வணக்கம் நண்பர்களே!
என்னுடைய வாடிக்கையாளர் ஒருவரை நீங்கள் சந்நியாசிகளிடம் சென்று ஆசி வாங்கி வாருங்கள் என்று சொல்லிருந்தேன். அவர் பல மாதங்கள் சென்ற பிறகு என்னை வந்து சந்தித்து பேசினார்.
நீங்கள் சொன்னபடி பல இடங்களில் சாமியாரை தேடி அழைந்தேன். யாரிடமும் ஆசி வாங்கவில்லை என்றார். நான் ஏன் என்று கேட்டதற்க்கு அவர் சாமியார்கள் யார் நல்லவர் யார் கெட்டவர் என்று தெரியவில்லை என்றார். நான் அவரிடம் ஏன் சாமியாருக்கு பெண் எதுவும் கொடுக்கபோகிறீர்களா என்று கேட்டேன். அதற்கு அவர் இல்லை என்றார்.
பல பேர்கள் இப்படி தான் இருக்கிறார்கள். ஒரு மனிதனை அதிகப்பட்சமாக சோதிப்பது எப்பொழுது என்றால் ஒருவனுக்கு பெண் கொடுக்கும்பொழுது மட்டுமே. இந்த காலத்தில் இந்த விசயத்தில் கூட அதிகம் விசாரிக்காமல் ஏமாந்துவிடுகிறார்கள். ஒரு ஆசி வாங்கிகிட்டு வருவதற்க்கு இந்த சோதனை தேவையா? அவன் நல்லவனாக இருக்கிறான் கெட்டவனாக இருக்கிறான். இவர்க்களுக்கு தேவை எதுவோ அதனை செய்யவேண்டும்.
அதனை விட்டுவிடுவது அவனை பற்றி விசாரித்துக்கொண்டு இருப்பது. சாமியார்களும் மனிதர்கள் தான். நமக்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல அவர்களுக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. ஒவ்வொரு மனிதனின் சுதந்திரத்தில் நாம் தலையிடகூடாது. அவர்களும் மனிதர்கள் தான் என்ன அதனை அவர்கள் முழுவேலையாக செய்கிறார்கள் அது மட்டும் தான் நமக்கும் அவர்களுக்கும் உள்ள வித்தியாசம்.
அவர்களிடம் சென்றால் நமக்கு என்ன காரியம் சாதிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் மட்டும் இருந்துக்கொண்டு காரியத்தை சாதித்துவிட்டு வந்துவிடவேண்டும். அவர்களோடு குடும்பம் நடத்துவது போல் விசாரித்தால் ஒருவர் கூட உங்களுக்கு மாட்டமாட்டார்கள்.
அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் நாம் தலையிடகூடாது. அவர்களை தேடி நாம் தான் போகின்றோம். அவர்களிடம் என்ன வேண்டுமே அதனை கேட்டுவிட்டு வந்துவிடவேண்டும். அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை தேடுவதற்க்கு நமக்கு எந்த உரிமையும் கிடையாது. அவர்களின் தனி்ப்பட்ட வாழ்க்கையில் அவர்கள் நல்லவர்களாக இருந்தால் என்ன தீயவர்களாக இருந்தால் என்ன. ஏன் என்றால் நாம் அவர்களுடன் தொடர்பு வைத்திருக்கும் காலம் வெகுகுறைவு. அப்படி இருக்கும்பட்சத்தில் ஏன் நாம் அவர்களை பற்றி விசாரித்து நமது நேரத்தை ஏன் வீண் செய்யவேண்டும்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment