வணக்கம்!
இன்றைய காலத்தில் ஒரு மனிதருக்கு நண்பர் என்பவர் இல்லாமல் இருக்கமாட்டார்கள். இணைய வசதியால் பல நண்பர்களை ஒவ்வொருவரும் பெற்றுக்கொண்டு நட்பு வட்டத்தை பெருக்கிக்கொண்டே செல்கின்றார்கள். நட்பு வட்டம் என்ன தான் பெரிய வட்டம் என்றாலும் மிக மிக நெருங்கிய நட்பு வட்டம் என்பது ஒரு சிலர் மட்டுமே இருப்பார்கள்.
நமக்கு எப்படிப்பட்ட நண்பர்கள் அமைவார்கள் என்பதை தெரிந்துக்கொள்ள நாம் சோதிடத்தில் பதினோராவது இடத்தை பார்த்து தெரிந்துக்கொள்ளவேண்டும். பதினோராவது இடத்தின் அதிபதி உச்சம் பெற்றால் அந்த நண்பரால் உங்களுக்கு நல்ல உதவி கிடைக்கும் என்று சொல்லலாம்.
பதினோராவது அதிபதி மறைமுக வீட்டிற்க்கு சென்றால் நட்பு வட்டத்தால் ஒன்றும் பெரியதாக இருக்காது. நட்பு வட்டம் உங்களை கொண்டு சென்று குழியில் தள்ளிவிட்டுவிடுவார்கள். உங்களை கொண்டு சென்று மாட்டிவிட்டுவிடுவார்கள்.
ஒரு சில ஜாதகர்களுக்கு நட்பால் ஜெயிலுக்கு சென்று வருவதற்க்கு எல்லாம் வாய்ப்பு இருக்கும். பதினாேராவது வீட்டு அதிபதி எட்டாவது வீட்டிற்க்கு சென்றால் இது நடைபெறும். பதினோராவது அதிபதி விரைய வீட்டில் இருந்தால் நட்பால் பெரிய இழப்பு ஏற்படுத்திவிடும்.
பதினோராவது அதிபதி இராகுவோடு சேர்ந்தால் அவர் நட்பால் பெரியளவில் பணக்காரர் ஆவதற்க்கு வாய்ப்பு உண்டு அதுவும் அவர் தவறான வழியால் சம்பாதித்து பணத்தை பெறுபவராகவும் இருப்பார். நட்பு வட்டம் அனைத்தும் தவறான வழியில் சம்பாதிபவர்களாகவே அமைவார்கள்.
இன்று ஈரோடு வரை செல்கிறேன். ஜாதக பலன் கேட்பவர்கள் இன்று தொடர்புக்கொள்ளவேண்டாம். நாளை முதல் ஜாதக பலனை கேட்கலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment