Followers

Wednesday, November 14, 2018

கோவிலுக்கு செல்லகூடாது எப்பொழுது?


வணக்கம்!
          நாம் நிறைய தோல்விகளை சந்தித்து இருக்கும் காலக்கட்டத்தில் நாம் கோவில்களுக்கு செல்லக்கூடாது. பொதுவாகவே மனிதனின் மனம் தோல்வியை சந்திக்கும் காலக்கட்டத்தில் கோவில் பக்கம் மனம் செல்ல நினைக்கும். நீங்கள் கோவில் பக்கம் சென்றால் கண்டிப்பாக அந்த காலக்கட்டதில் உங்களுக்கு பிரச்சினை அதிகமாக தான் ஏற்படும்.

நம்மிடம் என்ன இருக்கின்றது என்பதை அறிந்து அந்த பலன் தான் அதிகமாக நமக்கு கிடைக்கும். கஷ்டக்காலத்தில் அனைவரும் செய்யும் தவறாகவே இது இருக்கும். நாம் கோவில் பக்கம் செல்லவேண்டாம் என்று சொன்னால் யாரும் கேட்ட மாட்டார்கள். பதிவுகளில் சொல்லிவிட்டால் கண்டிப்பாக கேட்பார்கள்.

கஷ்டக்காலக்கட்டத்தில் ஆன்மீகவாதிகளை சந்திப்பதை வைத்துக்கொள்ளலாம். ஏன் என்றால் இவர்கள் உங்களுக்கு வழிகாட்டுவார்கள். கோவில்களை விட ஆன்மீகவாதி பெரியவர்களாக என்று கேட்கலாம். ஆன்மீகவாதிகள் பெரியவர்கள் கிடையாது தான் ஆனால் அவர்கள் உங்களுக்கு சரியான ஒரு அறிவுரை அல்லது காப்பாற்றமுடியும்.

கஷ்டக்காலத்தில் வனப்பகுதிகளில் இருக்கும் கோவில்களுக்கு சென்று வரலாம். வனப்பகுதிகளில் இருக்கும் கோவில்களில் உங்களின் உடலை தூய்மைப்படுத்தி ஆத்மாவிற்க்கு பலன் சேர்த்து உங்களின் கஷ்டத்தை போக்க வழி வகுக்கும்.

கஷ்டம் வந்துவிட்டால் பொறுமையாக இருந்து உங்களை மேம்படுத்த என்ன வழி என்பதை பார்த்து செய்யவேண்டும். கோவில்களுக்கு நீங்கள் சந்தோசமாக இருக்கும் காலக்கட்டத்தில் சென்றுவந்தால் அது பெரியளவில் நல்லது செய்யும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: