வணக்கம் நண்பர்களே இப்பதிவு மூலம் பெண்களுக்கு ஒரு முக்கியமான தகவல் ஒன்றை தரபோகிறேன் படித்துவிட்டு என்னை திட்டாதீர்கள் சோதிடத்தில் அனைத்தும் உண்டு.
என்னிடம் சோதிடம் பார்க்கும் இளம்பெண்கள் ஒரு கேள்வியை முன்வைக்கிறார்கள் அவர்களின் கேள்விக்கு நான் பதில் தர வேண்டிய சூழ்நிலை இருப்பதால் அந்த கேள்விக்கு பதில் தருகிறேன்.
கேள்வி இது தான் என்னுடைய கணவர் அவரின் அம்மா பேச்சை கேட்பாரா என்று கேட்கிறார்கள்.
இந்த கேள்வி ஏன் கேட்கிறார்கள் என்றால் கணவர் அவரின் அம்மா பேச்சை கேட்டுக்கொண்டு இவரை ஏதும் செய்துவிடுவார் என்ற நினைப்பால் தான். இப்படி கேட்பவர் எதிர்காலத்தில் மாமியார் ஆகபோகிறார் என்பதை மறந்துவிட்டு கேட்கிறார்கள்.
அந்த அம்மாக்கள் நினைப்பதையும் நாம் குறைசொல்ல முடியாது இவ்வளவு கஷ்டபட்டு வளர்த்த பையன் மனைவி பேச்சை கேட்டு நம்மை விட்டுவிட்டு சென்றுவிடுவானோ என்ற பயத்தால் தான் அவர்களும் அவ்வாறு நடந்துக்கொள்கிறார்கள்.
பொதுவாக பெண்களுக்கு பெண்கள் தான் எதிரி. என்ன செய்வது என்னுடைய வேலை சோதிடத்திற்க்கு பலன் சொல்லுவது அதனால் இதனை சோதிடத்தில் எவ்வாறு பார்ப்பது என்பதை இப்பொழுது பார்க்க போகிறோம்.
உங்களுடைய கணவராக வரபோகிறவரின் ஜாதகத்தை எடுத்துக்கொள்ளுங்கள் அவருடைய ஜாதகத்தில் லக்கினாதிபதி நான்காவது வீட்டு அதிபதியுடன் சேர்ந்து நின்றால் அல்லது நான்காவது வீட்டு அதிபதி உச்சம் ஆட்சி பெற்றால் உங்கள் கணவர் உங்களின் மாமியாரின் பேச்சை கேட்பார். தாய் சொல்லே மந்திரம் என்று சொல்லுவார்.
மேலை சொன்னது அனைத்தும் பொதுபலன் தான் இதனை பார்த்துக்கொண்டு நீங்கள் இப்படி தான் இவர் இருப்பார் என்று நீங்கள் நினைக்கவேண்டாம்,
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment