வணக்கம்!
ஒரு வேலை நடைபெறவேண்டும் என்றால் அந்த வேலை முதலில் ஆரம்பித்து கடைசி வரை எந்த வித தடங்கலும் இன்றி செல்லவேண்டும். ஒன்பது கிரகங்களுக்குள் ஒன்று அல்லது இரண்டு கிரகங்கள் அந்த வேலையை செய்யவிடாமல் செய்வதற்க்கு பல வழிகளை கையாளும். ஒரு சிலருக்கு ஒன்பது கிரகங்களும் வரிந்துகட்டிக்கொண்டு செய்யவிடாமல் செய்துவிடும்.
ஒரு காரியம் நடந்தால் நான் நன்றாக இருப்பேன் என்று நினைத்தால் முதலில் அந்த காரியத்தை தொடங்கும்பொழுதே உங்களின் முன்னோர்களின் ஆசி,குலதெய்வத்தின் ஆசி மற்றும் இஷ்டதெய்வத்தின் ஆசி அனைத்தையும் வாங்கிவிட்டு அந்த காரியத்தை தொடங்குங்கள்.
பல முயற்சி எடுத்து தோற்றவர்களிடம் நாம் கேட்டால் கடைசி நேரத்தில் அந்த வாய்ப்பு போய்விட்டது என்று சொல்லுவார்கள். அதற்கு காரணம் அவர்களின் முன்னோர்களின் ஆசி அவர்களுக்கு கிடைக்கவில்லை என்று அர்த்தம் கொள்ளவேண்டும்.
வாய்ப்பு வந்து அதனை சொதப்பிவிட்டால் அந்த இடத்தில் குலதெய்வத்தின் ஆசி உங்களுக்கு கிடைக்கவில்லை என்று அர்த்தம். குலதெய்வம் உங்களை பலி வாங்கிவிட்டது என்று எடுத்துக்கொள்ளலாம். ஒரு சிலர் இஷ்டதெய்வத்தின் துணைக்கொண்டு வெற்றி பெறுபவர்களாகவும் இருப்பார்கள். இதனை பெறுவதற்க்கு முயற்சி செய்துவிட்டு ஒரு காரியத்தை வெற்றிகரமாக தொடங்குங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment