Followers

Saturday, October 1, 2016

இனிய தொடக்கம்


ணக்கம்!
          ஒவ்வொரு நாளும் நம்முடைய எண்ணம் நிறைய பதிவுகளை தரவேண்டும் என்பதாகும் ஆனால் வேலை பளு காரணமாக அதனை நிறைவேற்றமுடியவில்லை. இனிமேலாவது அம்மன் அருளால் நிறைய பதிவுகளை உங்களுக்கு தரவேண்டும் என்று பிராத்தனை செய்கிறேன்.

நிறைய நண்பர்கள் வேலை செய்பவர்களாக இருக்கின்றனர். வேலை செய்வது நல்லது என்றாலும் ஒரு சில காலகட்டத்திற்க்கு மேல் அதாவது ஒரு தீயகிரகத்தின் காலத்தில் வேலை போய்விடுவதற்க்கு வாய்ப்பு அதிகம்.

இன்றைய தனியார் கம்பெனிகளின் எண்ணம் புதிய நபர்களை தேர்ந்தெடுத்துக்கொண்டு பழையவர்களை வேலையை விட்டு நீக்கிவிடலாம் என்ற எண்ணத்தில் தான் அனைத்து கம்பெனிகளும் செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றன. புதியவர்களுக்கு சம்பளம் குறைவாக கொடுக்கலாம் என்பதால் இதனை செயல்படுத்திக்கொண்டு இருக்கின்றனர்.

நம்முடைய நண்பர்கள் அனைவரும் ஒரு தொழில் செய்து தொழில்அதிபர்களாக வேண்டும் என்பதில்லை. முடிந்தளவு திறமையாக இருந்து ஏதோ ஒரு வழியில் உங்களின் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ளுங்கள்.

உங்களின் வாழ்க்கையை செம்படுத்திக்கொள்ள என்ன என்ன வழிகள் இருக்கின்றனவே அதனை எல்லாம் மேம்படுத்திக்கொள்ளுங்கள் என்று சூசகமாக சொல்லுகிறேன். அம்மன் அருளால் நன்றாக வாழ்வீர்கள். இனி தொடர்ந்து நல்ல பதிவுகளை பார்க்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: