வணக்கம் நண்பர்களே!
தீபாவளி பண்டிகையை நல்லபடியாக கொண்டாடி இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். எனக்கு தீபாவளிக்கு வாழ்த்துக்களை சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
நமது நண்பர்கள் என்னிடம் நீங்கள் சிவனை பற்றி ஆன்மீக அனுபவத்தில் எங்களுக்காக எழுதுங்கள் என்று கேட்டார்கள் சிவனைப்பற்றி சொல்ல எனக்கு அருகதை இருக்க என்பதை முதலில் யோசித்தேன் நண்பர்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டதால் அவர்களுக்காக எழுதினேன் குறைகள் இருந்தால் அந்த சிவன் என்னை மன்னிக்க வேண்டுகிறேன். பெரிய ஆட்களைப்பற்றி பெரிய ஆட்கள் எழுதினால் நன்றாக இருக்கும் என்னைப்போல் சோதிடக்காரன் எழுதினால் எந்தளவுக்கு வரும் என்பதை அந்த சிவன் தான் முடிவு செய்ய வேண்டும்.
நண்பர்கள் அனைவரும் கேட்டது இது தான் ஏன் நாங்கள் சிவனை இஷ்டதெய்வமாக எடுக்ககூடாது என்று தான் கேட்டார்கள். எதையும் நீங்கள் வரலாற்றை தான் பார்க்க வேண்டும் அதில் யாராவது சிவனை இஷ்டதெய்வமாக எடுத்துள்ளார்களா என்று பார்த்தால் யாரும் எடுத்து இருக்க மாட்டார்கள். மாந்தீரிகர்கள் கூட எடுக்க மாட்டார்கள் அனைவரும் சக்தியை தான் எடுப்பார்கள் ஏன் எடுக்கவில்லை அவரை எடுக்க முடியாதா என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுவது உண்மை தான்.
சிவனைப்பற்றி நன்றாக அறிந்த பிறகு தான் சிவனை எடுக்கலாமா எடுக்க வேண்டாமா என்று முடிவு செய்ய வேண்டும். சிவன் என்பவர் ஐந்து முகத்தில காட்சி அளிப்பவர் அவரின் ஐந்து முகத்தையும் நீங்கள் தெரிந்து இருக்க வேண்டும். சிவன் முதலாவதாக காட்சி தருவது ருத்ரன் இரண்டாவதாக காட்சி தருவது காலபைரவர். மூன்றாவதாக காட்சி தருவது சச்சிதானந்தம் நான்காவதாக காட்சி தருவது சதாசிவம் ஐந்தாவதாக காட்சி தருவது பரபிரம்மம் இந்த ஐந்து நிலையில் தான் காட்சி கொடுப்பார்.
நாம் சிவனை எடுப்பது என்று முடிவு செய்தால் இந்த ஐந்து விதத்தில் தான் காட்சி தருவார். இந்த ஐந்தில் ஒன்றை எடுக்க வேண்டும்.
ருத்ரன்
சிவனுக்கு மிக உகந்த இடம் சுடுகாடு. ருத்ரன் முதல் ரூபம் என்பதால் மிக உயரந்த சக்தி வெளிப்படும். ருத்ரனாக வந்தால் அவன் வந்தவுடனே உங்களின் இரத்தத்தை தான் உறிஞ்சும் அதற்காகவே பல பலிகளை கொடுப்பார்கள். சிவன் பல நிலையில் வெளிப்பட்டாலும் அவன் முதல் முக்கிய தொழில் அழித்தல்.
நமது இரத்ததை உறிஞ்சுபவனை எடுத்துக்கொண்டு நாம் நடைமுறை வாழ்க்கையில் இருக்கமுடியுமா? அதாவது எந்த சக்தியை எடுத்தாலும் அதனை தன் உடம்பில் ஏற்றவேண்டும் அவ்வாறு ஏற்றுவதற்க்கு சிவனின் முக்கிய அம்சமான ருத்ரனை ஏற்றமுடியாது. ஒரு சிலர் அவனை தரிசித்துவிட்டு அப்படி விட்டுவிடுவார்கள் உடம்பில் ஏற்றமாட்டார்கள்.
இது எல்லாம் சுடுகாட்டில் இருந்து செய்தால் தான் அவனை தரிசிக்கமுடியும். சுடுகாட்டிற்க்கு போய் அதனை செய்வதற்க்கு நீங்கள் முறையான பயிற்சி பெற்று இருக்கவேண்டும். சாதாரணமான காரியம் இல்லை. ருத்தரனை எடுப்பவர்கள் உடலில் உள்ள தோல்களை பார்த்தால் பிளந்து இருக்கும் நீங்கள் பார்த்து இருக்கலாம் பல அகோரிகள் பல சந்நியாசிகள் உடம்பில் சாம்பலை பூசிக்கொண்டு செய்வதை நீங்கள் பார்த்து இருக்கலாம் அது ஏன் என்றால் ருத்ரனை எதிர்க்கொள்வது என்பது சாதாரண காரியம் கிடையாது அதைப்போல் சுடுகாட்டிற்க்கு சென்ற நீங்கள் செய்வதாக இருந்தால் நீங்கள் நிர்வாண நிலையில் இருந்தால் மட்டுமே சாத்தியப்படும். உடலில் எந்த ஒரு தடங்கலும் இருக்ககூடாது.
நீங்களும் சுடுகாட்டில் போய் சிவமந்திரங்களை உரு ஏற்றலாம் அதற்கான வழிமுறைகள் உள்ளன நீங்கள் ஏதாவது இஷ்டதெய்வ பயிற்சி செய்திருந்தால் சொல்லுங்கள் அதற்கான வழிமுறைகளை சொல்லிதருகிறேன். நீங்கள் உரு ஏற்றி சிவனை தரிசனம் செய்யலாம்.
பொதுவாக சிவனுக்கு சொல்லும் மந்திரங்கள் சரியாக உச்சரிக்கபடவேண்டும் அப்படி உச்சரிக்கபடவில்லை என்றால் சிவனின் கோபத்திற்க்கு ஆளாக வேண்டும் அதனால் தான் உங்களுக்கு சொல்லுகிறேன் மந்திரங்கள் தவறாக உச்சரிக்காதீர்கள் தவறான மந்திரத்தை உரு ஏற்றாதீர்கள்.சிவனுக்கு மந்திரத்தை விட வாசிக்கும் இசை கருவி முக்கியமான ஒன்று. இசைக்கருவிக்கு சிவன் நம் வசம் வருவார்.
காலபைரவர்
காலபைரவர் இவர் காத்தல் தொழில் செய்பவர் என்று அனைவராலும் சொல்லப்படுபவர். இவருக்கும் சுடுகாடு தான் வாசம். இவர் காவல் காப்பவர் இவரை நாம் எடுப்பதும் கஷ்டமான காரியம் தான் ஏன் என்றால் வீட்டை காப்பவரை வீட்டிற்க்குள் விடுவது தவறாக போகும் அதனால் இவரை எடுப்பதையும் விட்டுவிடுங்கள் இவரைப்பற்றி அதிகம் நான் உங்களுக்கு சொல்லவில்லை ஏன் என்றால் என்னை விட உங்களுக்கு தான் நன்றாக தெரியும் இவர் எந்த ஊரில் ரூம் போட்டு இருக்கிறார் அவருக்க என்ன சாப்பாடு கொடுத்தால் உங்களை தேடிவருவார் என்று நன்றாக உங்களுக்கு தெரிவதால் விட்டுவிடுகிறேன்.
நாய் நன்றியுள்ள விலங்கு தான் அதனால் அதனை வீட்டிற்க்குள் அனுமதித்தால் மிகப்பெரிய பிரச்சினையை அது ஏற்படுத்தும் வெளியில் வைத்து வழிபடுவது நல்லது. உங்கள் உடம்பில் ஏற்றினால் அது பிரச்சினையை ஏற்படுத்தும். இதனை வைத்து சில பேர் மந்திரங்களில் ஈடுபடுகிறார்கள் அது கண்டிப்பாக உடம்பில் ஏற்றி செய்யமாட்டார்கள் என்று நினைக்கிறேன்.
சச்சிதானந்தம்
இது நல்லதை செய்யும் இதனை வைத்து நல்ல செல்வவளங்கள் உங்களுக்கு வரும். இதனை எடுப்பது கடினம் என்று பல பெரியவர்கள் சொல்லியுள்ளார்கள். நமக்கு யார் பெரியவர்கள் எல்லாம் சாமியார்கள்.நமது நண்பர்கள் அனைவரும் சாமியார்கள் தான் அதிகம் அவர்கள் சொல்லிதை வைத்து சொல்லுகிறேன்.
சதாசிவம்
சதாசிவம் என்பது எந்த நேரத்திலும் சிந்தனையை சிவன் மேல் வைக்கும் நிலை இந்த நிலையில் வெளிப்படுவது கடினம் என்றும் சொல்லுகிறார்கள் ஆனால் ஒரளவு நல்ல பலனை தருகிறது. தியான நிலையில் இது கைகூடும்.
பரபிரம்மம்
பரபிரம்மம் என்கின்ற நிலை படைப்பிற்க்காக உருவாக்கப்பட்ட நிலை இந்த நிலை வருவது கிடையாது என்றும் சொல்லுகிறார்கள் எடுக்கமுடியாது என்றும் சொல்லுகிறார்கள். நாம் எங்கே படைததல் செய்யபோகிறோம். அழிக்கிறது தானே நமது முதல் வேலை.
நான் கூறியது அனைத்தும் எளிதாக சொல்லியுள்ளேன். இதனைப்பற்றி சொல்லுவது என்பது தனியாக ஒரு பிளாக்யை ஆரம்பித்து சொல்லவேண்டும் அந்தளவுக்கு கடினமான ஒன்று மொத்தத்தில் சிவனை எடுப்பது கடினம். சிவனின் முதல் படைப்பான ருத்ரனை எடுப்பது பல அகோரிகள் மற்றும் நாகஸ் சன்னியாசிகள் செய்கிறார்கள் அதற்கு அவர்கள் கொடுக்கும் விலை என்ன என்று நான் உங்களுக்கு சொல்ல தேவையில்லை. சுடுகாட்டில் நின்றுக்கொண்டு அவர்கள் செய்யும் போது எது உண்மையான தெய்வம் என்பதை அந்த ருத்ரன் காட்டிக்கொடுக்கிறான் அவனிடம் எப்படி சரணடைய வேண்டும் என்பதையும் அவன் செய்கிறான் அந்த நிலை என்பது மிக உயந்த நிலை.
நீங்கள் குடும்ப வாழ்க்கையில் இருந்துக்கொண்டே சிவனின் முதல் வடிவமான ருத்ரனை எடுக்கலாம் அப்படி எடுப்பதற்க்கு சரியான வழிகாட்டி ஒருவன் இருக்க வேண்டும் அப்படி ஒருவன் இருந்தால் நீங்கள் ஓடி அவனை பிடித்துக்கொள்ளுங்கள்.
அடுத்த பதிவில் சிவனின் ஐந்து நிலையிலும் நீங்கள் வாழுகின்ற வீட்டை வைத்து ஒரு பதிவு வரபோகிறது அது சோதிட தாகம் உள்ளவர்களுக்கும் நல்ல பதிவாக இருக்கும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment