Followers

Sunday, November 25, 2012

ஆன்மீக அனுபவங்கள் 27



வணக்கம் நண்பர்களே !
 நான் அடிக்கடி ஆன்மீகத்தில் நல்ல நிலையில் இருப்பவர்களே சந்திக்க வெளியூர் செல்வது உண்டு பல நாட்களாக அப்படி செல்லவில்லை இப்பொழுது தான் அவர்களை சந்திக்க சென்றேன் அவர்களை சந்தித்ததில் நல்ல மன நிறைவை பெற்றேன். 

ஒரு குறை உங்களுக்கு பதிவை எழுதாமல் விட்டுவிட்டேன் ஒரு நாள் மட்டும் எழுதமுடிந்தது. பிறகு மலைகளில் ஏறவேண்டியதால் உங்களை சந்திக்கமுடியவில்லை நமது நண்பர்கள் இஷ்டதெய்வத்தை எடுப்பதைப்பற்றி நிறைய நண்பர்கள் தொடர்ந்து போன் செய்துக்கொண்டிருந்தார்கள். 

அவர்களுக்கு தெளிவான விளக்கத்தை கொடுப்பதற்க்காக இப்பதிவை எழுதுகிறேன்.

நண்பர்களே நீங்கள் ஆன்மீகத்தில் உயரவேண்டும் என்றால் ஏதாவது ஒரு தெய்வத்தை எடுப்பது நல்லது, ஏன் அவ்வாறு நான் சொல்லுகிறேன் என்றால் நீங்கள் அனைவரும் இல்லறவாழ்க்கையில் இருப்பவர்கள் உங்களுக்கு தினமும் பிரச்சினைகள் வந்து கொண்டு இருக்கும். அந்த பிரச்சினைகளை சமாளிக்க இது உதவும். 

நீங்கள் யோக தியானம் கற்கலாம் தவறு இல்லை அப்படி கற்றுக்கொள்ளும் போது உங்களின் உடல் நிலை நன்றாக இருப்பது போல் தோன்றும் ஆனால் உங்களின் பிரச்சினைக்கு அது தீர்வாகாது. இன்று அனைவரும் வெளியில் சொல்லும் போது நான் யோகா செய்துக்கொண்டு இருக்கிறேன் என்று வெளியில் ஆடம்பரமாக சொல்லிக்கொள்கிறார்களே தவிர உண்மையில் முழுமையாக யோகாவைப்பற்றி தெரிந்துக்கொள்ளவில்லை என்று தான் தோன்றுகிறது. 

இந்த யோகாவை பயிற்றுவிப்பவர்களும்  பணத்தை தான் சம்பாதிக்கிறார்களே தவிர உண்மையான யோகாவின் அனுபவத்தை தருவதில்லை என்று தான் சொல்லவேண்டும் யோகாவை கண்டுபிடித்த பதஞ்சலி எப்படி இருந்திருப்பார் என்று நினைத்து பார்த்தால் அவர் ஏதாவது ஒரு காட்டில் கஷ்டப்பட்டு இதனை கண்டுபிடித்து கொடுத்திருப்பார்.

நம் ஆட்கள் அதனை வியாபாரம் செய்து கோடிக்கணக்கான பணத்தை சம்பாதித்துக்கொண்டு சொசுகு வாழ்க்கை வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள் இதனை ஏன் உங்களுக்கு சொல்லுகிறேன் என்றால் உண்மையை சொல்லிக்கொடுக்கும் போது அதற்கு எவரும் பணத்தை வாங்கிக்கொண்டு செய்யமாட்டார்கள் பொய்யை கலந்தால் தான் வியாபாரம் செய்யமுடியும்.

ஒரு நண்பர் பேசும்போது சொன்னார் ஏதோ ஒரு ஊரில் மந்திரபயிற்சி கற்று தருகிறார்கள். அவர்கள் கட்டணத்தையும் சொல்லியுள்ளார்கள் ஒரு நாள் பயிற்சி என்றும் அதற்கு நோட் எல்லாம் வாங்கிக்கொண்டு வாருங்கள் என்றும் சொல்லியுள்ளார்கள் நான் போகாலாமா என்று கேட்டார். 

ஒரு நாள் முதல்வர் மாதிரி ஒரு நாள் குருவாக இருந்து உங்களுக்கு சொல்லிதரவுள்ளார். கண்டிப்பாக இதில் எந்தவித முன்னேற்றமும் இருக்காது உங்களின் பணம் மற்றும் நேரம் தான் விரையம் ஆகும். இது உங்களை ஏமாற்றும் வேலை எச்சரிக்கையாக இருங்கள்.

நான் பலமுறை சொல்லியுள்ளேன் எந்த ஒரு கொடுர அம்மனை அல்லது சிவனை எடுக்காதீர்கள் என்று சொன்னேன் ஆனால் நீங்கள் அதனை மறந்து காளியை எடுக்கிறேன் காலபைரவரை எடுக்கிறேன் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள் ஒரு சாந்தமான அம்மனை எடுத்துக்கொள்ளுங்கள்.

நல்ல குரு இல்லாமல் செய்வது கடினம் ஏன் இதனை பலமுறை சொல்லுகிறேன் என்றால் அவர் தான் உங்களுக்கு எல்லாம் என்று தான் சொல்லவேண்டும். மாதா, பிதா, குரு, தெய்வம் என்று வைத்தார்கள் ஏன் தெரியுமா மாதா உங்களை பெற்றவள் அவளால் தான் இந்த பூமிக்கு வந்தீர்கள் அவளை ஒருபோதும் நீங்கள் மறக்கமுடியாது. தொப்புள் கொடி உறவு அது. அது இல்லை என்றால் நீங்கள் இல்லை. மாதா இது தான் உன் தந்தை என்று சொன்னால் தான் அது உனக்கு உறவு. இரண்டாவது இடத்தில் பிதா. மூன்றாவது இடத்தில் குரு. குரு உங்களை தயார்படுத்தி இது தான் உலகம் இது தான் கடவுள் என்று காட்டினால் தான் நீங்கள் கடவுளை அடையமுடியும். 

நான் உங்களுக்கு சொல்லியுள்ளேன் குருவை பார்த்து தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னேன் ஆனால் குருவை தேர்ந்தெடுக்கும் போது நீங்கள் கண்டிப்பாக அவரைப்பற்றி தெரிந்துகொள்வது கடினம். ஏன் சொல்லுகிறேன் என்றால் உங்களால் அவருக்கு ஒன்றும் ஆகாபோறதில்லை அவரால் தான் உங்களுக்கு நல்லது நடக்கும். நீங்கள் அவரை சோதனை செய்கிறேன் என்று ஏதாவது கேட்டுக்கொண்டு இருந்தீர்கள் என்றால் அவர் நீ உன் வழியை பார்த்து போய்கொண்டு இரு நான் என்வழியை பார்த்துக்கொண்டு செல்கிறேன் என்று உங்களை அனுப்பிவிடுவார். 

ஒரு குரு என்பவர் உங்களுக்கு அவ்வளவு எளிதில் மாட்டமாட்டார் அவர் மாட்டிவிட்டார் என்றால் நீங்கள் கொடுத்துவைத்தவர் தான் என்ன நண்பர்களே நான் சொன்னது சரிதானே?.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.





3 comments:

KJ said...

Sir, very useful details. I have taken vada guru as my god. He is located near to kuchanur Saniswaran temple. Really he is very powerful. I experienced it lot.

Thanks,
Sathishkumar GS

rajeshsubbu said...

KJ said...
வணக்கம். தங்களுக்கு குரு கிடைத்துள்ளார் என்று சொல்லியுள்ளீர்கள் நன்றி உங்களுக்கு அவர் வழியாக நல்ல அனுபவம் இருந்தால் எழுதி அனுப்புங்கள் பதிவாக போடலாம் பல பேர் பயன் பெறுவார்கள்.

KJ said...

Sure sir. I will write my exp and will send to you.