வணக்கம்!
நாம் எப்பொழுதும் சுறுசுறுப்பாக
இயங்கிக்கொண்டு இருந்தால் தான் அது நமது
ஜென்மம் எடுத்தற்க்கு ஒரு நல்ல விசயமாக
இருக்கும். சுறுசுறுப்பாக என்று சொல்லுவது கூட
மந்த மனநிலைக்கு சென்றுவிடாமல் சுறுசுறுப்பாக இயங்கினால் தான் ஒவ்வொரு நாளையும்
அர்த்தமுடியதாக நாம் மாற்றலாம்.
பலருக்கு
நல்ல வாய்ப்பு இருந்தும் அதனை நன்றாக பயன்படுத்தாமல்
அப்படியே சென்றுவிடுகின்றார்கள். ஏதோ ஒரு மந்த
நிலைக்கு சென்றுவிடுவது உண்டு. இதற்கு தான்
ஆன்மீகத்தில் இருக்கவேண்டும் என்று சொல்லுவது. ஆன்மீகம்
இந்த மந்தநிலையை போக்கி நல்ல நிலைக்கு
கொண்டு வருவதற்க்கு வாய்ப்பு அளிக்கும்.
இன்றைய
காலத்தில் பலர் முடங்கி கிடக்கின்றார்கள்.
முடங்கி கிடப்பதற்க்கு சோதிடத்தில் காரணம் இருந்தாலும் அதனை
மீறி உங்களின் உடலில் வேலை செய்து
அதனை போக்கிவிடலாம். யோகா தியானம் போன்ற
பயிற்றுவிப்பு நிலையங்கள் எல்லாம் இதனை செய்வார்கள்.
வாழ்க்கை
முடங்குவதற்க்கு மனித உடலில் உள்ள
சக்கரங்கள் தான் மிக மிக
முக்கிய காரணமாக இருக்கின்றது. உடல்
சக்கரங்கள் என்ற இடம் பாதிக்கப்படும்பொழுது
கண்டிப்பாக உங்களின் செயல்பாடு குறைந்து வாழ்க்கை
முடங்கிவிடும்.
சோதிடம்
வழிக்கொண்டு உங்களின் உடலிலும் வேலை செய்யும்பொழுது எந்த
ஒரு இடத்திலும் முடக்கம் என்பது ஏற்படவே ஏற்படாது.
இதனை நன்கு சிந்தித்து உங்களின்
வாழ்க்கையை செலுத்துங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment