வணக்கம்!
சோதிடம் என்பதை முன்கூட்டியே நாம் பலனை தெரிந்துக்கொண்டு அதன்படி தன்னுடைய வாழ்க்கையில் நடந்துக்கொள்ளுவதற்க்காக உள்ள ஒரு கருவி என்றே சொல்லலாம்.
சோதிடத்தை வைத்தே ஒவ்வொருவரின் குணத்தையும் தெரிந்துக்கொண்டு அவர்களிடம் எப்படி நடந்துக்கொள்ளவேண்டும் என்பதையும் நாம் கற்றுக்கொள்ளலாம்.
செவ்வாய் காரத்துவம் உடைய ஆட்கள் பெரும்பாலும் உயரமாக தான் இருப்பார்கள். அதிவேகமாக செயல்படக்கூடிய ஒரு ஆட்களாக இருப்பார்கள். இவர்கள் தான் செவ்வாயின் காரத்துவம் உடைய ஆட்கள் என்று சொல்லுவார்கள்.
செவ்வாய் காரத்துவம் உடைய வேலையை செய்யக்கூடிய ஆட்கள் பெரும்பாலும் நான் பார்த்தவரை உயரம் குறைவாக உள்ளவர்களாக இருப்பார்கள் இது எப்படி லாஜிக் இடிக்குதே என்று நான் நினைத்தது உண்டு.
கட்டடம் கட்டுவதற்க்கு செவ்வாயின் காரத்துவம் உடைய ஆள்கள் வேண்டும். இன்றைய காலத்தில் செவ்வாயின் காரத்துவம் உள்ள கட்டிடத்தை கட்டகூடிய ஆள்கள் குறைவான உயரம் உடையவர்களாக இருகின்றனர். என் எப்படி என்றால் சனியின் காரத்துவமும் இவர்களிடம் ஒட்டிக்கொள்கிறது.
இன்றைக்கு ரியல் எஸ்டேட் துறையில் உள்ளவர்களை கவனித்து பாருங்கள் அவர்கள் உயரம் குறைவாக இருப்பார்கள். பெரும்பாலும் ரியல் எஸ்டேட் துறையில் அதிக பிரச்சினை அதாவது பிராடு தனம் நடப்பதற்க்கு இவர்கள் தான் காரணமாக இருக்கும்.
செவ்வாயின் காரத்துவத்தோடு சனியின் காரத்துவமும் சேர்ந்து விடுவதால் அந்த துறையில் தில்லுமுல்லு நடக்கும். இது காலம் காலமாக நடந்த வருவதால் முடிந்தவரை எச்சரிக்கையோடு இருப்பது நல்லது.
நாளை திருச்சியில் என்னை சந்திக்கலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment