Followers

Wednesday, November 28, 2012

திருவண்ணாமலை தீப அனுபவம்



வணக்கம் நண்பர்களே !

நேற்று பதிவு எழுதமுடியவில்லை காரணம் திருவண்ணாமலை தீபத்தில் கலந்துக்கொண்டதால் எழுதமுடியவில்லை நான் அதிகாலையிலேயே எழுந்து சென்றுவிட்டேன் அதனால் எழுதமுடியவில்லை.

நேற்று பார்த்து நிறைய நண்பர்கள் எனக்கு போன் செய்து பேசினார்கள். நான் திருவண்ணாமலையில் இருக்கிறேன் என்று சொன்னவுடன் நீங்கள் பதிவில் திருவண்ணாமலை செல்வதாக சொல்லிருந்தீர்கள் என்றால் நாங்களும் வந்து இருப்போம் என்று சொன்னார்கள். 

என்னை பொருத்தவரை நான் எங்கு சென்றாலும் தனியாக தான் செல்வேன். யாரையும் கூப்பிடுவதில்லை நான் மற்றும் எனது குரு மட்டும் செல்வது வழக்கம்.

நீங்கள் நினைக்கலாம் இது சுயநலம் நீங்கள் மட்டும் செல்லுவது எப்படி என்று கேட்க தோன்றும். என்னுடன் நீங்கள் வரும்போது என்ன நினைப்பீர்கள் ஒரு சோதிடர்வுடன் செல்லுகிறோம் கண்டிப்பாக கூடியவிரைவில் முன்னேறிவிடுவோம் என்று நினைப்பீர்கள் என்னால் உங்களுக்கு எதுவும் நடக்காது அப்படி இருப்பதால் ஏன் தேவையற்ற வேலை. 

நான் உங்களுக்கு சித்தர்களை மற்றும் தெய்வங்களை காட்டும் அளவுக்கு நான் இன்னும் வளர்ச்சி அடையவில்லை. நான் அந்தளவுக்கு வளர்ச்சி அடைந்தபிறகு உங்களை எல்லாம் கூப்பிட்டு செல்லுகிறேன்.

உங்களை கூப்பிட்டு ஜாதக கதம்பம் இத்தனை நபரை கூப்பிட்டு இருக்கிறது என்று வீண் ஜம்பம் அடித்துக்கொள்ள விரும்பவில்லை. சும்மா வருவதாக இருந்தால் வரலாம் அடுத்தடவை நான் எங்கேயாவது செல்லும் போது கூப்பிடுகிறேன். 

திருவண்ணாமலை தீபத்தை பார்த்தது எல்லையற்ற ஆனந்தத்தை தந்தது. எனக்கு குரு அமைவதற்க்கு முன்னர் திருவண்ணாமலை சென்று தீபத்தை பார்த்து இருக்கிறேன் அப்பொழுது எனக்கு ஒரு எண்ணம் தோன்றும் என்னடா அக்னி தலம் என்று செல்லுகிறார்கள் அக்னி அதுவாகதானே எரியவேண்டும் இவர்களாவே பற்ற வைக்கிறார்கள் என்று நினைத்தது உண்டு. 

இயற்கையாகவே தீபம் எரிந்தால் தானே அக்னி தலத்திற்க்கு பெருமை என்று நினைத்தேன். செயற்கையாகவே மனிதர்கள் தீபத்தை ஏற்றுவது என்ன பெருமை என்று என் மனதில் தோன்றும். குரு அமைந்த பிறகு இந்த எண்ணம் தோன்றவில்லை. இப்பொழுதும் செயற்கையாகவே தான் ஏற்றுக்கிறார்கள் ஆனால் என் மனதிற்க்கு இயற்கையாகவே ஏற்றுவது போல் தோன்றுகிறது எல்லாம் குரு செய்த வேலை.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: