ஒரு சிலருக்கு விதியோ என்னவே அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரியாமல் செய்து அவர்கள் சாபத்தில் மாட்டிக்கொள்வார்கள்.
அனுபவத்தில் நடந்தது ஒன்றை சொல்லுகிறேன். ஒரு ஊரில் சோதிடம் பார்க்க தெருவில் சென்ற ஒரு சாமியாரை கூப்பிட்டு பார்த்தார்கள். அவர் சோதிடம் சொல்லும்பொழுது ஏதோ பிரச்சினை ஏற்பட்டு அவரை போட்டு அந்த நபர் அடித்துவிட்டார்.
ஒரு சில இடத்தில் விதி இப்படி ஒரு ஏற்பாட்டை செய்துவிடும். அதில் மாட்டிக்கொண்டு அதன் படி நடக்க ஆரம்பித்துவிடும். அடிப்பட்ட சாமியார் சாபத்தை விட்டுவிட்டு சென்றுவிட்டார். இனிமேல் உங்களுக்கு வாரிசு என்பது அமையாது என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.
சம்பந்தப்பட்ட பையனுக்கு திருமண செய்து வைத்தார்கள். அந்த பையனுக்கு குழந்தை பாக்கியம் என்பது இல்லாமல் சென்றுவிட்டது. சாமியாரை தேடி எங்குபோவது. வழிபோக்கான சாமியார். அவரை கண்டிபிடித்து என்ன செய்யமுடியும். விதியை நொந்துக்கொள்ளவதை தவிர வேறு எதுவும் செய்யமுடியாது.
நம்ம ஆளுங்க இப்படி தான் செய்வார்கள். அதுவும் கிராமபுறங்களில் கொஞ்சம் ஓவராகவே இது இருக்கும். அதாவது கோவில் கோவிலாக சென்று கொண்டு எதுவும் வேண்டாம் என்று கடவுள் நாமத்தையை சொல்லிக்கொண்டு திரிபவர்களிடம் எதற்கு சண்டை சச்சரவு செய்யவேண்டும். அப்படிப்பட்டவர்களிடமும் சண்டை போடவேண்டும் என்று தோன்றுகிறதை விதி என்று தான் சொல்லவேண்டும்.
ஒரு சிலருக்கு பாக்கியஸ்தானம் கெட்டால் இப்படி தான் நடைபெறும். எங்கு ஆன்மீகசம்பந்தப்ப்பட்டவர்கள் இருக்கின்றார்களே அவர்களை தேடிச்சென்று வம்பு இழுப்பார்கள். அவர்களின் சாபத்தை வாங்கி வைத்துக்கொண்டு பிறகு வாழ்க்கையில் கஷ்டப்படுவது ஏன்?
புராணக்காலத்தில் இருந்தே இது நடைபெற்றுக்கொண்டு இருக்கின்ற ஒரு செயல். எத்தனையோ முனிவர்கள் சாபம் விட்டார்கள் என்று படித்திருப்பீர்கள் அது எல்லாம் இப்படி தான். பாக்கியஸ்தானத்தில் ஏற்படும் பிழைகள் தான் இதுபோல் நடப்பது.
சென்னைக்கு வருவதாக பயண ஏற்பாடு இருக்கின்றது. சந்திக்க விருப்பம் இருக்கும் நபர்கள் தொடர்புக்கொள்ளுங்கள்.
சென்னைக்கு வருவதாக பயண ஏற்பாடு இருக்கின்றது. சந்திக்க விருப்பம் இருக்கும் நபர்கள் தொடர்புக்கொள்ளுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment