வணக்கம் !
இரண்டு நாட்களாக கோயம்புத்தூரில் தங்குவதாக அமைந்துவிட்டது. வெளியூர் பயணங்கள் அனைத்தும் அங்குள்ள நமது தொழில் நண்பர்கள் வழியாக ஏற்பாடு செய்யப்படுகிறது. முதல் நாள் வால்பாறை சென்று அங்குள்ள பாலாஜி கோவில் தரிசனம் செய்தோம்.
காரமலை என்ற எஸ்டேட்டில் தான் பாலாஜி கோவில் இருக்கின்றது. இது தனியாருக்கு சொந்தமான கோவில். இந்த கோவிலை பார்க்கவேண்டும் என்று நினைத்து இருந்தேன். கோயம்புத்தூர் நண்பர் இதனை ஏற்பாடு செய்துக்கொடுத்துவிட்டார். அவரும் அவரது மகனும் என்னோடு வந்திருந்தார்.
உயர்ந்த மலையில் இயற்கையான இடத்தில் கோவில் இருப்பது அதனை தரிசனம் செய்யும்பொழுது நமக்கு நல்ல அனுபவம் ஏற்படும். பொதுவாக இந்த பயண ஏற்பாட்டிற்க்கு என்று அதிக செலவு நமது தொழில் நண்பர்கள் செய்கின்றனர்.
ஒவ்வொரு பயணத்திலும் ஒரு நல்ல அனுபவம் அவர்களுக்கு ஏற்படும். அவர்களும் மனமகிழ்ச்சியோடு அதே நேரத்தில் பல நல்ல தகவல்களையும் அவர்கள் பெறுகின்றனர். அம்மனின் அருளும் அவர்களுக்கு கிடைக்க வழி செய்கிறேன்.
இரண்டாவது நாள் கோவை குற்றாலம் என்ற இடத்திற்க்கு சென்றோம். கோவை குற்றாலம் என்ற இடத்தில் குறைந்தளவு தண்ணீர் வருகிறது. மூன்று மாதத்திற்க்கு பிறகு தண்ணீர் வருகிறதா என்று கேட்டு தெரிந்தக்கொண்ட பிறகு சென்று வாருங்கள். பிறகு பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தரிசனம் முடிந்து மறுபடி கோயம்புத்தூர் வந்தோம். இன்று காலை தஞ்சாவூர் வந்துவிட்டேன். ஒரே இடத்தில் நீங்கள் வாழ்நாளை கழித்துவிடாமல் கிடைக்கும் நேரத்தில் அனைத்து இடத்திற்க்கும் சென்று வாருங்கள். படம் நெட்டில் இருந்து எடுக்கப்பட்டது.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment