Followers

Tuesday, November 20, 2012

சுய ஜாதக குறிப்பேடு



வணக்கம் நண்பர்களே !
                     அனைவருக்கும் பிறந்த நேரத்தில் ஒரு சோதிடரை வைத்து ஜாதகம் எழுதி இருப்பீர்கள் அந்த ஜாதகத்தை நீங்கள் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் ஏன் என்றால் உங்களின் ஜாதகத்தில் கடுமையான தோஷம் ஏற்படும் போது அந்த ஜாதகத்தை எடுத்துக்கொண்டு பரிகாரம் செய்யும் போது அதனை நீங்கள் எந்த கோவிலாக இருந்தாலும் அந்த கோவில் மூலவரின் காலில் வைத்து வணங்கும்போது உங்களின் வேண்டுதல் நிறைவேறும்.

இப்பொழுது அனைவரும் கம்யூட்டரில் ஜாதகம் கணிக்கிறார்கள் தவறு இல்லை ஆனால் அதனை பிரிண்ட் எடுக்காமல் அதனை நீங்கள் கையில் எழுதிக்கொள்ளுங்கள் ஏன் அவ்வாறு சொல்லுகிறேன் என்றால் கையில் எழுதும் போது அந்த ஜாதகத்திற்க்கு உயிர் இருக்கும்.

இப்பொழுது அனைவரும் திருக்கணித பஞ்சாங்கத்தை வைத்து ஜாதகத்தை எழுதிக்கொள்கிறார்கள் ஒரு சிலர் வாக்கிய பஞ்சாங்கத்தை வைத்து எழுதுகிறார்கள் உங்களுக்கு நடப்பில் எது நடக்கிறதோ அதனை வைத்து எழுதிக்கொள்ளுங்கள் கோவில்களில் வாக்கிய பஞ்சாகத்தை வைத்து தான் திருவிழாகள் கிரகங்களின் பெயர்ச்சிகள் நடத்துகிறார்கள் எது உண்மை என்று ஆராய்வதை விட்டுவிட்டு உங்களுக்கு எது ஒத்து வருகிறதோ அதனை வைத்து எழுதிக்கொள்ளுங்கள். 

நான் ஷேர்மார்க்கெட் கணிப்பதற்க்கு திருக்கணித பஞ்சாங்கத்தை வைத்து தான் கணித்துக்கொள்கிறேன். து்ல்லியமாக வருகிறது. ஏன் இதை நான் சொல்லுகிறேன் என்றால் பங்கு மார்க்கெட்டை பொருத்தவரை ஒவ்வொரு நொடியும் முக்கியமானது. பங்கு மார்க்கெட் பல வழிகளிலும் கணிப்பார்கள். நான் ஷேர்மார்க்கெட்டுக்கு திருக்கணிதத்தை பயன்படுத்துகிறேன்.

உங்களின் ஜாதகத்தை உயிரோட்டமாக வைத்துக்கொள்ளுங்கள் உங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் போது அந்த ஜாதகத்தை உங்களின் குலதெய்வத்தின் காலடியில் வைத்து வேண்டினால் உங்களின் பிரச்சினை தீரும்.

நீங்கள் கம்யூட்டரில் பிரிண்ட் எடு்த்து இருந்தாலும் அதனை ஒரு நோட்டில் நீங்கள் எழுதிவைத்துக்கொள்வது நல்லது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


5 comments:

KJ said...

Sir, thank you very much for useful info. Kindly let us know how to calculate to get profit in shares.

கார்த்திக் சரவணன் said...

அடுத்தமுறை குலதெய்வம் கோவிலுக்குச் செல்லும்போது செய்கிறேன்.. பயனுள்ள தகவல்கள்.. நன்றி...

Sundararajan Srinivasan said...

ஷேர்மார்க்கெட் பற்றி ஒரு பதிவு போடுங்கள்.

rajeshsubbu said...

//* KJ said...
Sir, thank you very much for useful info. Kindly let us know how to calculate to get profit in shares. *//

வணக்கம் நண்பரே ஷேர்ரைப்பற்றி கணிப்பது எல்லாம் வேறு ஒரு சமயத்தில் பார்க்கலாம். ஏன் என்றால் நமது மக்கள் அதனையை எடுத்துக்கொண்டு தொழிலாக செய்ய ஆரம்பிப்பார்கள் அதுவும் தமிழன் இருக்கிறான் பாருங்கள் உட்கார்ந்து கொண்டு எப்படி சம்பாதிக்கலாம் என்று பார்ப்பதில் கில்லாடி.

rajeshsubbu said...

//* ஸ்கூல் பையன் said...
அடுத்தமுறை குலதெய்வம் கோவிலுக்குச் செல்லும்போது செய்கிறேன்.. பயனுள்ள தகவல்கள்.. நன்றி... *//

வணக்கம் நண்பரே கண்டிப்பாக செய்து பயன்பெறுங்கள்