுமான ஒன்று. புகழ்ச்சி வேண்டாம். நீங்களாவது இதனை பின்பற்றுங்கள். உங்களிடம் நிறைய விசயங்கள் இருக்கின்றது என்றால் எந்த ஒரு அடையாளமும் இல்லாமல் உங்களால் இந்த தொழிலில் வெற்றி பெறமுடியும் என்பதை கவனத்தில் கொண்டு செயல்படுங்கள். நம்மால் என்ன செய்யமுடியும் என்று சொன்னால் போதும். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

பணம்


வணக்கம் நண்பர்களே!
                     பல நண்பர்கள் என்னை தொடர்புக்கொண்டு பேசும்பொழுது பல கோடி சம்பாதிக்கவேண்டும் அதற்கு வழி சொல்லுங்கள். எனது ஜாதகத்தில் அதற்கு வழி உண்டா என்று கேட்கிறார்கள். 

எல்லாம் தொழிலுக்கு உதவதால் வந்த கேள்வி இது என்பது அவர்கள் பேசும்பொழுதே தெரிகிறது. அனைவரும் சம்பாதிக்கவேண்டும் என்று நினைப்பது தவறு இல்லை. இன்றைய உலகம் அப்படி மாறிவிட்டது. சும்மா சுற்றிக்கொண்டு இருக்கும் சந்நியாசிகளுக்கும் பணம் என்பது தேவையான ஒன்றாகிவிட்டது. எனக்கும் முதல் முதலில் குரு அறிமுகம் ஆனவுடன் எப்படியும் இவரைவைத்து சம்பாதிக்கவேண்டும் என்று தான் தோன்றியது. பணத்திற்க்கு கஷ்டப்பட்டால் பிறகு என்ன தோன்றும்.

ஒவ்வொருவருக்கும் இந்த ஆசை இருக்கும். ஆசையை செயல்படுத்த வேண்டும். ஆசைப்பட்டுக்கொண்டு இருந்தால் மட்டும் போதாது அதனை செயல்படுத்த என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்யவேண்டும். ஒரு தொழில் கூட இல்லாமல் ஆசைப்பட்டால் என்ன செய்வது. முதலில் ஒரு தொழிலை உருவாக்கவேண்டும். பிறகு படிப்படியாக முன்னேற்றம் கண்டு அந்த தொழிலில் வெற்றி பெறவேண்டும்.

தொழிலே இல்லாமல் கோடி சம்பாதிக்கவேண்டும் என்றால் என்ன செய்யமுடியும்.அனைவராலும் தொழிலில் வெற்றி பெறமுடியும். அவர்களின் ஜாதகத்தில் கிரகநிலைகளை நன்றாக அலசி அதற்கு தகுந்தார்போல் தொழிலை தேர்ந்தெடுக்க வேண்டும்.

உங்களுக்கு சோதிடம் தெரியும். சோதிடத்தில் பல கிரகங்கள் நல்லதும் செய்கிறது தீயதும் செய்கிறது. தீய கிரகங்களின் தாக்கத்தை குறைத்தால் ஒருவர் செய்யும் தொழில் வெற்றி பெற்றுவிடும். நாம் ஏதாவது ஒரு தெய்வத்தை வணங்கிக்கொண்டு வருவோம். அப்படி வணங்கி வருவதால் ஒரளவு மட்டுமே தீயகிரகங்களின் தாக்கம் குறையும். அதுவும் குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு அது மீண்டும் வேலையை காட்ட தொடங்கிவிடும்.

ஜாதகத்தின் துணையோடு தான் ஒருவரை நிறுத்தமுடியும் என்று எனது குருநாதரும் சொல்லுவார். ஏன் என்றால் ஜாதகம் இல்லாமல் எதுவும் செய்யமுடியாது. ஜாதகத்தை எடுத்துவிட்டால் அதில் பல வழிகள் நமக்கு கிடைத்துவிடும். அதன் பிறகு நாமே அதனை சரிசெய்துவிடமுடியும். அவர் செய்கின்ற தொழிலில் அவர் தான் மிகப்பெரிய ஆளாக இருப்பார்.

நான் இன்று பலபேர்க்கு செய்துக்கொடுத்துக்கொண்டிருப்பதால் மட்டுமே அவர்கள் நிற்கமுடிகிறது. அப்படி இல்லை என்றால் அவர்களின் தொழில் என்றோ இழுத்து மூடிவிட்டு சென்று இருப்பார்கள்.

இந்தியாவில் இருக்கும் தொழில்நடக்கும் இடங்களுக்கு நான் எடுத்த ஒவ்வொரு தொழிலையும் நான் இன்று அடிக்கடி சென்று பார்த்து வந்துக்கொண்டு இருக்கிறேன். ஏன் என்றால் அப்பொழுது மட்டுமே அம்மனின் பார்வை அங்குவிழும் மற்றும் குருவின் பார்வை அங்கு விழும் என்பதால் அப்படி செய்வது உண்டு. 

வெளிநாட்டு தொழில்களை நான் எடுத்தது எல்லா நபர்களிடமும் அவர்களின் தொழிற்சாலையை போட்டு எடுத்து அனுப்ப சொல்லி நான் பார்த்துவிட்டு எனது குருநாதரிடம் காட்டியுள்ளேன்.

ஒரு தொழிலை எடுத்துவிட்டால் மிகச் சரியாக நடக்கவேண்டும் என்பதில் அதிக அக்கறை காட்டுவேன். அதனால் தான் இன்று என்னை பல தொழில்அதிபர்கள் தேடி வருகிறார்கள். அவர்கள் தூங்கினாலும் நான் தூங்குவதில்லை.

நான் ஏழையாக இருந்து பல கஷ்டப்பட்டு இந்த தொழிலை தொடங்கியுள்ளேன் எப்படியும் என்னை உயர்த்துங்கள் என்று வாருங்கள் உங்களை மிகப்பெரிய அளவில் உயர்த்திவிடுகிறேன். நான் எப்படி நடந்துக்கொள்கிறோனோ அதேபோல் நீங்களும் நடந்துக்கொள்ளவேண்டும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Saturday, September 21, 2013

ராகு தசா பலன்கள் பகுதி 35


வணக்கம் நண்பர்களே!
                    ராகு தசாவைப்பற்றி பார்த்துவருகிறோம். ராகு தசாவில் அடுத்ததாக புதன் புத்தியை நாம் பார்ப்போம். 

ராகு ஏற்கனவே மிகப்பெரிய சிக்கலை எல்லாம் கண்டுபிடித்து கொடுப்பான் மிகச்சிறந்த தந்திரமூளையை தருபவன். இதில் புதன் சேர்ந்தால் எப்படி இருக்கும். புதனும் சிறந்த புத்திமான். மூளையின் பலம் அதிகமாக இருக்கும். எந்த செயலையும் எளிதில் முடித்துவிட்டு வந்துவிடுவான்.

இந்த புத்தி முழுவதும் மூளையின் பலத்தோடு சேர்ந்து செயலை செய்வதால் அதிகமாக புத்தியை வைத்து செயல் நடைபெறும். இருவரும் ஏடாகூடாமாக இருந்தால் மிகசிறந்த முறையில் கம்யூட்டரில் பிறரை ஏமாற்றி சம்பாதித்துவிடுவார்கள்.நெட்டில் திருகிறார்கள் அல்லவா அது எல்லாம் இந்த மாதிரி தசாவில் மட்டுமே அதிகபடியான சாத்தியம் இருக்கும்.

புதன் பத்திரிக்கைக்கு காரணம் வகிப்பதால் நெட்டில் நம்ம மாதிரி பதிவு எல்லாம் வெளியிடுவார்கள். வெளிநாட்டு தொடர்புகள் அதிகமாக இருக்கும். இவர்களை போற்றி புகழ்வார்கள். ராகு வெளிநாட்டு மக்களை குறிப்பிடுவதால் வெளிநாட்டு தொடர்புகளை ஏற்படுத்தி தருவார்.

புதன் கல்விக்கு காரகம் வகிப்பதால் வெளிநாட்டு கல்வி படிப்பதற்க்கு வெளிநாடு செல்லும் யோகம் இந்த புத்தியில் நடைபெறும். படிப்பதற்க்காக மடடுமே இந்த தசாவில் வெளிநாடு செல்வார்கள்.

பொதுவாக ராகு தசாவில் திருமணம் தடைபடும் ஆனால் புதன் நன்றாக இருக்கும் பட்சத்தில் அந்த ஜாதகருக்கு ராகு தசாவின் புதன் புத்தியில் திருமணம் நடைபெறும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

ஆன்மீக அனுபவங்கள் 115


வணக்கம் நண்பர்களே!
                     என்னுடைய வாடிக்கையாளர் ஒருவரை நீங்கள் சந்நியாசிகளிடம் சென்று ஆசி வாங்கி வாருங்கள் என்று சொல்லிருந்தேன். அவர் பல மாதங்கள் சென்ற பிறகு என்னை வந்து சந்தித்து பேசினார். 

நீங்கள் சொன்னபடி பல இடங்களில் சாமியாரை தேடி அழைந்தேன். யாரிடமும் ஆசி வாங்கவில்லை என்றார். நான் ஏன் என்று கேட்டதற்க்கு அவர் சாமியார்கள் யார் நல்லவர் யார் கெட்டவர் என்று தெரியவில்லை என்றார். நான் அவரிடம் ஏன் சாமியாருக்கு பெண் எதுவும் கொடுக்கபோகிறீர்களா என்று கேட்டேன். அதற்கு அவர் இல்லை என்றார்.

பல பேர்கள் இப்படி தான் இருக்கிறார்கள். ஒரு மனிதனை அதிகப்பட்சமாக சோதிப்பது எப்பொழுது என்றால் ஒருவனுக்கு பெண் கொடுக்கும்பொழுது மட்டுமே. இந்த காலத்தில் இந்த விசயத்தில் கூட அதிகம் விசாரிக்காமல் ஏமாந்துவிடுகிறார்கள். ஒரு ஆசி வாங்கிகிட்டு வருவதற்க்கு இந்த சோதனை தேவையா? அவன் நல்லவனாக இருக்கிறான் கெட்டவனாக இருக்கிறான். இவர்க்களுக்கு தேவை எதுவோ அதனை செய்யவேண்டும்.

அதனை விட்டுவிடுவது அவனை பற்றி விசாரித்துக்கொண்டு இருப்பது. சாமியார்களும் மனிதர்கள் தான். நமக்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல அவர்களுக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. ஒவ்வொரு மனிதனின் சுதந்திரத்தில் நாம் தலையிடகூடாது. அவர்களும் மனிதர்கள் தான் என்ன அதனை அவர்கள் முழுவேலையாக செய்கிறார்கள் அது மட்டும் தான் நமக்கும் அவர்களுக்கும் உள்ள வித்தியாசம்.

அவர்களிடம் சென்றால் நமக்கு என்ன காரியம் சாதிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் மட்டும் இருந்துக்கொண்டு காரியத்தை சாதித்துவிட்டு வந்துவிடவேண்டும். அவர்களோடு குடும்பம் நடத்துவது போல் விசாரித்தால் ஒருவர் கூட உங்களுக்கு மாட்டமாட்டார்கள்.

அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் நாம் தலையிடகூடாது. அவர்களை தேடி நாம் தான் போகின்றோம். அவர்களிடம் என்ன வேண்டுமே அதனை கேட்டுவிட்டு வந்துவிடவேண்டும். அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை தேடுவதற்க்கு நமக்கு எந்த உரிமையும் கிடையாது. அவர்களின் தனி்ப்பட்ட வாழ்க்கையில் அவர்கள் நல்லவர்களாக இருந்தால் என்ன தீயவர்களாக இருந்தால் என்ன. ஏன் என்றால் நாம் அவர்களுடன் தொடர்பு வைத்திருக்கும் காலம் வெகுகுறைவு. அப்படி இருக்கும்பட்சத்தில் ஏன் நாம் அவர்களை பற்றி விசாரித்து நமது நேரத்தை ஏன் வீண் செய்யவேண்டும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

புரட்டாசி சனி


வணக்கம் நண்பர்களே!
                     இன்று புரட்டாசி சனிக்கிழமை பெருமாள்க்கு உகந்த நாள்.இன்று விரதம் இருந்து பெருமாளை வணங்குங்குவார்கள். 

வைணவத்தில் ஒரு சில ஆன்மீகவாதிகள் எனக்கு நல்ல பழக்கம் என்பதால் அவர்களின் போதனைகள் வழிகள் சொல்லிதந்ததால் பெருமாளைபற்றியும் ஈடுபாடு அதிகம். இன்றைய நாளில் நாம் விரதம் இருந்ததால் நமக்கு செல்வ செழிப்பை பெற்று தருவார் பெருமாள். புரட்டாசி மாதம் ஒருவர் விரதம் இருந்தால் அவர்க்கு பெருமாளின் அன்புக்கு பாத்திரமாகலாம்.

ஒருவர் புரட்டாசி விரதம் பிடித்தால் அந்த நபர்கள் மிகுந்த ஆச்சாரத்துடன் இருக்கவேண்டும். ஏதோ நானும் விரதம் இருக்கின்றேன் என்று இருக்ககூடாது. எந்தளவுக்கு நாம் சிரத்தையுடன் விரதம் இருக்கின்றமோ அந்தளவுக்கு நமக்கு பலன் கிடைக்கும்.

சிவன் ஒருவன் மீது அன்பை செலுத்திவிட்டால் அவனை கடைசி வரை விடமாட்டார். அன்பை செலுத்த கொஞ்ச நாட்கள் ஆகும் அவ்வளவு தானே ஒழிய அன்பை செலுத்திவிட்டால் அவனிடமே இருப்பார். 

பெருமாள் ஒருவன் மீது அன்பை செலுத்தினாலும் அவன் கடைசிவரை பெருமாள் மீது நம்பிக்கையுடன் இருக்கவேண்டும். கொஞ்சம் பெருமாளை சந்தேகப்பட்டாலும் அவர் வரமாட்டார். நீங்கள் பிடிக்கும் விரதமும் இந்த மாதிரி தான். பெருமாள் நேரில் வருகிறார் என்று நீங்கள் நினைத்து விரதம்மேல் நம்பிக்கை வைத்து இருக்கவேண்டும். பெருமாள் உங்களுக்கு அனைத்தையும் தருவார்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.