Followers

Saturday, October 31, 2015

பொறுமை


வணக்கம்!
         இரண்டு நாட்களாக வேலை அதிகம் இருந்த காரணத்தால் உங்களுக்கு பதிவை தரமுடியவில்லை. வெற்றி அடைந்த ஒவ்வொருரின் குணத்தையும் பார்க்கும்பொழுது அவர்களுக்கு அதிகமான பொறுமை இருந்து இருக்கின்றது. நீண்ட நாட்கள் இதற்காகவே காத்துக்கொண்டு இருந்திருக்கிறார்கள். 

நமது ஆத்மாவில் படிந்துள்ள விசயத்தை தான் நாம் எதிர்நோக்கி செல்கிறோம் அப்படி ஆத்மாவில் படிந்த ஒரு விசயத்தை எதிர்நோக்கும்பொழுது பொறுமையாக அதனை நாம் கையாண்டால் கண்டிப்பாக நமக்கு வெற்றி கிடைத்துவிடும்.

ஒருவருக்கு ஏதோ ஒரு துறையில் முன்னேற்றம் ஏற்படவேண்டும் என்று நினைத்து அதற்கு வேலை செய்துக்கொண்டு இருக்கிறார் என்றால் அந்த துறையில் அவருக்கு பொறுமை இருந்திருந்தால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்.

பூர்வபுண்ணியம் இந்த துறை என்பதை உங்களுக்கு கொடுத்துவிட்டது. பெற்ற துறையில் இருந்து வெற்றி பெறுவதற்க்கு பாக்கியஸ்தானம் கொடுக்கவேண்டும். பொறுமையாக அதனை நாம் பிடித்துக்கொண்டே இருந்திருந்தால் கண்டிப்பாக நமக்கு வெற்றி கிடைத்துவிடும்.

ஒரு சிலர் வயது அதிகம் இருந்தால் கூட அவர்களால் பொறுமையாக இருக்கமுடிவதில்லை. ஏதாவது அவசரப்பட்டு செய்து சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள் இதுவும் அவர்களுக்கு கொடுத்த பாக்கியம் தான் என்று சொல்லவேண்டும்.

ஒரு சிலருக்கு பாக்கியஸ்தானத்தில் செவ்வாய் அமர்ந்திருக்கும் அந்த நபர்கள் பொறுமையிழந்து வெற்றி பெறுவதில்லை. எடுத்தோம் கவிழ்த்தோம் என்பது போல் நடப்பார்கள்.

உங்களின் ஜாதகத்தில் எந்த கிரகம் அமர்ந்திருந்தாலும் நீங்கள் கொஞ்சம் பொறுமையாக அமைதி காக்கும்பொழுது உங்களுக்கு கண்டிப்பாக வெற்றி கிடைத்துவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, October 28, 2015

பாக்கியஸ்தானத்தை பலப்படுத்த


வணக்கம்!
          பாக்கியஸ்தானத்தில் சொல்லப்படும் கருத்துக்கள் பொதுவாகவே ஆன்மீக சம்பந்தப்பட்ட காரியங்களாக இருக்கும். ஆன்மீகசம்பந்தப்பட்ட காரியங்கள் எதனை வேண்டுமானாலும் நீங்கள் செய்து பாக்கியஸ்தானத்தை பலப்படுத்திக்கொள்ளலாம்.

என்னிடம் வந்து தான் இதற்கு தீர்வு காணவேண்டும் என்பதில்லை என்னிடம் வந்தால் பணம் கேட்பேன். உங்களால் முடிந்தளவு ஆன்மீக காரியங்களில் ஈடுபட்டு இந்த வீட்டை பலப்படுத்திக்கொள்ளமுடியும் என்று பல பதிவுகளில் சொல்லிவருகிறேன். ஆன்மீகத்தில் ஒவ்வாெருவருக்கும் ஒவ்வொரு மார்க்கம் இருக்கும் அந்த மார்க்கத்தில் கடைபிடித்து செய்துக்கொள்ளலாம்.

ஒரு முஸ்லீம் இதனை படித்துவிட்டு பாக்கியஸ்தானத்தை பலப்படுத்த வேண்டும் என்று அவர் நினைக்கிறார் என்றால் அவரின் மார்க்கத்தில் ஆன்மீக வழியில் என்ன சொல்லியுள்ளார்களோ அதனை செய்துக்கொள்ளலாம். 

ஆன்மீகவழியில் செய்யமுடியாது எனக்கு ஆன்மீகம் பிடிக்காது என்று நினைப்பவர்கள் தாராளமாக மக்களுக்கு சேவை செய்யலாம். மக்களுக்கு சேவை செய்து அவர் நல்லதை பெறலாம். சும்மா இருப்பதை விட ஏதோ நல்லதை செய்யலாம்.

ஒரு சிலருக்கு இது எதுவும் செய்யாமல் கூட நல்லது நடக்கும். அது அவர் பெற்ற பாக்கியம் என்று இருக்கவேண்டியது தான். எதுவும் நடக்கவில்லை என்று இருப்பவர்கள் செய்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, October 27, 2015

பாக்கியஸ்தானம்


வணக்கம்!
          பாக்கியஸ்தானம் எந்தளவுக்கு பயன்படுகிறது என்பதை நான் என்னுடைய அனுபவத்தில் பலருக்கு பார்த்து இருக்கிறேன். தொழில் செய்பவர்கள் வரும்பொழுது அவர்களுக்கு நிறைய பரிகாரம் செய்வது உண்டு. பரிகாரம் செய்யும் நேரத்தில் பூர்வபுண்ணிய வீடும் பாக்கியஸ்தானமும் தான் அதிகம் எங்களுக்கு தேவைப்படும்.

முன் செய்த புண்ணியம் எல்லாம் எந்த ஜென்மத்தில் வருகின்றது என்பது தெரியாது. இந்த ஜென்மத்திலேயே அனைத்தும் வந்துவிடாது. ஒருவர் ஆசைப்பட்டு எனக்கு இப்படி வேண்டும் அல்லது இப்படிப்பட்ட வாழ்க்கை அமையவேண்டும் என்று கேட்கும்பொழுது அவர்களின் பூர்வபுண்ணிய கணக்கில் என்ன இருக்கின்றது என்பதை பார்த்து அதில் இருந்து தான் எடுத்து இந்த வாழ்க்கைக்கு சரி செய்வோம்.

சூட்சம வேலை தான் இது எல்லாம். எந்த வேலையாக இருந்தாலும் அது ஜாதகத்தை வைத்து செய்யப்படும்பொழுது நல்ல நிரந்தர தீர்வாக அமையும். பாக்கியஸ்தானம் மிக மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஜாதகத்தை வைத்து பாக்கியஸ்தானம் கொடுப்பது போல் செய்வது தான் அதிகம் நடக்கும்.

ஒருவர் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கின்றார் என்றால் அவர் முன்ஜென்மத்தில் பாவம் மட்டும் தான் செய்துக்கொண்டிருப்பார் என்பது இல்லை. முன்ஜென்மத்தில் நல்லதும் செய்து இருப்பார். இந்த ஜென்மத்திற்க்கு ஏதாவது ஒரு காரணத்திற்க்காக வராமல் இருக்கும். அதற்கு நாம் வழி செய்துவிட்டால் மிக உயர்ந்த வாழ்க்கையை வாழமுடியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, October 26, 2015

பெளர்ணமி


வணக்கம்!
          அன்றாடம் ஏதாவது ஒரு ரூபத்தில் பிரச்சினை நம்மை துரத்திக்கொண்டே இருக்கும். பிரச்சினை இல்லாமல் வாழ்க்கை செல்லுகின்றது என்றால் அது மிக குறைந்த அளவில் உள்ளவர்களுக்கே என்று சொல்லிவிடலாம்.

பிரச்சினை தினமும் வந்துக்கொண்டே இருக்கின்றது அதில் இருந்து மீள்வதற்க்கு தினமும் ஐந்து வேளை தொழுவுங்கள் என்று சொன்னால் நீங்கள் கேட்பீர்களா மாதத்திற்க்கு ஒரு முறையாவது அல்லது இருமுறை வணங்கினால் போதும் என்று தான் நினைப்பீர்கள்.

ஒரு சிலர் வருடத்திற்க்கு ஒரு முறை கடவுளை வணங்கினால் பாேதும் என்று கூட நினைப்பார்கள். மனிதன் அவ்வளவு சோம்பேறியாக மாறிவிட்டான். வணங்கவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நேரம் இல்லை என்று சொல்லிவிடுவார்கள்.

ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி அன்று ஏதோ ஒரு வழிபாட்டை செய்து வந்தால் போதும். ஒன்று குலதெய்வத்திற்க்கு பச்சைப்பரப்புதல் செய்து வாருங்கள் அல்லது பெளர்ணமி அன்று கிரிவலம் செய்து வாருங்கள்.

கிரிவலம் செல்ல திருவண்ணாமலை மட்டும் தான் செல்லவேண்டும் என்பதில்லை உங்களின் ஊரில் உள்ள சிவலாயத்திலேயே இதனை செய்யலாம். உங்களின் குலதெய்வத்தின் கோவிலுக்கு சென்று வரலாம். பெளர்ணமி அன்று வீட்டில் குலதெய்வத்திற்க்கு பச்சை பரப்புதலை செய்து வந்தால் உங்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்பட்டுவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, October 25, 2015

அன்னாபிஷேகம்


வணக்கம்!
          உலகத்திற்க்கு உள்ள ஜீவராசிகளுக்கு எல்லாம் சிவன் உணவை படைத்த நாளாக ஐப்பசி பெளர்ணமியை சொல்லுவார்கள். உலகத்தில் உள்ள உயிர்களுக்கு கருணை வடிவமான சிவன் உணவை படைத்த நாளில் சிவன் கோவிலில் உள்ள லிங்கத்திற்க்கு அன்னாபிஷேகம் செய்வார்கள். அமுது படைக்கும் அந்த ஆண்டவனுக்கே அமுது படைக்கும் விழா தான் அன்னாபிஷேகம்.

அன்னாபிஷேகம் நடைபெறும் சிவன் கோவிலுக்கு நம்மால் முடிந்த ஒரு சிறிய உதவியாவது செய்யும்பொழுது அந்த சிவன் மகிழ்ந்து நமக்கு நல்ல அருளை தருவார். அன்னாபிஷேகத்திற்க்கு அரிசி காய்கறி என்று வாங்கிக்கொடுக்கலாம். இதனை வாங்கிக்கொடுக்கமுடியவில்லை என்றாலும் பணஉதவியை செய்து தரலாம்.

அன்னாபிஷேகத்தன்று எம்பெருமானின் மேனியிலே சாற்றப்படுகின்ற ஒவ்வொரு பருக்கை அன்னமும் ஒரு சிவலிங்கம் என்பார்கள், எனவே அன்று சிவதரிசனம் செய்தால் கோடி சிவதரிசனம் செய்வதற்கு சமம். 

நாம் கொடுக்கின்ற அரிசி பல சிவலிங்கங்களாக உருவாகின்றது. கடவுளை உணவாக உண்கிறான் என்று ஒரு சிலர் சொல்லுவார்கள். அது எல்லாம் நம்ம மதத்தில் தான் இருக்கின்றது செயலிலும் நடைபெறுகின்றது. அன்னத்தை இரண்டாம் காலபூஜை (8:30 pm) முடிந்தபிறகு பக்தர்களுக்கு கொடுப்பார்கள். பக்தர்களுக்கு மட்டும் இல்லை அதனை நீர் நிலைகள் உள்ள இடங்களுக்கும் சென்று உயிரினங்களுக்கு கொடுப்பார்கள்.

27/10/2015  செவ்வாய்கிழமை சிவன் கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. அதற்கு உங்களின் பங்களிப்பை உங்களுக்கு அருகில் இருக்கும் சிவன் கோவிலுக்கு செலுத்துங்கள் அல்லது மாலை நேரத்தில் சிவன் காேவிலுக்கு சென்று அன்னாபிஷேகத்தில் இருக்கும் ஆண்டவரை தரிசனம் செய்துவிட்டு வாருங்கள். கோவில் பக்கமே செல்லாதவர்கள் கூட ஒரு முறை சென்று தரிசனம் செய்து பாருங்கள்.

வருடத்திற்க்கு ஒரு முறை மட்டுமே அன்னாபிஷேகத்தில் சிவனை தரிசனம் செய்ய முடியும். வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

பரிகாரம்


வணக்கம்!
          சோதிடர்களை தேடி வருகின்றார்கள் என்றால் சும்மா வருவதில்லை. ஏதோ ஒரு பிரச்சினையில் மாட்டிக்கொண்டு அதில் இருந்து மீண்டு வருவதற்க்கு தான் வருகின்றார்கள். நான் பழைய காலத்தில் ஏதாவது செய்வது போல் செய்வார் என்றும் பல நண்பர்கள் என்னை அணுகுவது உண்டு.

இன்றைய காலத்தில் நாம் ஏதாவது செய்துவிட்டு பிறகு பணத்தை வாங்கிக்கொள்ளலாம் என்று நினைத்தால் ஏமாறுவது நானாக தான் இருக்கும். அவர்கள் பணம் தரவேண்டும் என்று தான் நினைக்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு கொடுப்பதற்க்கு நேரம் இருப்பதில்லை.

கடன்பட்டவர்களுக்கு கடனை அடைக்க நான் வழி செய்து கொடுத்தால் அவர்கள் சொல்லுவது நான் வாங்கிய பணத்தை எல்லாம் கடனுக்கே கொடுத்துவிட்டேன். உங்களுக்கு பிறகு தருகிறேன் என்று சொல்லுவார்கள். 

ஒரு சிலரிடம் அன்றைய தேதிக்கு அன்றாட செலவுக்கு கூட இல்லாமல் என்னை சந்திப்பவர்கள் உண்டு. இந்த நிலைமையில் நீங்கள் செய்யவேண்டியது கோவிலாக பார்த்து அலைந்து அதில் இருந்து மீண்டு வாருங்கள் என்பதை சொல்லிவிடுவேன் அந்த நிலையில் இருந்து மீண்டு வருவதற்க்கு கோவிலுக்கு சென்று வழிபடுவதை தவிர வேறு வழி இருக்கமுடியாது.

பணம் இல்லாமல் பணத்தை சம்பாதிப்பது என்பது கடினமான ஒன்று. பணத்தை கொடுத்து தான் பரிகாரம் செய்யமுடியும். தொழில் செய்பவர்களுக்கு எல்லாம் இலவசமாக செய்துக்கொடுக்கிறார் என்று பல பேர் நானும் தொழில் செய்கிறேன் என்று வந்தார்கள். நான் ஒன்றுமே செய்யவில்லை. பணம் இல்லாமல் ஒருபோதும் பரிகாரம் செய்வதில்லை.

நீங்கள் ஒரு பரிகாரத்திற்க்கு கொடுக்கின்ற பணத்தில் முக்கால்வாசி நான் பாக்கியஸ்தானம் சொல்லும் இடத்திற்க்கு கொடுத்தால் மட்டுமே பரிகாரம் செய்யமுடியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, October 24, 2015

சாபம்


வணக்கம்!
          ஒரு சிலருக்கு விதியோ என்னவே அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரியாமல் செய்து அவர்கள் சாபத்தில் மாட்டிக்கொள்வார்கள்.

அனுபவத்தில் நடந்தது ஒன்றை சொல்லுகிறேன். ஒரு ஊரில் சோதிடம் பார்க்க தெருவில் சென்ற ஒரு சாமியாரை கூப்பிட்டு பார்த்தார்கள். அவர் சோதிடம் சொல்லும்பொழுது ஏதோ பிரச்சினை ஏற்பட்டு அவரை போட்டு அந்த நபர் அடித்துவிட்டார்.

ஒரு சில இடத்தில் விதி இப்படி ஒரு ஏற்பாட்டை செய்துவிடும். அதில் மாட்டிக்கொண்டு அதன் படி நடக்க ஆரம்பித்துவிடும். அடிப்பட்ட சாமியார் சாபத்தை விட்டுவிட்டு சென்றுவிட்டார். இனிமேல் உங்களுக்கு வாரிசு என்பது அமையாது என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

சம்பந்தப்பட்ட பையனுக்கு திருமண செய்து வைத்தார்கள். அந்த பையனுக்கு குழந்தை பாக்கியம் என்பது இல்லாமல் சென்றுவிட்டது. சாமியாரை தேடி எங்குபோவது. வழிபோக்கான சாமியார். அவரை கண்டிபிடித்து என்ன செய்யமுடியும். விதியை நொந்துக்கொள்ளவதை தவிர வேறு எதுவும் செய்யமுடியாது.

நம்ம ஆளுங்க இப்படி தான் செய்வார்கள். அதுவும் கிராமபுறங்களில் கொஞ்சம் ஓவராகவே இது இருக்கும். அதாவது கோவில் கோவிலாக சென்று கொண்டு எதுவும் வேண்டாம் என்று கடவுள் நாமத்தையை சொல்லிக்கொண்டு திரிபவர்களிடம் எதற்கு சண்டை சச்சரவு செய்யவேண்டும். அப்படிப்பட்டவர்களிடமும் சண்டை போடவேண்டும் என்று தோன்றுகிறதை விதி என்று தான் சொல்லவேண்டும்.

ஒரு சிலருக்கு பாக்கியஸ்தானம் கெட்டால் இப்படி தான் நடைபெறும். எங்கு ஆன்மீகசம்பந்தப்ப்பட்டவர்கள் இருக்கின்றார்களே அவர்களை தேடிச்சென்று வம்பு இழுப்பார்கள். அவர்களின் சாபத்தை வாங்கி வைத்துக்கொண்டு பிறகு வாழ்க்கையில் கஷ்டப்படுவது ஏன்? 

புராணக்காலத்தில் இருந்தே இது நடைபெற்றுக்கொண்டு இருக்கின்ற ஒரு செயல். எத்தனையோ முனிவர்கள் சாபம் விட்டார்கள் என்று படித்திருப்பீர்கள் அது எல்லாம் இப்படி தான். பாக்கியஸ்தானத்தில் ஏற்படும் பிழைகள் தான் இதுபோல் நடப்பது.

சென்னைக்கு வருவதாக பயண ஏற்பாடு இருக்கின்றது. சந்திக்க விருப்பம் இருக்கும் நபர்கள் தொடர்புக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு