வணக்கம்!
ஒருவருக்கு லக்கினத்தில் சந்திரன் அமைந்தால் அவருக்கு நிறைய விசயங்கள் பிடிபடும். அதாவது சந்திரன் அவர்களுக்கு நிறைய கற்பனை வளத்தை மற்றும் அறிவையும் கொடுப்பார். சந்திரன் லக்கினத்தில் அமைந்தால் நிறைய பெண்களோடு தொடர்பு ஏற்படும் அதாவது நட்பாக தான் தொடர்பு ஏற்படும்.
சந்திரனை பொறுத்தவரை வளர்பிறையா அல்லது தேய்பிறையா என்பதை எல்லாம் பார்த்துவிட்டு தான் நாம் சொல்லமுடியும் என்பதால் உங்களின் ஜாதகத்தை பார்த்துவிட்டு அதன் பிறகு பலனை முடிவு செய்யவேண்டும்.
லக்கினத்தில் சந்திரன் அமைந்தால் உடனே காதல் திருமணம் நமக்கு நடக்கபோகின்றது என்று நினைப்போம் அப்படி எல்லாம் கிடையாது. நமக்கு சொந்தத்தில் அல்லது நமது இரத்தம் சம்பந்தப்பட்டவர்கள் இருக்கும் ஊர்களில் திருமணம் பெரும்பாலும் நடக்கும். இதனை வைத்து மட்டும் சொல்லிவிடமுடியாது அவர் அவர்களின் ஜாதகத்தை பொறுத்து அது மாறும்.
லக்கினத்தில் சந்திரன் அமையப்பெற்ற ஜாதகர்கள் பெரும்பாலும் மனதில் நிறைய கனவை உருவாக்கிக்கொண்டு இருப்பார்கள். அது சந்திரன் அமைந்த வீட்டை பொறுத்து அவர்களின் கனவு இருக்கும். எதிர்காலம் அல்லது இறந்தகால கனவாக இருக்கும்.
லக்கினத்தில் சந்திரன் அமையபெறுவது நல்லது தான் ஆனால் அந்த சந்திரனுக்கு தீயகிரகத்தின் பார்வை மட்டும் இருக்காமல் இருந்தால் நல்ல வாழ்க்கை கிடைக்கப்பெறுவீர்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment