வணக்கம்!
நமக்கு வரும் பிரச்சினைப்பற்றியும் அதன் வழியாக நம்மை நாமே மாற்றிக்கொள்ளும் வழியிலும் பரிகாரத்தை சொல்லிவருகிறேன். அடுத்தாக நாம் பார்க்க போகும் இந்த கருத்து அனைவருக்கும் மிகவும் பயன்படும் என்று நினைக்கிறேன்.
மனிதன் அவனுடைய பிரச்சினையை பார்ப்பது கிடையாது. அடுத்தவன் என்ன செய்கிறான் என்பதில் தான் அதிக கவனத்தை எடுத்துக்கொள்கிறான். தன்னை சுயபரிசோதனை செய்துக்கொள்வதற்கே வாழ்நாள் போதாது.
சோதிடத்தை எடுத்துக்கொண்டாலும் அதில் என்ன இருக்கிறது என்பதை பார்ப்பதை விட்டு விட்டு அடுத்தவர்களுக்கு பலன் கூறுவதில் தான் நாம் கவனம் செலுத்துவோம். நமது ஜாதகத்தில் ஆயிரம் பிரச்சினை வரும் அதனை பார்ப்பது கிடையாது அடுத்தவர்கள் ஜாதகத்தை ஆராய்ந்துக்கொண்டு வருவோம்.
தன்னுடைய ஜாதகத்தை ஆராய்ந்துவிட்டால் நாம் முன்னேறிவிடலாம். நமக்கு என்ன வருகிறது என்ன நடக்கிறது என்பதை நாம் பார்க்கவேண்டும் அப்பொழுது தான் நாம் முன்னேற்ற பாதையில் செல்லமுடியும்.
உங்களுடைய ஜாதகத்தை எடுத்துக்கொண்டு குறைந்த பட்சம் ஒரு வருடகாலம் என்ன நடந்தது என்ன நடக்கிறது என்ன நடக்கபோகிறது என்று பார்த்து வாருங்கள். உங்களின் பிரச்சினை என்ன என்று தெரிந்துவிடும். அதன் பிறகு அதற்கு பரிகாரம் என்ன என்று பார்த்துக்கொள்ளலாம்.
எந்த காலகட்டத்தில் பிரச்சினை வந்தது. எந்த காலகட்டத்தில் சந்தோஷம் வந்தது என்று பாருங்கள். உங்களுக்கே தெரிந்துவிடும் பிரச்சினை எந்த கிரகம் தந்தது அதற்கு என்ன செய்யலாம் என்று புரிந்துவிடும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
2 comments:
100% TRUE.
Sir ur number pls I want to meet u
Post a Comment