வணக்கம் நண்பர்களே !
ராகு தசாவை படித்துவிட்டு பல நண்பர்கள் என்னது சித்தர்கள் மந்திரவாதிகள் என்று சொல்லிவிட்டீர்களே என்று கேட்டார்கள். எனது எண்ணத்தை மட்டுமே அதில் சொன்னேனே தவிர வேறு ஒன்றும் இல்லை.
அவர்கள் நல்லது செய்கிறார்கள் அவர்கள் நோயை குணப்படுத்துகிறார்கள் அவர்கள் நல்லது செய்கிறார்களே என்றும் சொல்லுகிறார்கள். மந்திரவாதிகள் என்றால் அவர்கள் தீயவை மட்டும் செய்கின்றவர்கள் என்று அர்த்தம் கிடையாது. அவர்களும் நல்லது செய்வார்கள். உலகில் உள்ள அனைவரும் மந்திரவாதிகள் தான் என்னுடைய தனிப்பட்ட கருத்து ஏன் என்றால் மந்திரவாதிகளின் வேலை தான் வசியப்படுத்துதல். அந்த வசியப்படுத்துதல் மந்திரவாதிகளின் வேலை என்றால் நாம் கோவிலுக்கு செல்லுகிறோம் அல்லது வீட்டில் பூஜை செய்கிறோம் அப்பொழுது ஒரு ஊதுவத்தி அல்லது சாம்பிராணி ஏதாவது ஒரு நறுமணத்தை ஏற்றி வைக்கிறோம். இப்படி செய்வதே ஒரு வசியம் தான். இதனை அனைவரும் செய்கிறார்கள் அவர்களை மந்திரவாதிகளாக நாம் பார்க்கிறோம்.
நீங்கள் கடவுளிடம் எனக்கு மற்றும் எனது குடும்பத்திற்க்கு எனது ஊரில் உள்ளவர்களுக்கு நல்லதை செய் என்று கேட்டால் அது ஆன்மீகம். அதே கடவுளிடம் பக்கத்துவீட்டுக்காரன் அழிந்துபோக வேண்டும் என்று கேட்டால் அது மாந்தீரிகம் என்ற கணக்கில் வரும்.
ஒரு செயல் செய்து நல்லது நடந்தால் அது ஆன்மீகம் கெட்டது நடந்தால் அதனை எதவாது பெயர் சொல்லி அழைக்க வேண்டியது தான். அனைத்தும் பின்னிக்கு கொண்டு ஒன்றோடு ஒன்றாக இணைந்து தான் உள்ளது. பயன்படுத்தும் விதத்தில் தான் அதன் பயன்பாடு இருக்கின்றது. எது செய்தாலும் அந்த செயல் வழியாக நன்மை இருந்தால் நல்லது. கெட்டது நடக்காமல் இருக்க ஆண்டவனை பிராத்திக்க வேண்டியது தான்.
ஆன்மீக உலகத்தில் சென்றால் அங்கு மாந்தீரிகம் இல்லாமல் இருக்காது என்ன வெளியில் சொல்லமாட்டார்கள். செய்வது எல்லாம் மாந்தீரிக வேலை யாக இருக்கும். இன்று நடமாடும் உங்களுக்கு பிடித்த மகான்கள் அனைவரும் பின்புலத்தில் மாந்தீரிகம் செய்யாமல் இருக்கமாட்டார்கள். வெளியில் சொல்லாமல் இருப்பார்கள். அனைத்தும் ரகசியமான முறையில் நடக்கும். இதனை பற்றி தெரிந்ததை தருகிறேன். எனக்கு தெரிந்த விசயங்கள் மட்டுமே உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன். ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் உங்களின் விருப்பம்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment