Followers

Sunday, November 4, 2012

சோதிட அனுபவங்கள்


திரு மணி என்பவர் சோதிட அனுபவங்கள் என்ற பதிவில் ஒரு ஜாதகத்தை எழுதியிருந்தேன் அந்த பதிவில்  சில கருத்துக்களை எழுதி அனுப்பினார் அவரின் கருத்துக்களுக்கு எனது பதில்

கேள்வி

/////மிதுன ராசியின் அதிபதி புதன் அந்த அதிபதி அவரை கொல்லாது என்று படித்து இருப்போம் ஆனால் இவரை கொன்று இருக்கிறது.//////

அதான் ஏன்? எப்படி? என்று சொல்லியிருக்கலாமே ஒரு வேளை ராகு சாரத்தில் புதன் இருந்ததால் ராகு 6ல் உள்ளதால் கொடூரமான மரணத்தை லக்னாதிபதியான புதனே தரும்படி ஆனதோ?

இங்குதான் ராஜேஷ் பல ஜோதிடர்கள் தடுமாறிவிடுகிறார்கள். எந்த கிரகம் தீமையை செய்யாது என்று நினைக்கிறோமோ அது கொன்றுவிடுகிறது.  எது நன்மையை தரும் என்று எதிர்பார்க்கிறோமோ அது அம்போ என்று விட்டுவிடுகிறது. 


வரும்.............. ஆனா வராது........ கதைதான் போல :) 


*//

பதில்

நன்றி மணி நீங்கள் விபரத்தை கேட்டீர்கள் நான் உங்களுக்கு அனுப்பவில்லை. நான் அனுப்பிருந்தால் நீங்கள் கண்டிப்பாக சொல்லிருப்பீர்கள். ஒரு ஆளை கொல்லுவதில் ஏழாம் வீடு மற்றும் இரண்டாம் வீட்டு அதிபதிகள் வல்லவர்கள். அந்த கணக்கில் இவரை போட்டுதள்ளிருக்கும். நமக்கு ஏற்படும் மரணம் எப்படி என்று காட்டுவது எட்டாம் வீடு எட்டாம் வீட்டு அதிபதி குரு வக்கிரமாக வேறு செல்லுகிறது. 

ஒருவருக்கு மரணம் ஏற்படுவதற்க்கு அனைத்து வீடுகளும் ஒத்துழைத்து தான் வேலையை செய்கிறது. ஒருவன் இறந்தபிறகு ஜாதகம் என்பது மூடிவிடவேண்டியது தான். மூடிவிடவேண்டியது தான் அர்த்தம் அனைத்து கிரகங்களும் தன்னுடைய வேலையை நிறுத்திவிடும். இந்த கிரகங்கள் எப்பொழுது வேலை நிறுத்துக்கிறது என்று தெரியாது ஏன் என்றால் ஒருவன் இறந்த பிறகு அவன் என்ன ஆவான் என்று சொல்லுகிற வசதி எல்லாம் சோதிடத்தில் இருக்கிறது பனிரெண்டாவது வீட்டின் துணைக்கொண்டு அந்த உடல் என்ன ஆகும் என்றும் சொல்லமுடியும் ஒருவனை புதைப்பார்களா அல்லது எரிப்பார்களா அல்லது பறவைக்கு போடுவார்களா என்று பார்க்கும் வசதி எல்லாம் இருக்கிறது.

இறப்பு விசயத்தில் சோதிடர்கள் தடுமாறுவது உண்மை தான். ஒரு சிலர் சரியாக சொல்லிவிடுவார்கள்.

இறப்பை அறிவதற்க்கு அவர்கள் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும் அவர்களுக்கும் இயற்கையாகவே சில நிகழ்ச்சிகள் நடைபெறும் அதை வைத்து அறிந்துக்கொள்ளவேண்டியது தான். 

வீட்டில் கண்ணாடி விழுந்து டையும், வீட்டில் உள்ள நாய் அல்லது மாடு திடீர் என்று இறக்கும். சில நாய்கள்,மாடுகள் தன்னுடைய வீட்டில் உள்ளவர்களுக்காக மரணத்தை ஏற்றுக்கொள்ளும் இந்த மாதிரி சில இடங்களில் நடந்து உள்ளது. அதனால் தான் மனிதன் கால்நடைகளை வீட்டில் வைத்து பராமரிக்க துவங்கினான். 

கனவில் முன்பு இறந்தவர்கள் வந்து செல்வார்கள். இறப்பவர்கள் தன்னுடைய நாக்கை தானே கடித்துக்கொள்வார்கள். படுத்தபடுக்கையாக இருப்பவர்கள் தன்னுடைய பிறப்புறுப்பில் தன் கையை வைப்பார்கள். கனவில் மீன்கள் வருவதும் இறப்பை காட்டும் ஒரு நிகழ்வு தான். கனவின் வழியாக சில விசயங்கள் நமக்கு காட்டிக்கொண்டே இருக்கிறது. இதே மாதிரி பல நிகழ்வுகள் இருக்கின்றன. நமக்கு இருக்கும் அவசரகதியால் இதை கவனிக்க தவறுகிறோம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

R.Srishobana said...

தாங்கள் கூறியபடி கேது தசை தொடங்க இருப்பதினால் ஜாதகரின் மரணம் நிகழ்ந்திருக்கலாம்...நான் ஒரு ஜோதிட புத்தகத்தில் கேது தசை தொடங்குவ‌தற்கு 6 நாட்கள் முன்பே தன் தசையின் பலன்களை கொடுக்கத் தொடங்கிவிடுவார் என்று படித்த ஞாபகம்...நன்றி