வணக்கம்!
இராகு லக்கனத்தில் இருந்து
செயல்பட்டால் எப்படிப்பட்ட பலனை எதிர்பார்க்கலாம் என்று
ஒரு நண்பர் கேள்வி கேட்டுருந்தார்.
இராகு லக்கனத்தில் இருந்து செயல்பட்டால் நல்லது.
இராகு கிரகம் அவர்க்கு நல்ல
வாய்ப்பை வெளிநாட்டில் உருவாக்கிக்கொடுப்பார்.
இராகு கேது தசா நடந்தால்
அந்த ஜாதகர் வெளிநாடுகளில் சுற்றும்
வாய்ப்பு அதிகமாக இருக்கும். உள்ளூர்
ஆட்களில் தொடர்பை விட வெளியூர் ஆட்களில்
தொடர்பு அதிகமாக இருக்கும். வெளியூர்
ஆட்கள் வழியாகவே அவர்க்கு நல்லது நடந்துக்கொண்டே இருக்கும்.
இராகு கேது தசா நடக்கும்பொழுது
அந்த கிரகத்தோடு சம்பந்தப்பட்ட கிரகம் எது என்று
பார்க்கவேண்டும். அதனோடு சேரும் கிரகம்
சரியில்லை என்றால் அதனால் ஜாதகருக்கு
அந்த கிரகத்தின் தன்மை உள்ள பிரச்சினையை
ஜாதகர் சந்திக்க நேரிடும்.
உதாரணமாக
ஆறாவதுவீட்டு அதிபதி இராகுவோடு அல்லது
கேதுவோடு சம்பந்தப்பட்டு தசா நடந்தால் அந்த
ஜாதகருக்கு பிரச்சினை என்பது சண்டை சச்சரவு அதனால் வழக்கு சந்திக்க நேரிடும். ஏழாவது வீட்டில் சம்பந்தமும் இதற்க்கு வருவதால் துணை சரியாக இருக்காது.
இவர்க்கு
அவரின் துணை ஒத்து போகமாட்டார்கள்.
ஒரு சிலருக்கு வழக்கு போட்டு அவர்களை
நீதிமன்றத்திற்க்கு இழுத்துக்கொண்டு இருப்பார்கள். துணை பிரச்சினை இல்லை
என்றால் அந்த கிரகத்தின் காரத்துவம்
உடைய வேறு ஏதாவது ஒரு
பிரச்சினையை ஜாதகர் சந்திக்க நேரிடும்.
இராகுவோடு
அல்லது கேதுவோடு தீயகிரகங்கள் சம்பந்தம் இல்லை என்றால் அவர்க்கு
எந்த பிரச்சினையும் இல்லாமல் இருக்கும். இராகு கேதுவால் நன்மை
என்றே சொல்லலாம். நான் சந்தித்த ஜாதகர்களில்
இராகு கேது லக்கனத்தில் அமர்ந்தால்
அவர்களின் துணைவியார் வழியாக தான் நிறைய
பிரச்சினையை சந்திக்கின்றார்கள்.
நாற்பது
வயதிற்க்கு மேல் உள்ள ஜாதகர்கள்
தங்களின் உடல்நலனில் அதிக அக்கறை காட்டிக்கொண்டு
இருந்தால் நல்லது. இராகு கேதுவால்
உடல் பிரச்சினையை சந்திக்க நேரிடும். மருத்துவர்களின் ஆலோசனையில் உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்.
இராகு கேது செல்லும் நட்சத்திரமும்
மிக முக்கியமானது. இராகு கேது செல்லும்
நட்சத்திரத்தின் தன்மையிற்க்கு தகுந்தமாதிரி பலன்கள் இருக்கும். உதாரணத்திற்க்கு
இராகு செவ்வாய் நட்சத்திரத்தில் சென்றால் ஜாதகர் அடிக்கடி சண்டை
சச்சரவில் சிக்கும் வாய்ப்பு உருவாகும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment