வணக்கம் !
இன்று மாசிமகம் அனைத்து தெய்வங்களையும் வழிபடுவதற்க்கு உகந்த நாள். மாசி மகத்தின் பெருமையைப்பற்றி நிறைய கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஒரே வரியில் சொல்லுவது என்றால் மறந்த திதியை மாசி மகத்தில் செய் என்பது தான். நம்முடைய முன்னோர்களுக்கு நாம் திதி கொடுப்பதற்க்கு ஒரு ஏற்ற நாள் இன்று.
உங்களின் குலதெய்வத்திற்க்கு வழிபாடு செய்வதற்க்கு ஒரு நல்ல நாளாக இந்த நாள் இருக்கிறது. பச்சைப்பரப்புதலை பற்றி நிறைய சொல்லிருந்தேன். அதனை நீங்கள் மறந்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். பழைய பதிவில் தேடிபிடியுங்கள். பச்சைப்பரப்புதலை செய்வதற்க்கு இன்று நல்ல நாள்.
மதியம் 330 மணியளவில் புதன் கிரகம் மகரராசியில் இருந்து பெயர்ச்சியாகி கும்பராசிக்கு செல்லுகிறது. சூரியனும் புதனும் சேர்ந்து புத ஆதித்ய யோகம் கிடைக்கிறது. குருவின் பார்வை மட்டும் இல்லை. அரசாங்க வழியில் ஏதாவது வேலை இருந்தால் இந்த நேரத்தில் நீங்கள் செய்ய ஆரம்பித்தால் விரைவில் வேலை முடிந்துவிடும்.
இரவு பத்து மணியளவில் பெளர்ணமி ஆரம்பமாகிறது. கிரிவலம் நான் செய்தே பல நாட்கள் சென்றுவிட்டது. முயற்சி செய்கிறேன் செய்வதற்க்கு வாய்ப்பு அமையவில்லை. அண்ணாமலையார் கோபத்தில் இருக்கிறார் என்று நினைக்கிறேன். பெளர்ணமி அன்று ஏதாவது ஒரு சிவலாயத்திற்க்கு சென்று வாருங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment