வணக்கம்!
பாக்கியஸ்தானத்தில் செவ்வாய் ஒருவருக்கு இருந்தால் பெரும்பாலும் அந்த நபர் பெரிய நிர்வாகத்தை நிர்வகித்து அதில் இருந்து நல்ல செல்வவளம் கிடைத்து வாழ்வார்கள். செவ்வாய் அமரும் வீடு உச்சவீடாக இருந்தால் நன்றாக இருக்கும் அல்லது செவ்வாயோடு கெட்ட கிரகங்கள் சேராமல் இருக்கவேண்டும். தீயகிரகங்களின் பார்வையும் படக்கூடாது.
செவ்வாய் பாக்கியஸ்தானத்தில் இருந்தால் அந்த நபர் தனித்து போய்விடுவார்கள் என்று சொல்லுவார்கள். ஒரு சிலருக்கு அப்படி நடப்பது உண்மை தான் எல்லாேருக்கும் அப்படி நடப்பதில்லை. பாக்கியஸ்தானத்தில் செவ்வாய் அமர்ந்தால் பங்காளிகள் சண்டை அதிகம் வருகின்றது.
ஒரு சில ஜாதகத்தில் செவ்வாய் ஒன்பதாவது வீட்டில் அமர்ந்த நபர்கள் வெளிநாட்டில் வேலை வாய்ப்பை பெற்று இருக்கின்றார்கள். வெளிநாட்டில் கனரக தொழில் நடைபெறும் இடத்தில் பணிபுரிகின்றனர்.
செவ்வாய் ஒன்தாவது வீட்டில் நீசம் பெற்று அமர்ந்து இருப்பவர்கள் வேலைக்கே கஷ்டப்படுபவர்களாக இருக்கின்றனர். எந்த வேலை கிடைக்காமல் இருக்கின்றனர். அவர்களின் பாக்கியம் அப்படி வேலை செய்கின்றது.
செவ்வாய் உச்சம் பெற்று ஒன்பதாவது வீட்டில் அமர்ந்திருப்பவர்களுக்கு மலை பிரதேசங்களில் உள்ள ஆன்மீகதலங்களை நாடி சென்று அங்கே தங்கியுள்ளனர். ஆன்மீகதலங்களில் ஆன்மீக தொண்டு செய்வதற்க்காக இருக்கின்றனர்.
ஒன்பதாவது வீட்டில் செவ்வாய் இருந்து பிரச்சினை தருகின்றது என்று நினைப்பவர்கள் முருகன் கோவிலுக்கு சென்று ஒன்பது வாரம் தீபம் ஏற்றி வாருங்கள். முருகன் கோவிலுக்கு ஏதாவது ஒரு நாள் அன்னதானம் செய்து வாருங்கள். பாக்கியஸ்தானம் முருகன் அருளால் பலப்படும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
3 comments:
Yoga parriyum eludhunga.only pakthi mattum eludhareenga?
வணக்கம் அண்ணே,
பாக்கியஸ்தானத்தில் செவ்வாயும் ,சனியும் அமர்ந்தால் என்ன பலன்?. அதை விரிவாக கூறவும். அதன் மேல் குருவின் பார்வை பட்டால் பலன் மாறுமா?
நன்றி.
துலாம் லக்னம் . செவ்வாய் மிதுனத்தில். ராகுவின் 11ம் பார்வை . 12 ஆண்டுகளாக வெளி நாட்டில் இருக்கிறேன் .
பழனியப்பன் , மஸ்கட்
Post a Comment