வணக்கம் நண்பர்களே ஆறாம் அதிபதியின் தசாவை பார்த்து வந்தோம் ஆறாம் அதிபதி தசாவில் தான் ஒருவருக்கு கடன் அதிக அளவு ஏற்படும் அவர் சம்பந்தப்படாமல் கடன் ஒருவர் வாங்க முடியாது என்று ஏற்கனவே பார்த்து வந்தோம்.
பணப்பிரச்சினை என்பது எல்லாருக்கும் ஏதாவது ஒரு நேரத்தில் வந்துவிடுகிறது. ஒரு சிலரை தவிர மற்ற அனைவருக்கும் பணப்பிரச்சினை வந்துவிடும். கடன் ஏற்படாமல் இருக்கின்றவர் உண்மையில் புண்ணியம் செய்தவர்கள் தான்.
பலர் கடன் வந்தவுடன் தான் ஜாதகத்தை கையில் எடுப்பார்கள். அதுவரை அவரின் ஜாதகம் எங்கு இருக்கின்றன என்று கூட தெரியாது. கடன் வருவதற்க்கு முன்பே தெரிந்தால் தானே அவற்றை தவிர்க்க முயற்சிக்கலாம். அதை விட்டுவிட்டு கடன் வந்த பிறகு மாட்டிக்கொண்டு முழிப்பது கஷ்டமான ஒன்றாக தான் இருக்கும்.
கடன் ஏற்படும் விதத்தை பற்றி பழைய பதிவுகளில் பார்த்தோம். வியாபாரத்திற்க்காக கடன் வாங்குபவர்கள் அதிக பேர் இருக்கிறார்கள். அவர்களின் வியாபாரம் நடத்துவது ஒரு இடத்தில் வைத்து நடத்தினாலும் பரவாயில்லை அந்த வியாபாரம் ஏன் நஷ்டத்தை தந்தது அதை மீண்டும் முன்னேற்ற என்ன வழி என்று பார்த்து அவர்களின் வியாபாரத்தை லாபத்திற்க்கு கொண்டுவந்துவிடலாம்.
நம்ம ஆளுங்க இருக்காங்களே . பல பேர் ஷேர் மார்க்கெட்டில் பணத்தை விட்டு விட்டு வந்து பணத்தை எப்படியாவது எடுத்துவிடவேண்டும் என்று கேட்கிறார்கள் ஷேர்மார்க்கெட் கடல் அதில் பணத்தை போட்டு பணத்தை விட்டால் என்ன செய்வது.
மறுபடியும் அதே தொகையை கையில் வைத்துக்கொண்டு ஷேர் மார்க்கெட்டில் இறங்கினால் தான் பணத்தை மறுபடியும் எடுக்கலாம். அதுவும் கடுமையான கஷ்டமாக தான் இருக்கும். உலகத்தில் நடைபெறும் எந்த ஒரு நிகழ்வும் சோதிடத்தில் சொல்லாத ஒரு விஷயம் வருவது கிடையாது. அதனால் ஷேர்மார்கெட் விஷயத்தை சமாளித்துவிடலாம்.
கடன் வாங்கிக்கொண்டு எந்த வியாபாரத்திலும் இறங்குங்கள் ஆனால் ஷேர்மார்கெட்டில் கடன் வாங்கி இறங்க வேண்டாம். சொந்த பணத்தை வைத்துக்கொண்டு ஷேர் மார்க்கெட்டில் இறங்குங்கள்.
கடனை நிவர்த்தி செய்வதற்க்கு பரிகாரம் இருக்கிறது ஆனால் அனைவருக்கும் பொதுவான பரிகாரம் கிடையாது. அந்த அந்த ஜாதகத்தை பொருத்து பரிகாரம் இருக்கின்றது அதை செய்தால் நீங்கள் கடனில் இருந்து விடுபடலாம்.
பல பேர் கும்பகோணத்திற்க்கு பக்கத்தில் ஒரு கோவிலுக்கு சென்று கடனுக்கு பரிகாரம் செய்கிறார்கள். நான் அந்த கோவிலுக்கு செல்லவில்லை. கோவிலில் கூட்டம் தாங்கமுடியவில்லை என்று ஒரு நண்பர் சொன்னார். அவ்வளவு பேர் கடனில் சிக்கி தவிக்கிறார்கள்.
உண்மையில் அந்த கோவில் கடனுக்கு பரிகாரம் தரும் தலம் கிடையாது. அது பிறவிக்கடனை தீர்க்க உதவும் ஒரு கோவில் ஆனால் கடன் வாங்கிய அனைவரும் அங்கு தான் சென்று பரிகாரம் செய்கிறார்கள்.
நம்ம மக்களை கடனில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் சொல்லுகிறேன். உங்களுக்கு பிடித்த கடவுளுக்கு மாப்பொடியில் அபிஷேகம் செய்யுங்கள் உங்களின் கடன் நிவர்த்தி ஆகும். பிடித்த கடவுள் அல்லது சிவனுக்கு கூட செய்யலாம் செய்து பாருங்கள்.
இது பொதுபரிகாரம் தான். ஜாதகத்தை பொருத்துதான் கடனுக்கு பரிகாரம் தரமுடியும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment