Followers

Wednesday, June 27, 2012

எதிரி யார் ?



வணக்கம் நண்பர்களே! நாம் ஆறாவது வீட்டு அதிபதி தசாவை பற்றி பார்த்துவந்தோம். அந்த தசாவில் நமக்கு வரும் எதிரி யார் என்று இப்பதிவில் நாம் பார்க்கலாம். 

எதிரி யார் என்று உங்களுக்கு தெரிந்துவிட்டால் நீங்கள் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கலாம் அல்லவா. உங்களுக்கு அமையும் எதிரிகள் சினிமா எதிரிகள் விட கொடுமையானவர்களாக இருப்பார்கள். நிஜ வாழ்க்கையில் நாம் பார்க்கும் போது அப்படிதான் அமைகிறார்கள். அவர்களிடம் நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பததாற்க்காக தான் இப்பதிவில் அவர்கள் யார் என்று உங்களுக்கு காட்ட போகிறேன். வருங்கள் யார் என்று பார்க்கலாம்.

ஆறாவது வீட்டு அதிபதி மூன்றாம் வீட்டுடன் சம்பந்தபட்டால் உங்களுடைய தம்பி தங்கைகள் உங்களுக்கு எதிரிகளாக வருவார்கள். பக்கத்து வீட்டுகாரனும் உங்களுக்கு எதிரியாக வருவார்கள்.

ஆறாவது வீட்டு அதிபதி நான்காம் வீட்டுடன் சம்பந்தபட்டால் உங்கள் நண்பர்கள் தான் உங்களுக்கு எதிரியாக இந்த தசாவில் வருவார்கள். தாயாருடன் சண்டை வரும். என்னதான் இருந்தாலும் எந்த தாயும் தன் மகனை எதிரியாக பார்க்கமாட்டார்கள். சிறிய சண்டை மட்டும் வரும்.

ஆறாவது வீட்டு அதிபதி ஐந்தாம் வீட்டுடன் சம்பந்தபட்டு ஆறாவது வீட்டு தசா நடந்தால் உங்கள் குழந்தைகள் தான் உங்களுக்கு எதிரியாக வருவார்கள். சில பையன்கள் தாய் தந்தையை அடித்துவிடுவார்கள். அது எல்லாம் இந்த மாதிரி தசாவில் தான் நடக்கும்.

ஆறாவது வீட்டு அதிபதி ஏழாம் வீட்டுடன் சம்பந்தபட்டு தசா நடந்தால் உங்கள் மனைவி தான் உங்களுக்கு முதல் எதிரியாக வருவார்கள். சில மனைவிகள் கணவனை அடிப்பது எல்லாம் இந்த மாதிரி தசாவில் தான் என்பது உங்களுக்கு புரிந்திருக்கும் அதுபோல உங்களுடைய தொழில் நண்பர்கள் உங்களுக்கு எதிரியாக வரலாம்.

இதில் பார்த்தீர்கள் என்றால் ஆறாவது வீடு எந்த அதிபதியோ அவர் தான் உங்களுக்கு முதல் எதிரியாக இருப்பார்கள். அந்த தசாவில் இந்த மாதிரி வீடுகள் சம்பந்தபட்டு தசா நடக்கும் போது இவர்கள் எல்லாம் எதிரியாக மாறுவார்கள். ஆறாவது வீடு ஏழாம் வீட்டுடன் சம்பந்தபட்டு தசா நடக்கும் போது உங்கள் மனைவி உங்கள் எதிரி வீட்டுக்கு போய்விடுவார்கள் எவ்வளவு கொடுமை டா சாமி. இந்த மாதிரி எல்லாம் நடந்திருக்கிறது.

ஆறாவது வீட்டு அதிபதி ஒன்பதாவது வீட்டுடன் சம்பந்தபட்டு தசா நடந்தால் உங்கள் தந்தை தான் உங்களுக்கு எதிரியாக அமைவார். உங்களுடைய தந்தை வழி உறவிலும் எதிரியாக வருவார்கள்.

ஆறாவது வீட்டு அதிபதி பத்தாவது வீட்டுடன் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் நீங்கள் வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு மறைமுகமாக எதிரிகள் தோன்றுவார்கள். அவர்கள் தான் உங்களுக்கு எதிரி. உங்களை பற்றி மேல் அதிகாரிகளிடம் போட்டு கொடுத்துவிடுவார்கள் இதுதான் மறைமுக எதிரி.

ஆறாவது வீட்டு அதிபதி பதினொன்றாம் வீட்டுடன் சம்பந்தபட்டு தசா நடந்தால் உங்கள் மூத்த சகோதரர்கள் தான் உங்களுக்கு முதல் எதிரியாக வருவார்கள். இரண்டாவது எதிரியாக உங்களுடைய மருமகன் மருமகள் எதிரியாக வரலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 


2 comments:

Balamurugan Jaganathan said...

nice and useful info. Thank you sir.

rajeshsubbu said...

//* Balamurugan Jaganathan said...
nice and useful info. Thank you sir. * //
வருக வணக்கம். தொடர்ந்து வாருங்கள். நன்றி