Followers

Thursday, August 3, 2017

கேள்வி & பதில்


வணக்கம்!
chinna thambi said...
அண்ணா வணக்கம் ....ஒருவன் அதிகம் பாவம் செய்தாலோ அல்லது அதிக புண்ணியம் செய்தாலோ அவரின் விதி முடியும் நேரத்தில் தான் மரணம் வரும் என்று படித்திருக்கிறேன் ...நீங்கள் சொல்வது மாறுபட்ட கருத்தாக உள்ளதே அண்ணா????

விதி முடியும்பொழுது தான் மரணம் வரும் என்பது உண்மை தான் ஆனால் அனைத்திற்க்கும் விதி என்று அதன் மேல் போட்டுக்கொண்டு இருக்கமுடியாது. பெரும்பாலானாவை விதியை சார்ந்து இல்லை அவன் அவன் செய்யும் முட்டாள் தனத்தில் தான் வருகின்றது.

ஒரு குண்டு போட்டு பத்து லட்சம் பேர் சாவுகின்றனர் அப்பொழுது அது யார் விதி என்று சொல்லமுடியும் எவனோ செய்த முட்டாள் தனத்தால் வருவது அது. அறிவை நிறைய பயன்படுத்தினால் நிறைய விசயத்தை தவிர்த்துவிடலாம்.

புண்ணியம் செய்யுங்கள் என்று நாமும் சொல்லிருக்கிறோம் ஆனால் அதற்கு தகுந்தார் போல் நம்மை தக்கவைத்துக்கொள்ளவேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் நம்முடைய விதியை மீறி சென்றுவிடும்.

இல்லறத்தில் இருப்பவர்கள் புண்ணியம் செய்தால் அவரின் இல்லறகடமையால் பெரும்பாலும் விரைவில் மரணம் வருவதில்லை. அதே நேரத்தில் திருமணம் நடைபெறாமல் இருப்பவர்கள் புண்ணியத்தை மட்டுமே செய்துக்கொண்டு சென்றால் அது மரணத்தை கொடுத்துவிடும் என்பதால் பார்த்து செய்யுங்கள் என்று சொல்லுவது உண்டு.

ஆடி மாதம் அம்மன் பூஜைக்கு என்று அனைவரையும் காணிக்கை சொல்லிருந்தேன். அனைவரும் அனுப்புங்கள் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: