வணக்கம்!
சுக்கிரன் மற்றும் சந்திரன் இணைந்து இருந்தால் அவர்களின் வாழ்க்கை எப்பொழுதும் சந்தோஷம் என்று சொல்லிருந்தேன். சுக்கிரனும் சந்திரனும் சேர்ந்து இருந்து அது தவறாக பலன்களை கொடுக்க ஆரம்பித்தால் மிகவும் கடினமாக இருக்கும் ஜாதகர்களின் வாழ்க்கை.
பெரும்பாலும் காமத்தில் அழியும் நபர்களுக்கு இப்படிப்பட்ட அமைப்பு இருக்கும். அவர்கள் காமத்திற்க்காக செலவு செய்து அனைத்தையும் இழப்பார்கள்.
ஒரு சிலருக்கு பனிரெண்டாவது வீட்டு அதிபதியோடு இணையும்பொழுது அல்லது பார்வை படும்பொழுது எதிர்பாலினர்க்காக அனைத்தையும் இழந்து கடைசியில் தன் உயிரையும் இழந்துவிடுவார்கள்.
ஒரு சிலருக்கு ஆறாவது வீட்டு அதிபதியோடு அல்லது ஆறாவது அதிபதியின் பார்வையில் இருக்கும்பொழுது காமத்திற்க்காக கொலை கூட செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்.
அவர் அவர்கள் வந்த வழி அப்படி இருக்கும்பொழுது இதற்கு என்ன செய்யமுடியும் என்று விட்டுவிடலாம். ஜாதகம் பார்க்க தெரிந்தவர்கள் இந்த கிரகங்களின் தாக்கத்தால் தான் இது வருகிறது என்று எண்ணி எல்லாவற்றிலும் பொறுமையாக இருந்தால் விதியில் இருந்து வெளியில் வந்துவிடலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment