வணக்கம் நண்பர்களே! ஆறாம் வீட்டு தசாவை பற்றி பல பதிவுகள் பார்த்து வந்தோம். இதுபோதும் என்று நினைத்து அடுத்து எந்த வீட்டு தசாவை பார்க்கலாம் என்று கேட்டு இருந்தேன். ஒரு நண்பர் மட்டும் பதில் அனுப்பி இருந்தார் வேறு யாரும் பதில் அனுப்பவில்லை ஏன் என்று தெரியவில்லை. இன்னும் இரண்டு நாட்கள் பார்க்கலாம்.
ஆறாம் வீட்டு தசாவை பற்றி பார்க்கும் போது எனக்கு ஒரு நோயைப்பற்றி எழுத வேண்டும் என்று தோன்றியது விரைவான பணி காரணமாக அப்பொழுது எழுதமுடியவில்லை இப்பொழுது தான் எழுதுகிறேன்.
இன்றைக்கு பல பேருக்கு இருக்கும் குறைபாடுகளில் ஆண்மைகுறைவு தான் அதிகமாக இருக்கிறது ஆனால் இதை யாரும் வெளியில் யாரும் காட்டிக்கொள்வதில்லை.
ஆண்கள் என்ன தான் சம்பாதிப்பதில் திறமை இருந்தாலும் தன் மனைவியை தாம்பத்திய வாழ்வில் திருப்தி படுத்தமுடியவில்லை என்றால் அவன் வீணானவன் ஆவான்.
பல மணவாழ்க்கை விவாகாரத்து வரை கொண்டு செல்வது இந்த ஆண்மை குறைபாடு தான் காரணமாக இருக்கிறது.
நாம விஷயத்திற்க்கு வருவோம் இந்த ஆண்மை குறைபாடு எதனால் ஏற்படுகிறது என்று பார்க்கலாம். ஆறாம் வீட்டு தசா நடைபெறும் போது ஆண்மை குறைவு ஒரு சிலருக்கு ஏற்படும். அது யாருக்கு என்று பார்க்கலாம்.
சுக்கிரனுடன் ஆறாம் அதிபதி இணைந்து ஆறாம் அதிபதி தசா நடந்தால் ஆண்மைகுறைவு ஏற்படும்.
சந்திரனுக்கு 7 ல் சனி,ராகு,கேது இருந்து ஆறாம் அதிபதி தசா நடந்தால் ஆண்மைகுறைவு ஏற்படும்.
ஆறாம் வீட்டில் சனி, சுக்கிரன் பலமற்று இருந்து ஆறாம் அதிபதி தசா நடந்தால் ஆண்மை குறைபாடு ஏற்படும்.
புதன் லக்கினமாக அமைந்து ஆறாம் அதிபதி சம்பந்தப்பட்டு தசா நடந்தால் ஆண்மை குறைபாடு ஏற்படும்.
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment