Followers

Tuesday, March 31, 2015

வீடு கட்ட பரிகாரம்


வணக்கம்!
          ஒவ்வொரு மனிதனக்கும் மிகப்பெரிய ஆசை எது என்று கேட்டால் அது தனக்கு ஒரு வீடு வேண்டும். சொந்த வீடு கட்டவேண்டும் என்று நினைப்பார்கள்.

நான் சந்திக்கும் நண்பர்கள் அனைவரிடமும் உங்களுக்கு என்று ஒருவீட்டை கட்டிக்கொள்ளுங்கள் என்று சொல்லுவேன். பல பேர்களுக்கு நான் அதற்கு வழி செய்துக்கொடுத்து இருக்கிறேன்.

நிலத்திற்க்கு காரகம் வகிக்கும் முருகனை வழிப்பட்டு வந்தால் உங்களுக்கு என்று சொந்த நிலம் அமைந்து அதில் வீடும் கட்டிக்கொள்ள வழி செய்வார். பொதுவாக முருகனின் ராசி என்று சொல்லும் மேஷம் மற்றும் விருச்சிக ராசி நண்பர்கள் அனைவரும் வீட்டின் மீது ஒரு காதலே ஏற்படுத்தி வைத்திருப்பார்கள்.

உங்களுக்கு வீடு இல்லை என்றால் முருகனை மனமார பிராத்தனை செய்துக்கொண்டு வாருங்கள். ஏதாவது ஒரு பிரசித்திபெற்ற முருகனின் கோவிலுக்கு சென்று வாருங்கள். உங்களுக்கு வீடு அமையும்.

நான் உங்களை சந்திக்கும்பொழுது எனக்கு வீடு இல்லை அதற்கு வழி செய்யுங்கள் என்று சொன்னால் உங்களை அழைத்துக்கொண்டு ஏதாவது ஒரு முருகன் கோவிலுக்கு சென்று வருவேன். அதன் வழியாக உங்களுக்கு வீடு அமையும்.

என்னை சந்தித்த பல நண்பர்களுக்கு இப்படி தான் அவர்களுக்கு வீடு கட்ட வழி செய்துக்கொடுத்து இருக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, March 30, 2015

சனி தசா பகுதி 11


வணக்கம் !
          சனிதசாவைப்பார்த்து நீண்ட நாட்களாகிவிட்டது. சனிதசாவைப்பற்றி இப்பதிவில் பார்க்கலாம். ஒருவருக்கு மேஷத்தில் இருந்து சனி தன்னுடைய தசாவை நடத்தினால் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

மேஷத்தில் சனி நீசம் என்பதால் நல்ல பலனை நாம் எதிர்பார்க்கமுடியாது. நீசசனியை சுபகிரகங்கள் உங்களின் ஜாதகத்தில் பார்த்து சனிதசாயை நடத்தினால் அதிக பாதிப்பை தராது. சுபகிரகங்கள் பார்வை இல்லை என்றால் பிரச்சினை சற்று அதிகமாக இருக்கும்.

மேஷத்தில் சனி இருப்பதால் அதிகமாக சனியின் தசாவில் விபத்துக்களை சந்திக்க நேரிடும். ஒரு சிலருக்கு இருக்கும் இடத்தில் இருந்து வெளியிடங்களுக்கு செல்ல வைக்கும்.உடலில் தீக்காயங்கள் கூட ஏற்படும். தீக்காயத்தால் பாதிக்கப்பட்டு தோல் பிரச்சினை ஏற்படும்.

விவசாய நண்பர்களாக இருந்தால் மிகுந்த எச்சரிக்கையோடு இருப்பது நல்லது. விவசாயத்தில் நீங்கள் வருமானத்தை பார்க்கவே முடியாதபடி செய்துவிடும்.

தசா பாதி காலம் பிரச்சினை தந்து பிறகு இருக்கும் பாதி காலம் நல்ல பலனை தரும். கருப்பு நிறத்தில் இருக்கும் பொருட்களை வைத்து நீங்கள் வியாபாரம் அல்லது விவசாயம் செய்து நல்ல பலனை பெறமுடியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, March 29, 2015

அம்மன் அருள்


வணக்கம்!
          நம்மை சந்திப்பவர்களுக்கு எப்படியும் ஒரு வாய்ப்பை அம்மனை வைத்து வழங்கிவிடுகிறேன். அந்த வாய்ப்பை தவறவிடுபவர்கள் அதிகம் பேர் இருக்கின்றனர்.

நண்பர்கள் பல பிரச்சினைகளுக்கு நம்மை சந்திக்க வருகின்றனர் அதுவும் தொழில் துறையில் உள்ளவர்கள் அதிகம் வருவார்கள். அவர்களின் பிரச்சினைகளை போக்க முதலில் அம்மனை வைத்து வாய்ப்பை மட்டும் கொடுப்பது உண்டு. ஜாதகத்தை கையில் எடுக்காமல் அம்மனை மட்டும் வேலை வாங்குவது உண்டு.

அம்மன் எப்படியும் ஒரு நல்ல வாய்ப்பை கொடுக்கும். நம்ம ஆட்கள் விழிப்பு இல்லாமல் அதனை தவறவிடுபவர்கள் உண்டு. நான் எப்படியும் காப்பாற்றவேண்டும் என்று தான் நினைக்கிறேன். நம்ம ஆட்களின் விதியா அல்லது அறிவு இல்லாததனமா என்று தெரியவில்லை அதனை விட்டுவிடுகிறார்கள்.

இனிமேலும் வருபவர்கள் கொஞ்சம் விழிப்புணர்வோடு வாருங்கள். அம்மன் வாய்ப்பை தவறவிடகூடாது என்று வாருங்கள். நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, March 26, 2015

கிரக பாதிப்பு பரிகாரம்

வணக்கம் !
          நாம் பல நேரத்தில் செவிடாக இருப்பது நல்லது. ஏன் என்றால் நாம் பெரிய வீரன் என்று நம்மை நாம் அறியாமல் ஏதாவது வம்பு இழுத்துக்கொண்டு அதுவே பிரச்சினையாக மாறிவிடுவதும் உண்டு. 

மூன்றாவது வீட்டில் உள்ள கிரகங்கள் அதிக பலம் பெற்றால் நன்மை என்று சோதிடத்தில் சொல்லுவார்கள். அப்படி வலு பெறும்பொழுது அவன் சும்மா இருக்கமாட்டான் பக்கத்தில் நடக்கும் சண்டையை என்னுடைய சண்டை என்று இழுத்துக்கொண்டு வம்பு இழுத்துக்கொண்டு நிற்பான்.

இன்றைய காலத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு இருப்பவர்களை கூட இந்த உலகம் விடுவதில்லை. சீண்டி பார்த்து சிரழித்துவிடும். நமது ஜாதகத்தில் காதிற்க்கு மூன்றாவது வீட்டை தான் சொல்லுவார்கள். அந்த மூன்றாவது வீடு கெட்டால் காது கெட்டுவிடும் என்பார்கள். உண்மையில் இந்த வீடு கெட்டு காது கெட்டாலும் பரவாயில்லை. தேவையில்லாத விசயங்களை காதில் போட்டு அதனால் சண்டை வருவதைவிட காது கேட்காமல் இருப்பது நல்லது.

நமக்கு ஏற்படும் சூழ்நிலை கூட நமக்கு பிரச்சினையை ஏற்படுத்திவிடும். வம்பு கூட தானாகவே வந்துவிடுவதும் உண்டு. இதற்கு எல்லாம் என்ன பரிகாரம் என்றால் காது செவிடாக இல்லாவிட்டாலும் காதிற்க்கு வரும் செய்தியை உள்வாங்கிக்கொள்ளாதீர்கள்.

இன்று இரவு வெளியூர் பயணம். நாளை அந்த ஊரில் இருக்கும் நண்பர்களை போனில் தொடர்புக்கொண்டு சந்திக்கிறேன். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சக்தி


வணக்கம்!
         சக்தியைப்பற்றி நண்பர் பரமேஸ் ஒரு கேள்வி கேட்டுருந்தார். அதனை சம்பந்தப்படுத்தி ஒரு கருத்தை பார்க்கலாம். ஒரு மனிதரிடம் சக்தி இருக்கிறது என்பதை நாம் எவ்வாறு அறிந்துக்கொள்வது என்று கேட்டார்.

நீங்கள் ஆன்மீகத்தில் இருந்தால் அறிந்துக்கொள்ளமுடியும் அல்லது ஒரு சக்தி உள்ள மனிதன் நம்மை பார்க்கும்பொழுது நமது இடுப்பில் வலி ஏற்படும். நமது குண்டலிணி சக்தி மேலே எழும்பொழுது நமது இடுப்பில் வலி ஏற்படும்.

ஆண்களை விட பெண்கள் எளிதில் அறிந்துக்கொள்வார்கள். குண்டலிணி சக்திக்கு முதுக்கெலும்பு மிக முக்கியபங்கு வகிக்கிறது. ஆண்களின் முதுக்கெலும்பு வலிமைடையதாக இருக்கும். குண்டலினி மேலே எழும்பொழுது ஆண்களால் அவ்வளவு எளிதில் கண்டுக்கொள்ளமுடியாமைக்கு இது கூட ஒரு காரணம் இருக்கலாம். பெண்களின் முதுகெலும்பு வலிமை குறைவாக இருப்பதால் சக்தியை தாக்குபிடிப்பதில்லை. இடுப்பில் வலி வந்து அவர்கள் எளிதில் புரிந்துக்கொள்வார்கள்.

ஒரு சில தியான மையங்களில் கூட நமது பின்புறத்தை தொட்டு குண்டலினி சக்தியை எழுப்புவார்கள். சக்தி உடைய மனிதர்கள் பார்வைபடும்பொழுதே குண்டலினி மேலே எழும். அதனை வைத்தே நாம் சக்தி உடைய மனிதர் என்று அறிந்துக்கொள்ளமுடியும்.

ஒரு சிலரின் சக்தி தாங்காமல் தலையை விட்டே வெளியில் போகும். அப்பொழுது சக்தியை கொடுப்பவர் அவரின் கையை சம்பந்தப்பட்டவரின் தலையில் வைத்து நிறுத்தவேண்டும். இது கொஞ்ச பெரிய விசயம் அனுபவத்தில் உள்ளவர்களால் மட்டுமே புரிந்துக்கொள்ளமுடியும்.

உங்களின் முதுக்கெலும்பை கொஞ்சம் வருடி கொடுங்கள். தடைப்பட்ட சக்தி மேலே செல்லுவதற்க்கு வழி வகுக்கலாம். கொஞ்சம் எச்சரிக்கையோடு செய்வது நல்லது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, March 25, 2015

கிரக பாதிப்பு பரிகாரம்


வணக்கம்!
          நமக்கு வரும் பிரச்சினைப்பற்றியும் அதன் வழியாக நம்மை நாமே மாற்றிக்கொள்ளும் வழியிலும் பரிகாரத்தை சொல்லிவருகிறேன். அடுத்தாக நாம் பார்க்க போகும் இந்த கருத்து அனைவருக்கும் மிகவும் பயன்படும் என்று நினைக்கிறேன்.

மனிதன் அவனுடைய பிரச்சினையை பார்ப்பது கிடையாது. அடுத்தவன் என்ன செய்கிறான் என்பதில் தான் அதிக கவனத்தை எடுத்துக்கொள்கிறான். தன்னை சுயபரிசோதனை செய்துக்கொள்வதற்கே வாழ்நாள் போதாது. 

சோதிடத்தை எடுத்துக்கொண்டாலும் அதில் என்ன இருக்கிறது என்பதை பார்ப்பதை விட்டு விட்டு அடுத்தவர்களுக்கு பலன் கூறுவதில் தான் நாம் கவனம் செலுத்துவோம். நமது ஜாதகத்தில் ஆயிரம் பிரச்சினை வரும் அதனை பார்ப்பது கிடையாது அடுத்தவர்கள் ஜாதகத்தை ஆராய்ந்துக்கொண்டு வருவோம்.

தன்னுடைய ஜாதகத்தை ஆராய்ந்துவிட்டால் நாம் முன்னேறிவிடலாம். நமக்கு என்ன வருகிறது என்ன நடக்கிறது என்பதை நாம் பார்க்கவேண்டும் அப்பொழுது தான் நாம் முன்னேற்ற பாதையில் செல்லமுடியும்.

உங்களுடைய ஜாதகத்தை எடுத்துக்கொண்டு குறைந்த பட்சம் ஒரு வருடகாலம் என்ன நடந்தது என்ன நடக்கிறது என்ன நடக்கபோகிறது என்று பார்த்து வாருங்கள். உங்களின் பிரச்சினை என்ன என்று தெரிந்துவிடும். அதன் பிறகு அதற்கு பரிகாரம் என்ன என்று பார்த்துக்கொள்ளலாம்.

எந்த காலகட்டத்தில் பிரச்சினை வந்தது. எந்த காலகட்டத்தில் சந்தோஷம் வந்தது என்று பாருங்கள். உங்களுக்கே தெரிந்துவிடும் பிரச்சினை எந்த கிரகம் தந்தது  அதற்கு என்ன செய்யலாம் என்று புரிந்துவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, March 24, 2015

காடுகள்


வணக்கம்!
          ஆன்மீகப்பயிற்சி செய்வதற்க்கு காடுகளை தேர்ந்தெடுத்து அங்கு ஆன்மீகப்பயிற்சியை கொடுப்பார்கள். ஒரு சிலர் கோவில்களை தேர்ந்தெடுத்து அங்கு ஆன்மீகப்பயிற்சி கொடுப்பார்கள்.

வனத்தில் ஆன்மீகப்பயிற்சி செய்வது என்பது மிகப்பெரிய அளவில் அது பயன்தரும் என்பதற்க்காக அதிகப்பட்சம் காடுகளை ஆன்மீககுருக்கள் தேர்ந்தெடுப்பார்கள். நான் கூட காடுகளில் ஆன்மீகப்பயிற்சி செய்தது உண்டு.

இந்தியா ஆன்மீகப்பயிற்சி செய்தர்க்கு ஏற்ற நாடு என்று சொல்லுவது எல்லாம் கூட இந்தியாவில் இருக்கும் காடுகளை நம்பி தான் சொல்லுவார்கள். இன்றைய காலத்தில் காடுகளில் ஆன்மீகப்பயிற்சி செய்வது என்பது கடினமான ஒன்றாகவே மாறிவிட்டது.

காடுகள் முழுவதும் மனிதன் நாசம் செய்ய தொடங்கிவிட்டான் என்று சொல்லலாம். காடுகளை அழிப்பது அல்லது காடுகளில் இருந்து தேசவிரோத செயல்களில் ஈடுபடுவது எல்லாம் காடுகளில் தான் நடைபெறுவது என்பதால் இருக்கும் காடுகளில் மிகப்பெரிய அளவில் பாதுகாப்பை ஏற்படுத்திவிட்டார்கள்.

ஒரு வாரத்திற்க்கு முன்பு கூட ஆந்திரா அரசு அறிக்கை வெளியிட்டது என்று பேப்பரில் பார்த்தேன். காடுகளுக்குள் யாராவது சென்றால் சுடலாம் என்ற உத்தரவு பிறப்பித்துள்ளதாக வெளியானது.

ஒவ்வொரு காடுகளுக்கும் செல்லுவது என்பது மிகப்பெரிய கஷ்டம். அந்தளவுக்கு பாதுகாப்பை வனத்துறையினரால் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. காடுகளின் தன்மை எல்லாம் சென்று இன்று மனிதன் வாசம் புரியும் இடமாகவே மாறிவிட்டது. நான் சென்ற காலத்தில் உள்ள காடுகள் எல்லாம் இன்று மாறிவிட்டது. அதன் இயற்கை தன்மை போய்விட்டது என்றே சொல்லலாம்.

தற்பொழுது இருக்கின்ற காலகட்டத்திலேயே நீங்கள் சென்று வந்துவிடுங்கள். எதிர்காலத்தில் எப்படி மாறும் என்று சொல்லமுடியாது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

காரிய வெற்றி


வணக்கம்!
          ஒரு வேலை நடைபெறவேண்டும் என்றால் அந்த வேலை முதலில் ஆரம்பித்து கடைசி வரை எந்த வித தடங்கலும் இன்றி செல்லவேண்டும். ஒன்பது கிரகங்களுக்குள் ஒன்று அல்லது இரண்டு கிரகங்கள் அந்த வேலையை செய்யவிடாமல் செய்வதற்க்கு பல வழிகளை கையாளும். ஒரு சிலருக்கு ஒன்பது கிரகங்களும் வரிந்துகட்டிக்கொண்டு செய்யவிடாமல் செய்துவிடும்.

 ஒரு காரியம் நடந்தால் நான் நன்றாக இருப்பேன் என்று நினைத்தால் முதலில் அந்த காரியத்தை தொடங்கும்பொழுதே உங்களின் முன்னோர்களின் ஆசி,குலதெய்வத்தின் ஆசி மற்றும் இஷ்டதெய்வத்தின் ஆசி அனைத்தையும் வாங்கிவிட்டு அந்த காரியத்தை தொடங்குங்கள்.

பல முயற்சி எடுத்து தோற்றவர்களிடம் நாம் கேட்டால் கடைசி நேரத்தில் அந்த வாய்ப்பு போய்விட்டது என்று சொல்லுவார்கள். அதற்கு காரணம் அவர்களின் முன்னோர்களின் ஆசி அவர்களுக்கு கிடைக்கவில்லை என்று அர்த்தம் கொள்ளவேண்டும்.

வாய்ப்பு வந்து அதனை சொதப்பிவிட்டால் அந்த இடத்தில் குலதெய்வத்தின் ஆசி உங்களுக்கு கிடைக்கவில்லை என்று அர்த்தம். குலதெய்வம் உங்களை பலி வாங்கிவிட்டது என்று எடுத்துக்கொள்ளலாம். ஒரு சிலர் இஷ்டதெய்வத்தின் துணைக்கொண்டு வெற்றி பெறுபவர்களாகவும் இருப்பார்கள். இதனை பெறுவதற்க்கு முயற்சி செய்துவிட்டு ஒரு காரியத்தை வெற்றிகரமாக தொடங்குங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, March 22, 2015

பயண அனுபவம்


வணக்கம் !
          இரண்டு நாட்களாக கோயம்புத்தூரில் தங்குவதாக அமைந்துவிட்டது. வெளியூர் பயணங்கள் அனைத்தும் அங்குள்ள நமது தொழில் நண்பர்கள் வழியாக ஏற்பாடு செய்யப்படுகிறது. முதல் நாள் வால்பாறை சென்று அங்குள்ள பாலாஜி கோவில் தரிசனம் செய்தோம். 

காரமலை என்ற எஸ்டேட்டில் தான் பாலாஜி கோவில் இருக்கின்றது. இது தனியாருக்கு சொந்தமான கோவில். இந்த கோவிலை பார்க்கவேண்டும் என்று நினைத்து இருந்தேன். கோயம்புத்தூர் நண்பர் இதனை ஏற்பாடு செய்துக்கொடுத்துவிட்டார். அவரும் அவரது மகனும் என்னோடு வந்திருந்தார். 

உயர்ந்த மலையில் இயற்கையான இடத்தில் கோவில் இருப்பது அதனை தரிசனம் செய்யும்பொழுது நமக்கு நல்ல அனுபவம் ஏற்படும். பொதுவாக இந்த பயண ஏற்பாட்டிற்க்கு என்று அதிக செலவு நமது தொழில் நண்பர்கள் செய்கின்றனர்.

ஒவ்வொரு பயணத்திலும் ஒரு நல்ல அனுபவம் அவர்களுக்கு ஏற்படும். அவர்களும் மனமகிழ்ச்சியோடு அதே நேரத்தில் பல நல்ல தகவல்களையும் அவர்கள் பெறுகின்றனர். அம்மனின் அருளும் அவர்களுக்கு கிடைக்க வழி செய்கிறேன்.

இரண்டாவது நாள் கோவை குற்றாலம் என்ற இடத்திற்க்கு சென்றோம். கோவை குற்றாலம் என்ற இடத்தில் குறைந்தளவு தண்ணீர் வருகிறது. மூன்று மாதத்திற்க்கு பிறகு தண்ணீர் வருகிறதா என்று கேட்டு தெரிந்தக்கொண்ட பிறகு சென்று வாருங்கள். பிறகு பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தரிசனம் முடிந்து மறுபடி கோயம்புத்தூர் வந்தோம். இன்று காலை தஞ்சாவூர் வந்துவிட்டேன். ஒரே இடத்தில் நீங்கள் வாழ்நாளை கழித்துவிடாமல் கிடைக்கும் நேரத்தில் அனைத்து இடத்திற்க்கும் சென்று வாருங்கள். படம் நெட்டில் இருந்து எடுக்கப்பட்டது.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, March 21, 2015

கர்மவினை


வணக்கம்!
          நேற்று ஒரு நண்பரிடம் பேசும்பொழுது என்னிடம் சொன்னார். மனிதன் எப்படி சம்பாதித்தாலும் அதிகப்படியாக பத்து வருடம் நன்றாக வாழ்கிறான் அதன் பிறகு கீழே விழுந்துவிடுகிறான். மனிதன் நல்லது செய்வதை விட பாவத்தை அதிகம் செய்வதால் இப்படி வருகிறது என்று சொன்னார். 

உங்களுக்கு நன்றாக சோதிடம் தெரியும் எப்படிப்பட்ட தசாவாக இருந்தாலும் அது அதிகப்பட்சம் பலனை பனிரெண்டு வருடங்களுக்கு மேல் தராது. அப்படியே போனாலும் முழுப்பலனும் இருபது வருடங்கள் தரலாம். அதன் பிறகு தசா மாறிவிடும் பிறகு வரும் தசா பிரச்சினையை தந்து நமக்கு சோதனையை தந்துவிடும்.

பத்து வருடங்கள் தான் நமக்கு பலனை தரும் அதன் பிறகு பிரச்சினை தரும் என்பதற்க்காக நாம் உழைக்காமல் இருந்துவிடமுடியாது. எதையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒரு கிரகம் முழுமையாக நன்மையை நமக்கு தராது என்பது தெரியும். பாதி நன்மையும் பாதி தீமையும் தரும். நன்மையை நாம் எப்படி ஏற்றுக்கொண்டோமோ அதைப்போல் தீமையும் ஏற்றுக்கொள்ள வேண்டியது தான்.

தீமை தரும் காலக்கட்டத்தில் நாம் கடவுளின் பக்கம் அதிகம் கவனத்தை செலுத்தினால் அந்த காலம் நமது கர்மவினையை குறைப்பதற்க்காக கடவுள் தந்த ஏற்பாடு என்று எடுத்துக்கொள்ளலாம்.

எப்படிப்பட்ட மோசமான கிரகநிலைகள் வந்தாலும் கவலைப்படாமல் ஏற்றுக்கொண்டு வாழ்ந்து பார்த்துவிடவேண்டும் என்று கடவுளின் மேல் பாரத்தை போட்டுக்கொண்டு செயல்படுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, March 20, 2015

கிரக பாதிப்பு பரிகாரம்


வணக்கம் !
          கிரகபாதிப்பிற்க்கு நாம் எளிமையான பரிகாரத்தைப்பற்றி பார்த்து வருகிறோம். அதில் மேலும் ஒரு தகவலைப்பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

நமக்கு கிரக நிலைகள் பாதிப்பை ஏற்படுத்தினால் முதலில் நாம் சம்பந்தமே இல்லாமல் அடுத்தவர்களிடம் வாயை விட்டு மாட்டிக்கொள்வோம். அதாவது சம்பந்தமே இல்லாமல் அடுத்தவர்களைப்பற்றி பேசி நாம் மாட்டிக்கொள்வது. இந்த அனுபவமும் உங்களுக்கு ஏற்பட்டு இருக்கும்.

பொதுவாகவே நாம் சம்பந்தம் இல்லாமல் அடுத்தவர்களின் விசயத்தில் தலையீடு செய்யகூடாது.தலையீடு செய்தோம் என்றால் அவர்க்கு நாம் உதவி செய்யும் நிலையில் இருந்தால் செய்யலாம். நம்மால் அடுத்தவர்களுக்கு எந்த விதத்திலும் உதவி செய்யமுடியவில்லை என்றால் ஒதுங்கி இருப்பது நல்லது.

நம்மை நாம் ஒழுங்குப்படுத்திக்கொள்வதற்க்கே நேரம் இருக்காது. இதில் அடுத்தவர்களுக்கு ஏன் நாம் ஏதாவது செய்கிறோம் என்று மாட்டிக்கொள்ளவேண்டும். சம்பந்தமே இல்லாமல் பேசாமல் இருப்பது மிகச்சிறந்த பரிகாரமாக இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, March 19, 2015

செல்வ வளம்


வணக்கம்!
          செல்வ வளத்திற்க்கு என்று நிறைய பதிவுகளை நான் கொடுத்து இருக்கிறேன். புதிதாக ஒரு விசயத்தைப்பற்றி உங்களுக்கு சொல்லுகிறேன்.

நீங்கள் திருமணமானவர்களாக இருந்தால் உங்களின் மனைவி தான் உங்களுக்கு எல்லாமே என்று மாறிவிடும். உங்களுக்கு நல்லது மற்றும் கெட்டதை தருபவளாக மனைவி இருப்பார்கள். உங்களின் மனைவியை பார்த்தாலே நீங்கள் வெற்றி பெறுவீர்களாக அல்லது தோல்வி பெறுவீர்களாக என்பதை சொல்லிவிடலாம்.

உங்களுக்கு கிடைக்கும் சக்திகளில் பெண்ணாக இருப்பவள் கொடுக்கும் சக்தி என்பது வழிபடும் அம்மனால் கூட உங்களுக்கு கொடுக்கமுடியாது. உங்களின் மனைவி உங்களுக்கு சக்தியை தருகிறாள் என்பதைப்பற்றி நான் பழைய பதிவில் சொல்லியிருக்கிறேன்.

உங்களின் மனைவி உங்களுக்கு சக்தி மட்டும் கொடுக்கமட்டும் இல்லை செல்வவளமும் உங்களுக்கு கொடுக்கிறார் என்பதைப்பற்றி தான் சொல்லபோகிறேன்.

பொதுவாக பெண்கள் குங்குமத்தை மட்டும் நெற்றியில் திலகம் அணிவார்கள். நல்ல சந்தனத்தை நெற்றியில் இட்டு அதன் மேல் குங்குமத்தை வைக்க சொல்லுங்கள். உங்களுக்கு செல்வவளம் வரும். சந்தனத்தில் ஜவ்வாது கலந்து நெற்றியில் தினமும் வைத்துக்கொண்டு வரச்சொல்லுங்கள். விரைவில் செல்வவளம் உங்களை தேடி வரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சனி தசா பகுதி 10


வணக்கம்
          நான் பல பேர்களை சந்திக்கும்பொழுது அதுவும் பிரச்சினையில் சிக்கி இருப்பவர்களை சந்திக்கும்பொழுது அவர்களின் பீடை என்னை வந்து தாக்குவதை நான் உணர்ந்து இருக்கிறேன். எத்தனையோ வழிகளை சொல்லி அதனை பின்பற்றாமல் பீடையோடு இருக்கும் நண்பர்களை பார்த்து நான் பரிதாபப்படமட்டும் தான் முடியும் தவிர வேறு ஒன்றும் என்னால் செய்யமுடியாது என்று நினைப்பது உண்டு.

சனி கெட்டு ஒருவருக்கு தசா நடந்தால் அவருக்கு இப்படிப்பட்ட பீடைகள் இருக்கும் என்பதை பல பேர்களிடம் நான் பார்த்தது உண்டு. ஒரு சிலருக்கு ஏழரை சனி மற்றும் அஷ்டசனி காலத்தில் கூட இப்படி நடப்பது உண்டு.

சனித்தசாவுக்கு ஒரு நல்ல பரிகாரம் என்றால் அது எண்ணெய் தேய்த்து குளிப்பது. சனிக்கிழமை அன்று நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வாருங்கள் என்று நான் சொல்லி இருக்கிறேன். உங்களுக்கு சனி தசா நடந்தால் கண்டிப்பாக இதனை பின்பற்றி வாருங்கள்.

சனித்தசா ஒரு சிலருக்கு நல்லது செய்யும். சனிக்கிரகம் நல்ல நிலைமையில் இருந்து தசாவை நடத்தும்பொழுது அவர்களும் இந்த குளியலை பின்பற்றி வந்தால் பல நல்ல பலன்களை அடையமுடியும்.

சனி தசாவைப்பற்றி எழுதும்பொழுது ஒரு நண்பர் என்னிடம் எல்லாேரும் சொல்லும் பொதுப்பலன்களை மட்டும் எழுதுகிறீர்கள் உங்களிடம் நிறைய எதிர்பார்க்கிறோம் என்று கேட்டார். நான் சனித்தசா ஆரம்பிக்கும்பொழுதே இதனை சொல்லிவிட்டேன். எல்லாம் பொதுப்பலன்களாக தான் எழுதபோகிறேன் என்று சொல்லிவிட்டேன். என்னை சந்திக்கும்பொழுது சனித்தசாவைப்பற்றி கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, March 18, 2015

பயண அனுபவம்


வணக்கம்!
          நேற்று காலை சென்னையில் இருந்து தஞ்சாவூர் வந்துவிட்டேன். நேற்று காலையில் ஊருக்கு வந்தவுடன் திருச்சியில் இருந்து ஒரு நண்பர் என்னை அழைக்க வந்துவிட்டார். அவரோடு திருச்சிக்கு சென்று இரவு தான் திருப்பினேன். தொடர் வேலை காரணமாக உங்களுக்கு பதிவை தரமுடியவில்லை.  நாளை மதியம் கோயம்புத்தூர் பயணம்.

பதிவு
     சென்னை நண்பர்களை சந்திக்கும்பொழுது ஒரு சில விசயங்கள் தெரிந்தன. அதாவது எல்லாேரும் ஏதாவது ஒரு பிரச்சினையில் மாட்டிக்கொள்கின்றனர். அதில் இருந்து வெளிவருவதற்க்கு மிகவும் கஷ்டப்படுகின்றனர். அனைத்து பிரச்சினைக்கும் அடிப்படை பணம்.

அடையாரில் ஒரு இனிப்பு கடை உள்ளது. பல ஊர்களில் அதற்கு கிளைகள் உள்ளன. அந்த கடை உரிமையாளர் வீட்டில் பார்த்தால் மாதந்தோறும் அடிக்கடி பூஜை நடந்துக்கொண்டிருக்கும். அவர்க்கு தான் பணம் நிறைய இருக்கிறதே அப்புறம் எதற்கு அவர் பூஜை செய்யவேண்டும் என்று நான் நண்பர்களோடு பேசிக்கொண்டு இருப்பேன்.

பணத்தை தக்க வைத்துக்கொள்வதற்க்கும் அந்த பணமும் மேலும் மேலும் பெருகுவதற்க்கும் அவர் பூஜை செய்துக்கொண்டே இருக்கிறார். அவருக்கு பணம் பெருகிக்கொண்டே இருக்கிறது. பல மார்வாடி இதனை செய்கின்றனர்.

நம் ஆட்கள் பணத்தையும் பெருக்குவதில்லை பணத்தை சம்பாதிப்பதும் இல்லை. பணத்தை இவர்கள் சம்பாதிப்பதே டாஸ்மாக்கில் குடிப்பதற்க்கு மட்டுமே பயன்படுத்துக்கின்றனர். நம்ம ஆட்கள் அதில் ஏதாே ஒன்றை கண்டுள்ளனர். சொர்க்கம் மதுவில் தான் இருக்கிறது பணத்தில் இல்லை என்று நினைக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.

என்னிடம் இருக்கும் தொழில் அதிபர்களாக இருக்கட்டும் தனிநபர்களாக இருக்கட்டும் தமிழர்களின் எண்ணிக்கை மிக குறைவு. நான் எல்லோருக்கும் செய்து தரவேண்டும் என்று தான் நினைப்பேன் ஆனால் நம்ம ஆட்கள் வருவதில்லை நான் என்ன செய்வது? 

ஒரு பூஜை செய்ய நான் போனால் தமிழ் வம்சத்தில் வராத குடும்பங்களாக இருந்தால் அள்ளிக்கொடுப்பார்கள். தமிழ் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு சென்றால் ஆயிரம் தருவது மிக மிக கடினம். எனக்கு பணம் தருகிறார்கள் என்பதற்க்காக நான் சொல்லவில்லை. நம்ம ஆட்களிடம் பணம் இல்லை. ஏன் இந்த நிலைமை ?

நமக்கு பணம் வரும் வழியை யாரும் சொல்லிதருவதில்லை அப்படியே சொன்னாலும் அதனை நாம் செய்ய நினைப்பதில்லை. சோம்பேறிதனம் என்று சொல்லலாம்.

நமது அம்மன் பூஜைக்கு ஒரு சில குடும்பங்கள் தொடர்ச்சியாக பங்களித்து வருகின்றனர். அவர்கள் இன்று நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளனர். இதனை ஏன் இந்த இடத்தில் சொல்லுகிறேன் என்றால் கடவுள் வழிபாடாக இருக்கட்டும் எந்த விசயமாக இருந்தாலும் தொடர்ச்சியாக நடைபெறும்பொழுது அவர்களின் வாழ்க்கை மிகப்பெரிய வளர்ச்சியை காண்கிறது.

ஏதாவது ஒரு வழிப்பாட்டை நீங்கள் தொடர்ச்சியாக பின்பற்றி வாருங்கள். நாள் ஒன்றுக்கு ஒரு முறையாவது அந்த வழிப்பாட்டை செய்து வரும்பொழுது உங்களுக்கு மிகப்பெரிய சிக்கல் எல்லாம் வாழ்வில் ஏற்படாது. அதிக நேரம் கடவுளுக்கு ஒதுக்கும்பொழுது வாழ்வில் வசந்தம் தொடர்ந்து வீசிக்கொண்டே இருக்கும்.

பிரச்சினை உடனே தீரவேண்டும் என்றால் நீங்கள் தொடர்ந்து ஏதாவது ஒரு பூஜை அல்லது வழிபாட்டை தொடர்ந்து செய்யுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, March 16, 2015

கிரக பாதிப்பு பரிகாரம்


வணக்கம்!
         சென்னையில் வெயிலின் கொடுமை தாங்கமுடியவில்லை அப்படி இருந்தும் நண்பர்களை எல்லாம் சென்று சந்தித்து வருகிறேன். கிரகப்பாதிப்புக்கு பரிகாரத்தைப்பற்றி சொல்லி இருந்தேன். மேலும் அதனைப்பற்றி பார்க்கலாம்.

உங்களின் ஜாதகம் அதிகமாக பாதிப்படைந்து உங்களால் எதுவும் செய்யமுடியவில்லை என்றால் அப்பொழுது நீங்கள் செய்யவேண்டியது உங்களை மாற்றிக்கொள்ளும் வழியை முதலில செய்யவேண்டும். உங்களின் ஆடைகள் மற்றும் தோற்றத்தை ஒரளவு மாற்றினாலே போதும். 

முடியை மொட்டை அடித்துக்கொள்வது நல்லது. அந்த காலத்தில் கோவில்களில் முடி இறக்குவதற்க்கு காரணமே இது தான். உங்களுக்கு பிரச்சினை அதிகம் என்று தெரிந்தால் முடியை ஏதாவது ஒரு கோவிலுக்கு காணிக்கை கொடுக்கிறேன் என்று மொட்டை அடித்துக்கொண்டு வந்துவிடுங்கள்.

தற்பொழுது ஒருவர் மொட்டை போட்டால் அவருக்கு கேன்சர் வந்துவிட்டது என்று சொல்லிவிடுவார்கள். அதனால் கோவிலுக்கு காணிக்கை செலுத்தினேன் என்று மக்களிடம் சொல்லி மொட்டை போட்டுக்கொள்ளுங்கள்.

பெண்களாக இருந்தால் அணியும் ஆடைகளில் மாற்றம் கொண்டுவரலாம். சாதாரணமான ஆடைகளை அணிவது நல்லது. விலையுர்ந்த ஆடைகளை அணியவேண்டாம். தங்க நகைகளை அணியாமல் இருப்பது நல்லது. இதனை செய்தாலே ஒரளவு உங்களின் ஜாதகத்தினால் வரும் பெரிய பாதிப்பு குறைய வாய்ப்பு இருக்கிறது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, March 14, 2015

சனி தசா பகுதி 9


வணக்கம்!
         சனிக்கிரகம் ஒருவருக்கு லக்கினத்தில் அல்லது ஏழாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடக்கும்பொழுது அவரின் உடல் நிறம் மாறும். உடலில் தோல் கருப்பு நிறத்தில் மாறும். ஏன் கருப்பாக மாறிவிட்டாய் வெயிலில் நிற்கிறாயா என்று கேட்பார்கள் அல்லவா. அவர்களின் ஜாதகத்தை எடுத்துப்பார்த்தால் அவர்களுக்கு சனி தசா நடைபெறும்.

ஒருவருக்கு சனிக்கிரகம் லக்கினத்தில் இருந்து தசா நடத்தும்பொழுது அவருக்கு திருமணம் நடைபெற்றது என்றால் அவர்களின் திருமணம் வாழ்வு மிகப்பெரிய பிரச்சினைகளை சந்திப்பதை பலரின் ஜாதகத்தில் நான் பார்த்து இருக்கிறேன். ஒரு சிலருக்கு திருமண வாழ்வு பிரிவும் தருகிறது.

சனிக்கிரகம் ஒரு சிலருக்கு லக்கினத்தில் சம்பந்தப்பட்டு நடக்கும்பொழுது அந்த காலக்கட்டத்தில் பெரும்பாலும் தொடர்புகள் தாழ்த்தப்பட்ட நபர்களாகவே அமைகிறது. ஏழாவது வீட்டை சனிப்பார்த்து தசாவை நடத்துவதால் இப்படிப்பட்ட தொடர்புகளை ஏற்படுத்தி தருகிறது.

சனிதசா லக்கினத்தில் சம்பந்தப்பட்டு நடக்கும் காலக்கட்டத்தில் உங்களுக்கு பெரிய அளவில் ஆப்ரேஷன் செய்ய வைத்துவிடும். அதனை மட்டும் கொஞ்சம் கவனத்தில் கொண்டு செயல்படுவது நல்லது. உடலில் ஏதாவது சிறிய அளவில் நோய் வருவதுப்போல் தெரிந்தால் உடனே மருத்துவரை அணுகிவிடுவது நல்லது.

சென்னையில் உள்ள நண்பர்கள் என்னை சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளுங்கள்.  

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, March 12, 2015

கிரக பாதிப்பு பரிகாரம்


வணக்கம்!
          கிரக பாதிப்பைப்பற்றி சொன்னேன். அதில் பரிகாரத்தையும் சொல்லிவந்தேன். அந்த வரிசையில் மேலும் ஒரு பரிகாரத்தைப்பற்றி பார்க்கலாம்.

உங்களின் ஜாதகம் முழுவதும் அடிப்பட்டுவிட்டால் அதற்கு நீங்கள் செய்யவேண்டியது பல சாமியார்களின் ஆசி பெறவேண்டும். அவர்களின் காலில் விழுந்து ஆசி வாங்கவேண்டும். பல சாமியார்களின் ஆசி உங்களின் ஜாதகத்தில் உள்ள மோசமான கெடுதல்களை எல்லாம் விடுவித்து ஒரு வழியை ஏற்படுத்திக்கொடுக்கும்.

என்னுடைய ஜாதகம் மிகப்பெரிய மோசமான விளைவுகளை எனக்கு ஏற்படுத்தியது என்பதை உங்களிடம் சொல்லியுள்ளேன். அதனை நிவர்த்தி செய்தது எல்லாம் இப்படிப்பட்ட வழிகளை தான் நான் கடைபிடித்தேன்.

நல்ல சக்தி உள்ளவர்களோடு தொடர்பு ஏற்படும்பொழுது நமக்கு ஏற்பட்ட எப்பேர்பட்ட தோஷமும் விலகும். நமக்கு ஒரு நல்ல வழியை அவர்கள் வழியாக நமக்கு ஏற்படும்.இதனை நீங்கள் செய்துபாருங்கள்.

சென்னையில் உள்ள நண்பர்கள் என்னை சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளுங்கள். ஒரு சில தினங்களில் உங்களை சந்திக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, March 9, 2015

அம்மன் பூஜை படங்கள் பகுதி 3







அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை படங்கள் பகுதி 2









அன்புடன்
ராஜேஷ்சுப்பு


அம்மன் பூஜை படங்கள் பகுதி 1







அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, March 7, 2015

அம்மன் பூஜை


வணக்கம்!
          இந்த மாதம் அம்மன் பூஜை வரும் 9/3/2015 திங்கள்கிழமை அன்று நடைபெறும். இந்த மாத அம்மன் பூஜைக்கு என்று தங்களின் பங்களிப்பை அளித்தவர்கள்.

சென்னையை சேர்ந்த திரு கணேசன் அவர்கள்
கோயம்புத்தூரை சேர்ந்த திரு சுப்பிரமணியன் அவர்கள்
சென்னையை சேர்ந்த திரு இராஜ்கண்ணன் அவர்கள்
சென்னையை சேர்ந்த திரு செல்வகுமார் அவர்கள்
தூத்துகுடியை சேர்ந்த திரு கலைராஜன் அவர்கள்
மஸ்கட்டை சேர்ந்த திரு கரிகாலன் அவர்கள்
திரு சத்திய சீதாராமன் அவர்கள்

வழக்கம்போல் திரு கிருஷ்ணப்பசரவணன் அவர்கள்

நேரில் வந்து பங்குபெறும் கண்டியூர் திரு இராமசுப்பிரமணியன் அவர்கள்.
மற்றும் பல நண்பர்கள் தன்னுடைய பங்களிப்பை அளித்துள்ளார்கள்.

அம்மன் பூஜை மாலை ஏழு மணிக்கு மேல் நடைபெறும். அம்மன் பூஜை அன்று நீங்களும் மனமார பிராத்தனை செய்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, March 6, 2015

ராசிநாதன்


வணக்கம்!
         ஒவ்வொருவருக்கும் அவர்களின் ஜாதகத்தில் ராசிநாதன் என்பவன் முக்கியமானவன். ராசிநாதன் பலம் இழந்தால் சம்பந்தப்பட்ட நபருக்கு பிரச்சினை வந்துவிடும்.ராசிநாதன் நன்றாக இருக்கும்காலத்தில் ஒவ்வொருவருக்கும் பல நல்ல வாய்ப்புகள் வரும்.

இன்றைய நாளில் பாருங்கள் இரண்டு குருவும் உச்சத்தில் இருக்கின்றார்கள். அதாவது தேவகுருவும் அசுரகுருவும் உச்சத்தில் இருக்கிறார்கள். குருவும் சுக்கிரனும் உச்சத்தில் இருக்கின்றார்கள்.

உங்களின் ராசிநாதன் உச்சத்தில் இருக்கும் காலத்தில் உங்களின் செயல்பாடுகள் அதிகமாக இருக்கும். தொட்டது எல்லாம் துலங்கும். அந்த காலத்தை நன்றாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

ரிஷப ராசி, துலா ராசி, தனசு ராசி மற்றும் மீனராசிக்காரர்கள் நன்றாக இந்த காலத்தை பயன்படுத்திக்கொள்ளுங்கள். என்ன தான் ராசிநாதன் உச்சமாக இருந்தாலும் அவனையும் கொஞ்சம் உசுப்பிவிட்டால் தான் அவனும் நமக்கு நன்மையை அதிகம் செய்வான். அவனுக்கு தகுந்த பரிகாரத்தை செய்து அவனை நன்றாக உங்களுக்கு கொடுக்க வையுங்கள்.

இதுவரை தடைப்பட்ட வேலைகள் எல்லாம் நடக்கவேண்டும் என்றால் இந்த காலத்தில் நீங்கள் உங்களின் ராசிநாதனுக்கு பரிகாரம் செய்து உங்களின் வேலையை அதிவேகமாக செயல்படுத்துங்கள். பல வருடங்கள் நடக்காத வேலைகள் இந்த காலத்தில் நடக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, March 5, 2015

கேள்வி & பதில்


வணக்கம்
         ஒரு நண்பர் எனக்கு கேள்வி கேட்டு அனுப்பியிருந்தார். அவரின் கேள்விக்கு பதிலை அளித்து இருக்கிறேன்.

ராஜேஷ் சார்  அவர்களுக்கு என்னோட வணக்கங்கள் ,

         உங்களுடைய  பதிவு  பார்க்கும்  பொது  நீங்கள் தொழில் அதிபருக்கு மட்டும் செய்வேன் என்று சொல்கின்றீர் , மற்றவருக்கு  அவர் அவர்களே செய்து கொள்ளுங்கள் என்று  சொல்கின்றீர். 

    நீங்கள் சொல்வது எப்படி இருக்கிறது தெரியுமா ?  நன்கு படிக்கும் முதல் நிலை மாணவர்களை கொண்டு வாருங்கள் , அவர்களை  மாநிலத்தின் முதல் மாணவனாக ஆக்கி  காட்டுகிறேன்  என்பது போல் உள்ளது . 

    கடை நிலை மாணவனை மாநிலத்தின் முதல் மாணவனாக ஆக்குவது சாதனையா? அல்லது முதல் நிலை மாணவனை மாநிலத்தின் முதல் மாணவனாக ஆக்குவது சாதனையா?

    இன்று பல பள்ளிகள் எப்படி தான்  மாணவர்களை சேர்கிறார்கள். எப்படி தான் நீங்கள் சொல்வதும் , பணம் உள்ள தொழில் அதிபர் மட்டும் வாருங்கள் உங்களுடைய பணத்தை மேலும் மேலும் பெருக செய்கிறேன் என்று 
சொல்கின்றீர்.

   இன்று  பணம் என்பது எல்லோருக்கும் தேவை. அதனால் எல்லோருக்கும் நீங்கள்  செய்தல் நன்று .

     உங்கள் மனம் எப்போதும் பார பட்சம்  பார்கின்றதோ  எப்படி உங்களால் ஆன்மிகம் செய்ய முடியும் ?

     ஆன்மிகம் செய்கின்றவர்கள்  விருப்பு , வெறுப்பு  இன்பம் , துன்பம்  நல்லது , கெட்டது  எல்லாவற்றும் சமமாக பார்க்க வேண்டும்.

       கடவுள் நல்லவர்களையும் படைக்கிறான் , கெட்டவர்களையும் படைக்கிறான், நாம் நல்லவரோ , கெட்டவரோ  ஏழையோ , பணகாரனோ  எல்லோரும் கடவுளின் பிள்ளைகளே.

    எனவே நீங்கள் எல்லோருக்கும் செய்து கொடுக்க வேண்டுகிறேன்.

பதில்
     நீங்கள் ஒரு தொழில் செய்துக்கொண்டு இருந்தீர்கள் என்றால் அந்த தொழில் நன்றாக சென்றுக்கொண்டிருகின்றது என்று வைத்துக்கொள்வோம்.நீங்கள் என்னை வந்து சந்திக்க உங்களுக்கு நேரம் இருக்குமா?

ஒரு தொழில் நஷ்டத்தில் செல்லும்பொழுது அதனை காப்பாற்றவே முடியாதபட்சத்தில் தான் என்னைப்போல் உள்ள ஆட்களை தொழில் செய்வர்கள் தேடி வருவார்கள். அந்த இடத்தில் அவர்களால் ஒன்றுமே செய்யமுடியாதபட்சத்தில் மட்டுமே தேடிவருவார்கள். நன்றாக சென்றுக்கொண்டிருக்கும் தொழிலுக்கு எப்படி நான் உதவமுடியும்.

கடைநிலை மாணவனாக கூட அந்த இடத்தில் அவர்கள் இருக்கமாட்டார்கள். அவர்கள் மிகப்பெரிய கடனாளியாக, பள்ளியில் படிக்க தகுதி கூட இல்லாதவர்களாக மட்டுமே இருப்பார்கள். அவர்களை தயார் செய்து அவர்களை மீண்டும் தொழிலில் நிலைக்க வைக்கிறேன்.

பணத்தோடு வாருங்கள் என்று நான் சொல்லுவதில்லை. ஒரு தொழில் செய்வர்களிடம் நல்ல தொடர்பு இருந்திருக்கும் அந்த தொடர்பை வைத்து தான் அவர்களின் தொழிலை புதுப்பிக்கிறேன். இதனை நான் அவர்களுக்கு செய்துக்கொடுக்கும் வரை அவர்களிடம் இருந்து ஒரு பைசா கூட வாங்குவதில்லை.

ஜாதககதம்பத்தில் இருந்து வந்த பல சாதாரணகுடும்பங்களை கூட இன்று நல்ல நிலைக்கு உயர்த்தி இருக்கிறேன். அதனை நான் வெளியில் சொல்லாமல் இருந்தேன். அவர்கள் தொடர்ந்து என்னிடம் தொடர்பில் இருக்கும்பொழுது அவர்களுக்கு செய்துக்கொடுக்கிறேன்.

மாதம் மாதம் வேண்டுதல்களை வைத்து ஒரு நாளில் அம்மன் பூஜையும் வைக்கிறோம். அதிலும் பல நண்பர்கள் பயன் அடைந்து வருகிறார்கள்.

உங்கள் மனம் எப்போதும் பார பட்சம்  பார்கின்றதோ  எப்படி உங்களால் ஆன்மிகம் செய்ய முடியும் ?

நான் ஆன்மீகம் செய்யமுடியாது என்று நீங்களே சொல்லுகின்றீர்கள். கடைசி வரியில் நீங்கள் அனைவருக்கும் செய்துக்கொடுங்கள் என்று சொல்லுகின்றீர்கள். சரி உங்களின் கேள்விக்கே வருகிறேன். நமது கோவில்களில் நூறு ரூபாய் பணம் கொடுத்தால் சாமி அருகிலேயே சென்று காட்டுகிறார்கள். சாதாரணமானவர்கள் பொதுவரிசையில் வாயிற்படியிலேயே நின்று தரிசனம் செய்யவைக்கிறார்கள். நிறைய வருமானம் சொத்துக்கள் வைத்திருக்கும் கோவில்களின் நிலையே அப்படி இருக்கும்பொழுது எங்களை போல் உள்ளவர்கள் பாரப்பட்சம் பார்ப்பது தவறு இல்லை என்று நினைக்கிறேன். மனிதர்களை சமமாக பார்க்க வேண்டும் என்றால் கோவில்களில் சமமாக மனிதர்களை பார்த்தால் நானும் பார்க்க தயாராக இருக்கிறேன்.

ஜாதககதம்பத்திலேயே நிறைய விசயங்கள் சொல்லி வருகிறேன். அதனை கடைபிடித்தாலே நீங்கள் மேம்பட்டுவிடலாம். அதனையும் மீறி நான் தான் உங்களுக்கு செய்துக்கொடுக்கவேண்டும் என்றால் அந்த நேரத்தில் நான் பணம் கேட்கதான் செய்வேன்.

நான் பிழைத்துக்கொண்டேன். முடிந்தால் நீங்களும் பிழைத்துக்கொள்ளுங்கள் அது தான் என்னால் கடைசியாக சொல்லும் வார்த்தை. பிழைக்க தெரிந்தவன் பிழைத்துக்கொள்வான். பிழைக்க தெரியவில்லை என்றால் ஏதாவது சொல்லிக்கொண்டு இருக்கலாம்.

அன்புடன்

ராஜேஷ்சுப்பு

உங்களை உயர்த்தும் வழிகள்


வணக்கம்!
          நமது வாழ்க்கையை செம்படுத்தி அதன் வழியாக முன்னேற்றம் அடைய வைப்பதற்க்கு தான் ஆன்மீகம் தேவைப்படுகிறது. முஸ்லீம் மக்கள் ஒரு நாளைக்கு ஐந்து வேளை தொழுது தன்னுடைய வாழ்வை உயர்த்திக்கொள்வதுபோல் பிறர் உயர்த்திக்கொள்ள விளைவதில்லை. நம்ம ஆட்களை ஐந்து நேரம் சாமி கும்பிடவேண்டும் என்றால் நம்ம ஆட்கள் என்ன சொல்லுவார்கள் என்பதை மட்டும் நீங்கள் நினைத்து பாருங்கள்.

தொடர்ச்சியாக ஒரு வழிபாட்டை செய்து வரும்பொழுது மட்டுமே அதன் வழியாக நமக்கு முன்னேற்றம் என்பது ஏற்படும். தொடர்ச்சியாக இல்லை என்றால் அந்த வழிபாடு முன்னேற்றத்தை தராது. நம்ம ஆட்கள் உடனே பணம் வேண்டும் என்று நினைப்பார்கள். நம்மை ஒழுங்குப்படுத்திக்கொண்டு பணத்திற்க்கான வழியை நாடும்பொழுது நமக்கு பணமும் வரும். பணமும் நம்மிடமே இருக்கும்.

நம்ம ஆட்கள் தெய்வத்தை நம்புவதே பெரிய கஷ்டம் அதில் வழிபாட்டை தொடர்ந்து செய்யுங்கள் என்று சொன்னால் எப்படி செய்வார்கள். என்னை தொடர்ச்சியாக நம்பி வரும் எத்தனையோ குடும்பங்களுக்கு நான் நல்லதை செய்து இருக்கிறேன் என்றால் அவர்கள் தொடர்ச்சியாக என்னை நம்பிவருவது மட்டுமே. 

நான் பிறரை சோதனை செய்வது போல் அந்த சிவனே சோதனை செய்து இருக்கமாட்டான். தொடர்ச்சியாக வருகிறார்களாக என்று பார்ப்பதற்க்கு தான் அப்படி சோதனை செய்து இருக்கிறேன்.

உங்களின் குலதெய்வத்திற்கே நீங்கள் பூஜை செய்தாலும் அந்த பூஜை தொடர்ச்சியாக அமையும்பொழுது மட்டுமே உங்களின் குலதெய்வம் உங்களை காப்பாற்றும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

பெளர்ணமி


வணக்கம்!
         இன்று பெளர்ணமி. மகம் நட்சத்திரம் காலை 9:15 மணிக்கு முடிவடைந்துவிட்டது. அதன் பின்பு பூரம் நட்சத்திரம். மாசி பெளர்ணமி என்பதால் விசேஷம். 

எங்கள் பகுதியில் காமாண்டி என்ற ஒன்று இருக்கிறது. அதாவது மன்மதனின் கோவில். வளர்பிறை ஆரம்பித்த நேரத்தில் இருந்து மன்மதன் கோவில் விஷேச பூஜை நடைபெற்று வரும். இன்று காமதகனம் நடைபெறும்நாள். 

உங்களின் குலதெய்வத்திற்க்கு பச்சைப்பரப்புதல் செய்யும் நாள். குலதெய்வம் தெரியாதவர்கள் உங்களின் இஷ்டதெய்வத்திற்க்கு பச்சைப்பரப்புதலை செய்யலாம்.

சிவபூஜையைப்பற்றி சொல்லி இருக்கிறேன். இன்று பெளர்ணமி என்பதால் சிவன் ஆலயத்திற்க்கு சென்று வழிபாடு நடத்துங்கள். வியாழக்கிழமை என்பதால் குரு வழிபாடும் நல்லது.

இன்று சிவனுக்கு நீங்கள் அபிஷேகம் செய்யுங்கள். வீட்டிலேயே சிவனை வைத்து வழிபாடு செய்வதைப்பற்றி சொல்லிருக்கிறேன். அந்த பூஜையை இன்று செய்யுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, March 4, 2015

சனி தசா பகுதி 8


வணக்கம்!
          ஒவ்வொரு பதிவிலும் நிறைய செய்திகள் உங்களுக்கு சொல்லவேண்டும் என்று நினைக்கிறேன் ஆனால் பதிவு திருடுபோவதால் நிறைய விசயங்களை அரைகுறையாகவே முடிக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது.

சனித்தாசவில் ஒவ்வொரு புத்திக்கும் எத்தனை காலங்கள் என்பதைப்பற்றி இப்பதிவில் பார்க்கலாம்

சனிதசா மொத்தம் 19 வருடங்கள்

சனி புத்தி   3 வருடம் 0 மாதம் 3 நாள்
புதன் புத்தி  2 வருடம் 8 மாதம் 9 நாள்
கேது புத்தி  1 வருடம் 1 மாதம் 9 நாள்

சுக்கிரன் புத்தி 3 வருடம் 2 மாதம் 0 நாள்
சூரியன் புத்தி 0 வருடம் 11 மாதம் 12 நாள்
சந்திரன் புத்தி 1 வருடம் 7 மாதம் 0 நாள்

செவ்வாய் புத்தி 1 வருடம் 1 மாதம் 9 நாள்
ராகு புத்தி 2 வருடம் 10 மாதம் 6 நாள்
குரு புத்தி 2 வருடம் 6 மாதம் 12 நாள்

அதிக காலம் கொண்ட தசாவாக இருக்கிறது. இதனைப்பார்த்து பயந்துவிடவேண்டியதில்லை ஒரேடியாக நமக்கு பிரச்சினை மட்டும் தான் சனிதசா கொடுக்கபோகின்றது என்பது இல்லை. படுமோசமாக தசாநாதன் பாதிக்கப்பட்டு இருந்தாலும் அவ்வப்பொழுது நல்லதையும் செய்வார். அவ்வப்பொழுது வரும் புத்திநாதன்கள் மற்றும் கோச்சாரப்பலன்கள் எல்லாம் இருக்கின்றன. எளிதாக எடுத்துக்கொண்டால் எளிமையாக சனி தசா சென்றுவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

கலவை


வணக்கம் !
          இன்று மாசிமகம் அனைத்து தெய்வங்களையும் வழிபடுவதற்க்கு உகந்த நாள். மாசி மகத்தின் பெருமையைப்பற்றி நிறைய கேள்விப்பட்டு இருப்பீர்கள்.  ஒரே வரியில் சொல்லுவது என்றால் மறந்த திதியை மாசி மகத்தில் செய் என்பது தான். நம்முடைய முன்னோர்களுக்கு நாம் திதி கொடுப்பதற்க்கு ஒரு ஏற்ற நாள் இன்று.

உங்களின் குலதெய்வத்திற்க்கு வழிபாடு செய்வதற்க்கு ஒரு நல்ல நாளாக இந்த நாள் இருக்கிறது. பச்சைப்பரப்புதலை பற்றி நிறைய சொல்லிருந்தேன். அதனை நீங்கள் மறந்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். பழைய பதிவில் தேடிபிடியுங்கள். பச்சைப்பரப்புதலை செய்வதற்க்கு இன்று நல்ல நாள்.

மதியம் 330 மணியளவில் புதன் கிரகம் மகரராசியில் இருந்து பெயர்ச்சியாகி கும்பராசிக்கு செல்லுகிறது. சூரியனும் புதனும் சேர்ந்து புத ஆதித்ய யோகம் கிடைக்கிறது. குருவின் பார்வை மட்டும் இல்லை. அரசாங்க வழியில் ஏதாவது வேலை இருந்தால் இந்த நேரத்தில் நீங்கள் செய்ய ஆரம்பித்தால் விரைவில் வேலை முடிந்துவிடும்.

இரவு பத்து மணியளவில் பெளர்ணமி ஆரம்பமாகிறது. கிரிவலம் நான் செய்தே பல நாட்கள் சென்றுவிட்டது. முயற்சி செய்கிறேன் செய்வதற்க்கு வாய்ப்பு அமையவில்லை. அண்ணாமலையார் கோபத்தில் இருக்கிறார் என்று நினைக்கிறேன். பெளர்ணமி அன்று ஏதாவது ஒரு சிவலாயத்திற்க்கு சென்று வாருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு 

Tuesday, March 3, 2015

கடன் ஏன் ஏற்படுகிறது?


வணக்கம் !
          கடன் வாங்கியவர்கள் சொல்லும் வார்த்தை இந்தியாவே கடனில் இருக்கிறது நான் வாங்கினால் என்ன என்று சொல்லுவார்கள். மனிதனுக்கு கடன் ஏற்படுவது சோதிடத்தில் ஆறாவது வீட்டு அதிபதியாக இருந்தாலும் பொதுவாக சோதிடத்தில் ஒரு கிரகம் இருக்கிறது. அந்த கிரகம் எப்பொழுது எல்லாம் வழு இழக்கிறதோ அப்பொழுது எல்லாம் உங்களுக்கு கடன் ஏற்பட்டுவிடும்.

செவ்வாய் கிரகம் தான் அந்த கிரகம். செவ்வாய் கிரகம் உங்களுக்கு நன்றாக இருந்தால் உங்களுக்கு கடன் என்பது ஏற்படாது. செவ்வாய் கிரகம் வலு இழந்தால் அல்லது ஏதாவது சிக்கலில் மாட்டினால் உங்களுக்கு கடன் ஏற்பட்டுவிடும்.

செவ்வாய் கிரகம் வலுவாக அமைந்த ஜாதகர்கள் கடன் பிறருக்கு கொடுப்பார்கள். அதாவது வட்டித்தொழில் செய்பவர்களாக பெரும்பாலும் இருப்பார்கள்.

உங்களுக்கு கடன் தொல்லை இருந்தால் உங்களின் ஜாதகத்தை எடுத்து செவ்வாய் கிரகத்தின் நிலையை அறிந்து பாருங்கள். செவ்வாய்கிரகத்திற்க்கு தேவையான பரிகாரங்கள் செய்து வாருங்கள். உங்களுக்கு கடன் தொல்லை இருக்காது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

குரு சந்திர யோகம்


வணக்கம்!
         ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நிகழ்வுகள் சோதிடத்தில் நடந்துக்கொண்டு இருக்கின்றன. அதில் ஒரு சில நிகழ்வுகள் நமக்கு நல்ல நிகழ்வுகளாக அமைகின்றன. நேற்று முதல் நாள் இரவு எட்டு மணியில் இருந்து இன்று வரை குருவும் சந்திரனும் இணைந்து இருக்கின்றன.

குருவும் சந்திரனும் இணைந்து இருந்தால் அந்த காலத்தில் நமக்கு நல்ல பணவரவு வரும் என்பது எல்லாேருக்கும் தெரிந்த ஒன்று. ஜாதகத்தில் ஒரு சிலருக்கு குருவும் சந்திரனும் இணைந்து இருக்கும் அவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் பணவரவு இருந்துக்கொண்டே இருக்கும்.

குருசந்திர யோகம் இல்லாதவர்கள் இப்படிப்பட்ட நிலையை பயன்படுத்திக்கொள்ளவேண்டும். இந்த முறை நீங்கள் சிவன் கோவிலுக்கு செய்யவேண்டும்.

இன்று பிரதோஷகாலம் வருகிறது. பிரதோஷத்திற்க்கு தேவையான அபிஷேகப்பொருட்களை வாங்கி கொடுங்கள். சிவன் கோவிலில் நடக்கும் அபிஷேகத்திலும் கலந்துக்கொண்டு மனமுருக பிராத்தனை செய்துக்கொண்டு வாருங்கள். 

தொழில் நண்பர்களுக்கு நேற்றே நான் செய்துவிட்டேன். இன்று உங்களுக்கான நேரம். கடைசி நேரத்தில் ஏன் சொல்லுகிறேன் என்றால் அதிர்ஷ்டவாய்ப்பு என்பது எல்லாேருக்கும் கிடைக்காது. கிடைக்கவேண்டிய நபருக்கு மட்டும் கிடைக்கும். இன்று செய்யமுடியாதவர்கள் அடுத்த மாதம் பார்த்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை


வணக்கம் !
          ஒவ்வொரு மாதமும் ஜாதககதம்பத்தின் வழியாக வேண்டுதல் வைத்திருந்து அந்த வேண்டுதலை அம்மன் நிறைவேற்றியதால் அம்மனுக்கு பூஜை செய்யப்படுகிறது.

அம்மன் பூஜை ஒவ்வொரு மாதமும் மிகவும் வித்தியாசமாக செய்யவேண்டும் என்று நினைத்து ஒவ்வொரு மாதமும் முடிந்தளவு வித்தியாசமாக செய்துவருகிறோம்.

ஒவ்வொரு மாதமும் பெரியவில் செய்யவேண்டும் என்று எண்ணுகிறேன். அதற்கு தேவையான உதவியை அளிக்கும் அனைத்தும் நண்பர்களுக்கும் அம்மன் அருள் நிச்சயம் கிடைக்கும்.

இந்த மாதம் அம்மன் பூஜை வரும் 10 தேதிக்குள் நடத்தலாம் என்று திட்டமிட்டுள்ளது. அம்மனிடம் வேண்டுதல் வைத்து அதனை நிறைவேற்றினால் அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்தலாம்.

சென்னைக்கு வருவதாக திட்டம் இருக்கிறது. சென்னையில் என்னை சந்திக்க நினைக்கும் நண்பர்கள் குறுந்தகலாக எனக்கு அனுப்பி வையுங்கள். உங்களை நான் சந்திக்கிறேன். பழைய நண்பர்கள் போன் செய்து என்னிடம் சொல்லிவிடுங்கள். விரைவில் சந்திக்கிறேன்

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, March 2, 2015

கோவில் தரிசனம்


வணக்கம்!
          இன்று காலையில் பதிவை அளித்துவிட்டு சுவாமிமலைக்கு சென்றுவிட்டேன். சுவாமிமலை முருகனை தரிசனம் செய்வதற்க்கு ஒருவரை என்னை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார். 

கும்பகோணம் சென்று அங்கிருந்து சுவாமிமலைக்கு சென்றோம். காலையிலேயே நல்ல வெயில் வந்துவிட்டது. வெயில் கொல்லுகிறது.  எனது உடல் வெயிலுக்கு தாங்காது. சென்னையில் இருக்கும் காலத்தில் நான் வெயில் நேரத்தில் வெளியில் வருவதில்லை.

கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலைக்கு சென்ற நேரம் காலை பனிரெண்டு மணி. அந்த வெயிலுக்கு உள்ளே கோவிலுக்கு சென்றவுடன் குளிர்ச்சியாக இருந்தது. அற்புதமான தரிசனம்.  முருகனை தரிசனம் முடித்துவிட்டு அங்கிருந்து கிளம்பி ஊருக்கு வந்தேன்.

இதனை ஏன் உங்களுக்கு எழுதுகிறேன் என்றால் பல வருடங்களாக பதிவை மட்டும் எழுதுக்கொண்டிருந்தேன். தற்பொழுது நண்பர்களை அடுத்த கட்டத்திற்க்கு கொண்டுச்செல்லும் வேலையை செய்துக்கொண்டு இருக்கிறேன்.

பலவருடங்களாக தொடர்பில் இருக்கும் நண்பர்களை மட்டும் என்னை அழைத்துக்கொண்டு செல்கிறார்கள். அவர்களின் விருப்பத்திற்க்காக இப்படிப்பட்ட கோவில் தரிசனம் செய்கிறேன்.

நண்பர்களுக்காக 
                 பல நண்பர்கள் என்னை போனில் தொடர்புக்கொள்கிறார்கள் நான் கோவில் மற்றும் பூஜை என்று அழைந்துக்கொண்டு இருக்கிறேன். நீங்கள் தொடர்புக்கொள்வதாக இருந்தால் எனக்கு குறுந்தகலை அனுப்பிவிடுங்கள். உங்களை நான் தொடர்புக்கொள்கிறேன்.

வெளிநாடுகளின் நண்பர்கள் என்னை தொடர்புக்கொள்வதாக இருந்தால் அவர்கள் என்னை தொடர்புக்கொள்ளும் நேரத்தை எனக்கு அனுப்பிவிடுங்கள். அந்த நேரத்தை உங்களுக்காக ஒதுக்கிக்கொள்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

கிரக பாதிப்பு பரிகாரம்


வணக்கம்!
          கிரகப்பாதிப்பு பரிகாரத்தைப்பற்றி பார்த்து வருகிறோம். இந்த பரிகாரம் ஒரு வழி தானே தவிர நிரந்தர தீர்வாக அமைந்துவிடாது என்பதையும் இந்த பதிவில் சொல்லிவிடுகிறேன்.

நமக்கு சாவு வருகின்றது என்று வைத்துக்கொள்வோம். நாம் அதற்கு பரிகாரமாக சுடுகாட்டில் சென்று படுத்துக்கொண்டால் நம்மை சாவு நெருங்காது என்று நினைக்ககூடாது வரவேண்டிய சாவு வரத்தான் செய்யும். இந்த வழிமுறைகளை செய்தும் நாம் நமது பிரச்சினை குறைத்துக்கொள்ளவேண்டும் என்பதற்க்காக இந்த பரிகாரத்தை சொல்லுகிறேன்.

ஆறாம் வீட்டு அதிபதி தசா நடந்தால் ஒருவருக்கு கடன் தொல்லை ஏற்பட வழி இருக்கிறது. கடன் இல்லை என்றால் அவர்க்கு நோயாவது வந்து தொல்லைப்படுத்தும். கடன் இருந்தாலும் பரவாயில்லை நோய் வந்துவிட்டால் பெரிய பிரச்சினையாகிவிடும். 

ஆறாவது தசா மட்டும் கடனை கொடுப்பதில்லை வேறு சில கெட்ட கிரகங்கள் கூட கடனை கொடுக்கும். இந்த காலத்தில் ஒருத்தர் ஏழ்மையாக இருந்தால் அவர் கடனாளியாக தான் இருப்பார். கடன் இல்லாமல் இருந்தால் ஏதாவது கொஞ்சமாவது கடன் வாங்குங்கள் இது ஒரு பரிகாரம்.

கடன் வாங்குவது உங்களை பெரிய பிரச்சினையில் இருந்து தப்பிக்க வைக்கும். கடனை வட்டி கடனாக வாங்கி மாட்டிக்கொள்ளாதீர்கள். கொஞ்சம் வாங்கி திருப்பி தருகிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் நன்றாக வந்தவுடன் திருப்பிக்கொடுத்துவிடுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு