வணக்கம் நண்பர்களே !
ஜாபால உபநிஷதம் அதர்வ வேதத்தை சேர்ந்தது இது. ஒவ்வொரு உபநிஷத்திலும் நிறைய கருத்துக்கள் உள்ளன ஆனால் அதை எல்லாவற்றையும் எழுதமுடியாது. அதில் இருந்து ஒரு சில கருத்துக்களை மட்டும் எடுத்து உங்களுக்கு எளிய முறையில் தருகிறேன்.
இந்த உபநிஷதம் எல்லாம் ஏன் நாம் படிக்க வேண்டும் என்று கூட நினைக்கலாம். இதை எல்லாம் நாம் படித்தால் நமது மனது பக்குவபடும். மனது பக்குவபட்டாலே போதும். பயிற்சியில் வராததை படிப்பதால் பெறலாம்.
இந்த உபநிஷத்தில் துருவாசர், ஜடபரதர் போன்றோர் வெளித்தோன்றா இயல்புகளும் வெளித்தோன்றா வாழ்க்கை வழிகளும் உடையவர்களாவார்கள். இவர்கள் பித்து பிடித்தது போல் இருந்தார்கள் ஆனால் இவர்கள் திரிதண்டம் கமண்டலம் சிகை போன்று ஏதுவும் இல்லாமல் இருந்தார்கள்.
நீங்கள் நினைக்கலாம் இது எல்லாம் இருந்தால் தான் சாமியாராக இருக்கமுடியுமா என்று கேட்கலாம் சிவனடியாராகி சாமியாராக இருப்பவர்களுக்கு என்று சட்டங்கள் இருக்கின்றன். என்ன என்றால் அவர்கள் அதிகாலையில் எழ வேண்டும். காலை 4 மணியில் இருந்து 6 மணிக்குள் அவர்களின் கடமையை முடித்து இருக்க வேண்டும்.
காலையில் குளிக்கும் போது ருத்ராட்சத்தை கழட்டி வைப்பதற்க்கு ஒரு மந்திரம் சொல்ல வேண்டும் அந்த ருத்ராட்சத்தை மீண்டும் போட்டுக்கொள்வதற்க்கு மந்திரம் தண்டத்தை எடுப்பதற்க்கு ஒரு மந்தரம் சொல்ல வேண்டும். கமண்டலத்தில் நீரை நிரம்பும் போது 18 நதிகளையும் அந்த கமண்டலத்தில் கொண்டு வருவதற்க்கு ஒரு மந்திரம் கோவணத்தை கட்டிக்கொள்வதற்க்கு மந்திரம் என்று ஏகாப்பட்ட மந்திரங்கள் இருக்கின்றன.
இப்படி தான் இருக்க வேண்டும் என்று வரையறுத்து இருக்கின்றார்கள் ஆனால் இன்று அப்படி இல்லை சாமியார்களும் மாடர்ன் வாழ்க்கைக்கு தகுந்தவாறு தங்களை மாற்றிக்கொண்டுவிட்டார்கள்.
நேரம் கிடைக்கும் போது ஒவ்வொரு மதங்களிலும் சந்தியாசிகளைப்பற்றி தெரிந்துக்கொள்ளலாம். இப்பொழுது இது போதும்.
இரண்டு பேரும் ஆத்மா ஒன்றையே தேடினர். பிறவியின்போது இருந்தது போல் ஏதுமில்லா உருவந்தாங்கி எவ்வித பற்றுகளும் உடைமைகளும் இல்லாமல் தூய இதயத்தோடு பிரம்ம பாதையில் நடந்தவர்கள்.
இவர்கள் வாழ்ந்த இடம் எது தெரியுமா?
ஏகாந்த இல்லம் அல்லது கோயில் புல்வெளி மலை குகை யாருமில்லாத இடத்தில் ஓடும் ஓடை போன்ற இடங்களில் தான் வசித்து இருக்கிறார்கள். நான் எனும் எண்ணமின்றி உயிருள்ளத்தில் நிறுத்திய தியானத்தில் நிலை பெற்றுப்பார்கள்.
இந்த உபநிஷத்தில் சொல்லுகின்ற கருத்து தனிமை தான் வேறு ஒன்றும் இல்லை.
தனிமை ஒரு அழகு தான் ஆனால் அது தொடர்ந்த இருந்துகொண்டே இருக்ககூடாது. தனிமையான இடங்களுக்கு செல்லும் போது மனதில் ஒரு ஆனந்தம் பிறக்கும். அதனை அனுபவிக்க வேண்டும்.
நாம் என்ன செய்வோம் எங்கேயாவது ஒரு இயற்கையான இடங்களுக்கு செல்லும் போது அந்த இடத்திற்க்கு போய் போன் பேசிக்கொண்டு இருப்போம் அல்லது அந்த இடத்திற்க்கு போய் கேமராவில் படம் பிடித்துக்கொண்டு இருப்போம். அங்கு சென்றால் அந்த இயற்கையை ரசிப்பதை விட்டு விட்டு அதனை படம் பிடிப்பது தவறு இயற்கையை இயற்கையாக தான் ரசிக்க வேண்டும் அதை படம் பிடித்து எடுத்து வந்து வீட்டில் ரசிக்ககூடாது.
தனிமையில் போய் தான் ரசிக்க வேண்டும் என்பது இல்லை உங்களின் துணைவரையும் அழைத்துக்கொண்டு போய் ரசிக்கலாம் ஒன்றும் தவறு இல்லை.
உங்களின் பாதி உங்களின் துணைவர் அவரும் அதனை ரசிக்க நீங்கள் வழி செய்ய வேண்டும். நம்மில் பல பேர் இருக்கிறார்கள் நண்பர்களோடு மட்டும் தான் வெளியில் டூர் போவது மனைவியை வீட்டிலேயே விட்டுவிட்டு செல்வார்கள் அப்படி செய்யாதீர்கள் அவர்களையும் அழைத்துக்கொண்டு அந்த ஏகாந்தத்தை அனுபவியுங்கள் .
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment