வணக்கம் நண்பர்களே!
இன்று புரட்டாசி சனிக்கிழமை பெருமாள்க்கு உகந்த நாள்.இன்று விரதம் இருந்து பெருமாளை வணங்குங்குவார்கள்.
வைணவத்தில் ஒரு சில ஆன்மீகவாதிகள் எனக்கு நல்ல பழக்கம் என்பதால் அவர்களின் போதனைகள் வழிகள் சொல்லிதந்ததால் பெருமாளைபற்றியும் ஈடுபாடு அதிகம். இன்றைய நாளில் நாம் விரதம் இருந்ததால் நமக்கு செல்வ செழிப்பை பெற்று தருவார் பெருமாள். புரட்டாசி மாதம் ஒருவர் விரதம் இருந்தால் அவர்க்கு பெருமாளின் அன்புக்கு பாத்திரமாகலாம்.
ஒருவர் புரட்டாசி விரதம் பிடித்தால் அந்த நபர்கள் மிகுந்த ஆச்சாரத்துடன் இருக்கவேண்டும். ஏதோ நானும் விரதம் இருக்கின்றேன் என்று இருக்ககூடாது. எந்தளவுக்கு நாம் சிரத்தையுடன் விரதம் இருக்கின்றமோ அந்தளவுக்கு நமக்கு பலன் கிடைக்கும்.
சிவன் ஒருவன் மீது அன்பை செலுத்திவிட்டால் அவனை கடைசி வரை விடமாட்டார். அன்பை செலுத்த கொஞ்ச நாட்கள் ஆகும் அவ்வளவு தானே ஒழிய அன்பை செலுத்திவிட்டால் அவனிடமே இருப்பார்.
பெருமாள் ஒருவன் மீது அன்பை செலுத்தினாலும் அவன் கடைசிவரை பெருமாள் மீது நம்பிக்கையுடன் இருக்கவேண்டும். கொஞ்சம் பெருமாளை சந்தேகப்பட்டாலும் அவர் வரமாட்டார். நீங்கள் பிடிக்கும் விரதமும் இந்த மாதிரி தான். பெருமாள் நேரில் வருகிறார் என்று நீங்கள் நினைத்து விரதம்மேல் நம்பிக்கை வைத்து இருக்கவேண்டும். பெருமாள் உங்களுக்கு அனைத்தையும் தருவார்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment