Followers

Sunday, October 25, 2015

அன்னாபிஷேகம்


ணக்கம்!
          உலகத்திற்க்கு உள்ள ஜீவராசிகளுக்கு எல்லாம் சிவன் உணவை படைத்த நாளாக ஐப்பசி பெளர்ணமியை சொல்லுவார்கள். உலகத்தில் உள்ள உயிர்களுக்கு கருணை வடிவமான சிவன் உணவை படைத்த நாளில் சிவன் கோவிலில் உள்ள லிங்கத்திற்க்கு அன்னாபிஷேகம் செய்வார்கள். அமுது படைக்கும் அந்த ஆண்டவனுக்கே அமுது படைக்கும் விழா தான் அன்னாபிஷேகம்.

அன்னாபிஷேகம் நடைபெறும் சிவன் கோவிலுக்கு நம்மால் முடிந்த ஒரு சிறிய உதவியாவது செய்யும்பொழுது அந்த சிவன் மகிழ்ந்து நமக்கு நல்ல அருளை தருவார். அன்னாபிஷேகத்திற்க்கு அரிசி காய்கறி என்று வாங்கிக்கொடுக்கலாம். இதனை வாங்கிக்கொடுக்கமுடியவில்லை என்றாலும் பணஉதவியை செய்து தரலாம்.

அன்னாபிஷேகத்தன்று எம்பெருமானின் மேனியிலே சாற்றப்படுகின்ற ஒவ்வொரு பருக்கை அன்னமும் ஒரு சிவலிங்கம் என்பார்கள், எனவே அன்று சிவதரிசனம் செய்தால் கோடி சிவதரிசனம் செய்வதற்கு சமம். 

நாம் கொடுக்கின்ற அரிசி பல சிவலிங்கங்களாக உருவாகின்றது. கடவுளை உணவாக உண்கிறான் என்று ஒரு சிலர் சொல்லுவார்கள். அது எல்லாம் நம்ம மதத்தில் தான் இருக்கின்றது செயலிலும் நடைபெறுகின்றது. அன்னத்தை இரண்டாம் காலபூஜை (8:30 pm) முடிந்தபிறகு பக்தர்களுக்கு கொடுப்பார்கள். பக்தர்களுக்கு மட்டும் இல்லை அதனை நீர் நிலைகள் உள்ள இடங்களுக்கும் சென்று உயிரினங்களுக்கு கொடுப்பார்கள்.

27/10/2015  செவ்வாய்கிழமை சிவன் கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. அதற்கு உங்களின் பங்களிப்பை உங்களுக்கு அருகில் இருக்கும் சிவன் கோவிலுக்கு செலுத்துங்கள் அல்லது மாலை நேரத்தில் சிவன் காேவிலுக்கு சென்று அன்னாபிஷேகத்தில் இருக்கும் ஆண்டவரை தரிசனம் செய்துவிட்டு வாருங்கள். கோவில் பக்கமே செல்லாதவர்கள் கூட ஒரு முறை சென்று தரிசனம் செய்து பாருங்கள்.

வருடத்திற்க்கு ஒரு முறை மட்டுமே அன்னாபிஷேகத்தில் சிவனை தரிசனம் செய்ய முடியும். வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: