Followers

Monday, November 26, 2012

பரிகாரம் ஏன் வேலை செய்வதில்லை?



வணக்கம் நண்பர்களே !
                                  பரிகாரம் இவ்வளவு செய்தும் ஏன் பலன் ஒன்றும் நடக்கவில்லை நாங்கள் எவ்வளவு பரிகாரம் தான் செய்வது என்று பல பேர் என்னிடம் கேட்கிறார்கள் அவர்களாக இப்பதிவை எழுதுகிறேன்.

பல பிறவியை எடுத்துதான் மனித பிறப்பு வருகிறது அந்த ஆத்மாவில் பல பிறவிகள் செய்த பாவம் ஒன்று கலந்து இந்த பிறவியில் மனிதனாக வந்து கஷ்டபடுகிறது அப்படி இருக்கும் போது நாம் செய்யும் பரிகாரம் அதற்கு சரியான பரிகாரமாக அமைவதில்லை. நாம் அனைத்து பிறவிக்கும் சேர்த்து செய்யவேண்டியுள்ளது.

நம் உடம்பில் ஒரு சொட்டு விஷம் சென்றால் அதனை எடுப்பதற்க்கு அவ்வளவு கஷ்டபடவேண்டும் அந்த விஷம் இறங்குவதில் அவன் அந்தளவு படவேண்டும் அப்பொழுது மட்டுமே அந்த விஷம் இறங்கும் அதுபோல் தான் நம் ஆத்மாவில் ஒரு பாவம் ஏற்படும் போது அதனை போக்க நாம் அவ்வளவு பரிகாரம் செய்யவேண்டும்.

இந்த ஒரே காரணத்தால் தான் நாம் செய்யும் பரிகாரங்கள் வேலை செய்யாமல் போட்டு இழுத்தடிக்கிறது. விஷத்திற்க்கு விஷம் தான் மருந்து. நீங்கள் மாந்தீரீகம் துணை கொண்டு செய்யும் போது அந்த விஷம் இறங்கும்.

பொதுவாக செய்யும் பரிகாரம் எல்லாம் அந்த ஆளை வைத்து செய்வார்கள் பெரிய பூஜை செய்து பரிகாரத்தை செய்யும் போது அந்த நபருக்கு ஒரு மனநிறைவு ஏற்படும்.

மாந்தீரீகத்தில் அதை செய்பவர் மட்டும் பரிகாரத்தை அவர் இருக்கும் இடத்தில் இருந்து செய்வார். மாந்தீரீகம் செய்பவர் பணம் ஏகாபட்டது கேட்பார்கள் இது ஆயிரக்கணக்கில் வாங்குவார்கள் சில பேர் லட்சகணக்கில் வாங்குவார்கள் அது மாந்தீரீகம் செய்பவர்களை பொருத்து வேறுபடும்.

நல்ல மாந்தீரீகம் செய்பவர்கள் செய்தால் உடனே பலன் கிடைக்கும். நான் ஏற்கனவே ஒரு பதிவில் சொல்லிருந்தேன் நீங்கள் பரிகாரத்திற்க்கு பணத்தை கொடுக்கும் போது ஆயிரத்தை தாண்டவேண்டாம் என்று சொல்லிருந்தேன். நீங்கள் மாந்தீரீகம் துணை கொண்டு செய்யும் போது அவர்கள் கேட்கும் பணத்தை நீங்கள் கொடுத்து தான் ஆகாவேண்டும்.

மாந்தீரிகத்தில் நீங்கள் பரிகாரம் செய்தால் அவர் நன்றாக செய்வாரா என்று பார்த்து செய்துக்கொள்ளுங்கள்.பலபேர் இதில் ஏமாற்றுகிறார்கள் அதனால் உங்களுக்கு நம்பகமானவராக இருந்தால் செய்துக்கொள்ளுங்கள்.

என்ன இவர் போய் மாந்தீரீகத்தில் பரிகாரம் செய்ய சொல்லுகிறாரே என்று நீங்கள் நினைப்பது புரிகிறது என்ன செய்வது உடனடி தீர்வுக்கு ஹவி டோஸ் தேவைப்படுகிறது அப்படி தேவைப்படும் நேரத்தில் செய்துக்கொள்ளலாம்.

பொறுமையாக நடக்கவேண்டும் என்று நீங்கள் நினைத்தால் வழிபாட்டு முறையை பின்பற்றலாம். நன்றி நண்பர்களே.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.




3 comments:

Sundararajan Srinivasan said...

ராஜேஷ் அவர்களுக்கு வணக்கம். நான் உங்களுடைய பதிவுகளை ஆரம்பத்தில் இருந்து படிக்க ஆரம்பித்து உள்ளேன். அதில் 2010 ம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் முதல் ஒன்று முதல் பன்னிரண்டு பாவங்கள் வரை எழுதி உள்ளீர்கள். அதில் September மாதம் ஐந்தாம் வீட்டை பற்றியும் October மாதம் ஏழாம் வீட்டை பற்றி எழுதி உள்ளீர்கள். ஆறாம் வீட்டை பற்றி எழுதவில்லை. ஆறாம் வீடு விடுபட்டு உள்ளது. அதாவது ஆறாம் வீடு அதிபதி பன்னிரண்டு வீட்டில் இருந்தல் என்ன பலன் என்று. அதை பற்றி ஒரு பதிவு போடவும்.

நன்றி

சு.சீனிவாசன்
கோயம்புத்தூர்

rajeshsubbu said...

Sundararajan Srinivasan
வணக்கம் நண்பரே தங்கள் கோரிக்னையை கூடியவிரைவில் நிறைவேற்றுகிறேன்

Sundararajan Srinivasan said...

மிக்க நன்றி.