Followers

Thursday, March 5, 2015

கேள்வி & பதில்


வணக்கம்
         ஒரு நண்பர் எனக்கு கேள்வி கேட்டு அனுப்பியிருந்தார். அவரின் கேள்விக்கு பதிலை அளித்து இருக்கிறேன்.

ராஜேஷ் சார்  அவர்களுக்கு என்னோட வணக்கங்கள் ,

         உங்களுடைய  பதிவு  பார்க்கும்  பொது  நீங்கள் தொழில் அதிபருக்கு மட்டும் செய்வேன் என்று சொல்கின்றீர் , மற்றவருக்கு  அவர் அவர்களே செய்து கொள்ளுங்கள் என்று  சொல்கின்றீர். 

    நீங்கள் சொல்வது எப்படி இருக்கிறது தெரியுமா ?  நன்கு படிக்கும் முதல் நிலை மாணவர்களை கொண்டு வாருங்கள் , அவர்களை  மாநிலத்தின் முதல் மாணவனாக ஆக்கி  காட்டுகிறேன்  என்பது போல் உள்ளது . 

    கடை நிலை மாணவனை மாநிலத்தின் முதல் மாணவனாக ஆக்குவது சாதனையா? அல்லது முதல் நிலை மாணவனை மாநிலத்தின் முதல் மாணவனாக ஆக்குவது சாதனையா?

    இன்று பல பள்ளிகள் எப்படி தான்  மாணவர்களை சேர்கிறார்கள். எப்படி தான் நீங்கள் சொல்வதும் , பணம் உள்ள தொழில் அதிபர் மட்டும் வாருங்கள் உங்களுடைய பணத்தை மேலும் மேலும் பெருக செய்கிறேன் என்று 
சொல்கின்றீர்.

   இன்று  பணம் என்பது எல்லோருக்கும் தேவை. அதனால் எல்லோருக்கும் நீங்கள்  செய்தல் நன்று .

     உங்கள் மனம் எப்போதும் பார பட்சம்  பார்கின்றதோ  எப்படி உங்களால் ஆன்மிகம் செய்ய முடியும் ?

     ஆன்மிகம் செய்கின்றவர்கள்  விருப்பு , வெறுப்பு  இன்பம் , துன்பம்  நல்லது , கெட்டது  எல்லாவற்றும் சமமாக பார்க்க வேண்டும்.

       கடவுள் நல்லவர்களையும் படைக்கிறான் , கெட்டவர்களையும் படைக்கிறான், நாம் நல்லவரோ , கெட்டவரோ  ஏழையோ , பணகாரனோ  எல்லோரும் கடவுளின் பிள்ளைகளே.

    எனவே நீங்கள் எல்லோருக்கும் செய்து கொடுக்க வேண்டுகிறேன்.

பதில்
     நீங்கள் ஒரு தொழில் செய்துக்கொண்டு இருந்தீர்கள் என்றால் அந்த தொழில் நன்றாக சென்றுக்கொண்டிருகின்றது என்று வைத்துக்கொள்வோம்.நீங்கள் என்னை வந்து சந்திக்க உங்களுக்கு நேரம் இருக்குமா?

ஒரு தொழில் நஷ்டத்தில் செல்லும்பொழுது அதனை காப்பாற்றவே முடியாதபட்சத்தில் தான் என்னைப்போல் உள்ள ஆட்களை தொழில் செய்வர்கள் தேடி வருவார்கள். அந்த இடத்தில் அவர்களால் ஒன்றுமே செய்யமுடியாதபட்சத்தில் மட்டுமே தேடிவருவார்கள். நன்றாக சென்றுக்கொண்டிருக்கும் தொழிலுக்கு எப்படி நான் உதவமுடியும்.

கடைநிலை மாணவனாக கூட அந்த இடத்தில் அவர்கள் இருக்கமாட்டார்கள். அவர்கள் மிகப்பெரிய கடனாளியாக, பள்ளியில் படிக்க தகுதி கூட இல்லாதவர்களாக மட்டுமே இருப்பார்கள். அவர்களை தயார் செய்து அவர்களை மீண்டும் தொழிலில் நிலைக்க வைக்கிறேன்.

பணத்தோடு வாருங்கள் என்று நான் சொல்லுவதில்லை. ஒரு தொழில் செய்வர்களிடம் நல்ல தொடர்பு இருந்திருக்கும் அந்த தொடர்பை வைத்து தான் அவர்களின் தொழிலை புதுப்பிக்கிறேன். இதனை நான் அவர்களுக்கு செய்துக்கொடுக்கும் வரை அவர்களிடம் இருந்து ஒரு பைசா கூட வாங்குவதில்லை.

ஜாதககதம்பத்தில் இருந்து வந்த பல சாதாரணகுடும்பங்களை கூட இன்று நல்ல நிலைக்கு உயர்த்தி இருக்கிறேன். அதனை நான் வெளியில் சொல்லாமல் இருந்தேன். அவர்கள் தொடர்ந்து என்னிடம் தொடர்பில் இருக்கும்பொழுது அவர்களுக்கு செய்துக்கொடுக்கிறேன்.

மாதம் மாதம் வேண்டுதல்களை வைத்து ஒரு நாளில் அம்மன் பூஜையும் வைக்கிறோம். அதிலும் பல நண்பர்கள் பயன் அடைந்து வருகிறார்கள்.

உங்கள் மனம் எப்போதும் பார பட்சம்  பார்கின்றதோ  எப்படி உங்களால் ஆன்மிகம் செய்ய முடியும் ?

நான் ஆன்மீகம் செய்யமுடியாது என்று நீங்களே சொல்லுகின்றீர்கள். கடைசி வரியில் நீங்கள் அனைவருக்கும் செய்துக்கொடுங்கள் என்று சொல்லுகின்றீர்கள். சரி உங்களின் கேள்விக்கே வருகிறேன். நமது கோவில்களில் நூறு ரூபாய் பணம் கொடுத்தால் சாமி அருகிலேயே சென்று காட்டுகிறார்கள். சாதாரணமானவர்கள் பொதுவரிசையில் வாயிற்படியிலேயே நின்று தரிசனம் செய்யவைக்கிறார்கள். நிறைய வருமானம் சொத்துக்கள் வைத்திருக்கும் கோவில்களின் நிலையே அப்படி இருக்கும்பொழுது எங்களை போல் உள்ளவர்கள் பாரப்பட்சம் பார்ப்பது தவறு இல்லை என்று நினைக்கிறேன். மனிதர்களை சமமாக பார்க்க வேண்டும் என்றால் கோவில்களில் சமமாக மனிதர்களை பார்த்தால் நானும் பார்க்க தயாராக இருக்கிறேன்.

ஜாதககதம்பத்திலேயே நிறைய விசயங்கள் சொல்லி வருகிறேன். அதனை கடைபிடித்தாலே நீங்கள் மேம்பட்டுவிடலாம். அதனையும் மீறி நான் தான் உங்களுக்கு செய்துக்கொடுக்கவேண்டும் என்றால் அந்த நேரத்தில் நான் பணம் கேட்கதான் செய்வேன்.

நான் பிழைத்துக்கொண்டேன். முடிந்தால் நீங்களும் பிழைத்துக்கொள்ளுங்கள் அது தான் என்னால் கடைசியாக சொல்லும் வார்த்தை. பிழைக்க தெரிந்தவன் பிழைத்துக்கொள்வான். பிழைக்க தெரியவில்லை என்றால் ஏதாவது சொல்லிக்கொண்டு இருக்கலாம்.

அன்புடன்

ராஜேஷ்சுப்பு

No comments: