வணக்கம் நண்பர்களே திருமண நிகழ்ச்சியில் ராகு கேதுகள் ஏற்படுத்தும் தோஷத்தைப்பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
திருமண வாழ்வில் இதுவும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் லக்கனத்தில் ராகு அமர்ந்தால் ஏழாவது வீட்டில் கேது அமருவார். லக்கனத்தில் கேது அமர்ந்தால் ஏழாவது வீட்டில் நான் இருக்கிறேன் என்று ராகு அமருவார். இருவரும் சேர்ந்து திருமணத்தில் பிரச்சினையை ஏற்படுத்துவார்கள்.
இருவரும் திருமணத்தில் எப்பொழுதும் பிரச்சினையை ஏற்படுத்தமாட்டார்கள். அந்த தசா நடக்கும் போது பிரச்சினையை ஏற்படுத்துவார்கள். ராகுவும் கேதுவும் அமரும் வீட்டில் உள்ள பலனை கொடுப்பதால் அந்த வீட்டின் தசா நடந்தாலும் உஷாராக இருக்க வேண்டும்.
அனைத்து லக்கனத்திலும் ஒரு மாதிரி பலனை தராது லக்கனத்திற்க்கு தகுந்த மாதிரி பலனை தரும். ரிஷப லக்கனம்,கடக லக்கனம்,சிம்ம லக்கனம்,கும்ப லக்கனம் ஆகிய லக்கனத்தை கொண்டவர்களுக்கு நல்லது செய்யும்.
இருகிரகங்களும் பொதுவாக சந்தேகங்களை ஏற்படுத்தும் அதில் இருந்து பிரச்சினையை உருவாக்கி இருவரையும் பிரிய வைக்கும். இதில் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
சோதிடர்களிடம் திருமணத்திற்க்கு ஜாதகத்தை எடுத்து காட்டினால் உங்களுக்கு ராகு கேது தோஷம் இருக்கிறது இப்பொழுது திருமணம் செய்யாதீர்கள் வயது கூடட்டும் அதன் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லிவிடுவார்கள். நீங்கள் அதனைப்பற்றி பயப்பட வேண்டாம். நீங்களாவே பரிகாரம் செய்துக்கொண்டு திருமணத்தை நடத்தலாம். ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்வது எளிது.
ராகு கேதுவை பரிகாரம் செய்துவிட்டு திருமணத்தை நடத்தினாலும் நமக்கு தான் திருமணம் முடிந்துவிட்டதே இனிமேல் நமக்கு பிரச்சினையில்லை என்று அப்படியே அதனைப்பற்றி மறந்தாலும் இருவரும் சும்மா இருக்கமாட்டார்கள். திருமணவாழ்விலும் பிரச்சினையை உருவாக்குவார்கள் அதனால் அவ்வப்போது இருவரையும் வணங்கிவருவது நல்லது.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
1 comment:
எனக்கு வயது 31 1/2 லக்கனத்தில் சனி கேது இருக்கு எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை எப்பொழுது நடக்கும்
Post a Comment