வணக்கம்!
அன்றாடம் ஏதாவது ஒரு ரூபத்தில் பிரச்சினை நம்மை துரத்திக்கொண்டே இருக்கும். பிரச்சினை இல்லாமல் வாழ்க்கை செல்லுகின்றது என்றால் அது மிக குறைந்த அளவில் உள்ளவர்களுக்கே என்று சொல்லிவிடலாம்.
பிரச்சினை தினமும் வந்துக்கொண்டே இருக்கின்றது அதில் இருந்து மீள்வதற்க்கு தினமும் ஐந்து வேளை தொழுவுங்கள் என்று சொன்னால் நீங்கள் கேட்பீர்களா மாதத்திற்க்கு ஒரு முறையாவது அல்லது இருமுறை வணங்கினால் போதும் என்று தான் நினைப்பீர்கள்.
ஒரு சிலர் வருடத்திற்க்கு ஒரு முறை கடவுளை வணங்கினால் பாேதும் என்று கூட நினைப்பார்கள். மனிதன் அவ்வளவு சோம்பேறியாக மாறிவிட்டான். வணங்கவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நேரம் இல்லை என்று சொல்லிவிடுவார்கள்.
ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி அன்று ஏதோ ஒரு வழிபாட்டை செய்து வந்தால் போதும். ஒன்று குலதெய்வத்திற்க்கு பச்சைப்பரப்புதல் செய்து வாருங்கள் அல்லது பெளர்ணமி அன்று கிரிவலம் செய்து வாருங்கள்.
கிரிவலம் செல்ல திருவண்ணாமலை மட்டும் தான் செல்லவேண்டும் என்பதில்லை உங்களின் ஊரில் உள்ள சிவலாயத்திலேயே இதனை செய்யலாம். உங்களின் குலதெய்வத்தின் கோவிலுக்கு சென்று வரலாம். பெளர்ணமி அன்று வீட்டில் குலதெய்வத்திற்க்கு பச்சை பரப்புதலை செய்து வந்தால் உங்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்பட்டுவிடும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment