Followers

Friday, September 9, 2016

சுக்கிரனும் சந்திரனும்


ணக்கம்!
          சுக்கிரனும் சந்திரனும் சேர்ந்து இரண்டாவது வீட்டில் ஒருவருக்கு இருந்தது. எப்பொழுதும் அவரிடம் பணம் இருந்துக்கொண்டே இருக்கும். எப்படியாவது அவருக்கு பணம் வந்துக்கொண்டே இருக்கும். 

குருவும் சந்திரனும் சேர்ந்து இருந்தால் தானே வரும் இது என்ன சுக்கிரனும் சந்திரனும் சேர்ந்து இருந்தால் வருகிறது என்கிறீர்கள் என்று நினைக்கலாம் ஆனால் உண்மையாக அவருக்கு பணம் வருகின்றது. இரண்டு கிரகங்களும் நல்ல நிலைமையில் இருப்பதால் அவர்க்கு பணம் வருகிறது.

அவர் நல்ல செலவும் செய்வார். அடிக்கடி வெளியில் சுற்றிக்கொண்டு இருப்பார். மிகவும் தரமான ஹோட்டலில் தான் சாப்பிடுவார். இரண்டாவது வீடு சாப்பிடும் சாப்பாட்டை காட்டுவதால் அவர் நன்றாக சாப்பிடுவார். வெளியில் சாப்பிடும்பொழுது அதிக விலையில் உள்ள ஹோட்டலுக்கு சென்று சாப்பிடும் பழக்கம் உள்ளவர்.

சுக்கிரனும் சந்திரனும் சேர்ந்தால் அவர்களுக்கு சுகபோகவாழ்வு போல் வாழ்வை அமைத்துக்கொடுத்துவிடும். சுக்கிரனும் நன்றாக அமைந்து சந்திரனும் நன்றாக அமையும்பொழுது இப்படிப்பட்ட வாழ்வு கிடைக்கும்.

இரண்டில் ஒரு கிரகம் அடிப்பட்டால் கூட நல்லது நடக்காது. சுகபோகவாழ்வு வாழ வேண்டும் என்று புத்தி குறுக்கு வழியை தேடி பிடிக்கும். வாழ்வில் கெட்டுபோய்விடுவார்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

KJ said...

Sir, is he doing Business? If yes, what is placement of Saniswaran and tenth house owner. Also if Sultan, sees second House, will it be same effect?