வணக்கம்!
ஒருவருக்கு மறைவுஸ்தானத்தின் அதிபதி தசா நடந்தால் அவர்க்கு ஆயுள் கண்டம் ஏற்படும். ஆறாவது வீட்டு அதிபதி தசா நடந்தால் நீங்கள் வாழும் வாழ்க்கை முறையில் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்.
உங்களிடம் பணம் இருந்தாலும் கடன் வாங்கிக்கொண்டு தான் அனைத்திலும் செயல்படவேண்டும். ஒரு பொருளை வாங்கினால் கூட கடன் வாங்கி அதனை வாங்கி வாங்க வேண்டும். கடன் ஆறாவது வீட்டு தசா முடியும் வரை ஏதாவது ஒரு ரூபத்தில் இருக்கவேண்டும்.
உங்களிடம் பணம் இருந்தால் கூட அதனை வெளியில் காட்டகூடாது. நான் பணக்காரன் என்று வெளியில் சொன்னால் அதுவே உங்களுக்கு ஆபத்தாகவும் முடியும். பணம் இருந்தால் கூட பணமே சம்பாதிக்க முடியவில்லை என்று நீங்கள் பிறர்களிடம் சொல்லிக்கொண்டு இருக்கவேண்டும்.
உங்களிடம் எல்லாமே இருந்தாலும் எளிமையாக இருந்தால் அது உங்களை பெரியவில் பாதிப்பதில்லை இது எல்லோருக்கும் பொருந்தும். பணமே இருந்தாலும் மறைவு ஸ்தானம் தசா நடைபெறும்பொழுது எளிமையாக காட்டிக்கொண்டால் போதுமானது அந்த தசா உங்களை பெரியவில் பாதிப்பதில்லை.
உங்களிடம் சொகுசு கார் வைத்திருக்கின்றீர்கள் என்று வைத்துக்கொள்வோம். ஆறாவதுவீட்டு தசா நடக்கும்பொழுது நீங்கள் அந்த காரை அடிக்கடி பயன்படுத்தாமல் ஒரு அரசு பேருந்தில் ஏறி செல்லவேண்டும். பெரியளவில் உங்களை தசா பாதிக்காது.
அணியும் ஆடைகளிலும் பகட்டு காட்டகூடாது. சாதாரணமான ஒரு ஆடைகளை அணிந்துக்கொண்டு செல்லவேண்டும். இது மிக மிக முக்கியமான ஒன்று. இப்படி நீங்கள் செய்தால் ஆறாவது வீட்டு தசாவாக இருந்தாலும் சரி எந்த மறைவு தசாவும் வேலை செய்யாது.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment