வணக்கம்!
ஒரு குடும்பத்தில் இரு சகோதர்கள் இருக்கின்றார்கள் என்று வைத்துக்கொள்வோம். இதில் மூத்த சகோதர் ஒருவர் கெட்டு போய்விட்டால் இளைய சகோதர் என்ன தான் முயற்சி செய்தாலும் அவரால் முன்னேற்றம் என்பதை அடையமுடியாது.
என்னுடைய அனுபவத்தில் பல இடங்களில் நான் பார்த்த விசயம் இது. மூத்த சகோதர் சரியாக இல்லை அவர் ஊதாரியாக இருந்தால் அவரின் குடும்பத்தில் உள்ள அனைத்து நபர்களும் வீணாக போய்விடுவார்கள். மூத்த சகோதர் வீணாக போய்விடகூடாது.
பல குடும்பங்களில் மூத்த சகோதர் சொத்து முழுவதும் ஆட்டையை போட்டாலும் அவரின் குடும்பம் நன்றாக இருக்காது. அவர்க்கு பிறக்கும் வாரிசுகள் சரியாக இருக்காது. இதனை எல்லாம் புரிந்து நடந்துக்கொள்ளவேண்டும்.
ஒரு சிலர் பங்காளி சொத்துகளை திருட்டு தனமாக அபகரிப்பதும் உண்டு. பல இடங்களில் இன்றளவும் நடந்துக்கொண்டே இருக்கின்றது. இது மிகப்பெரிய கர்மத்தை நமக்கு இழுத்துக்கொள்வதாக இருக்கின்றது. பங்காளி சொத்தை அபகரித்தால் நமக்கு பெரிய கர்மமாக இருக்கும்.
நம்மால் நமக்கு தெரிந்த வரை பாவங்களை இழுக்காமல் இருந்தாலே போதுமானது. நாம் சொத்தை நமது வாரிசுகளுக்கு சேர்த்து வைக்க வேண்டியதில்லை அவர்களே அந்த ஊரை ஆள்வார்கள். உங்களால் அவ்வளவு புண்ணியத்தை கொடுக்க முடியும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment