வணக்கம் !
ஒரு இடத்தில் இருந்து பணவரவு வந்துக்கொண்டே இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம். நாம் அந்த பணத்தை சேமித்து வைத்துக்கொண்டே இருப்போம். ஏதாவது ஒரு வழியில் ஒரளவு செலவு செய்ய வேண்டும். அனைத்திலும் லாபம் மட்டுமே குறிக்கோளாக இருந்தால் பெரிய அளவில் நமக்கு ஒரு நாள் பிரச்சினை வந்துவிடும்.
ஒரு வழியில் சம்பாதித்தால் ஒரு வழியில் அழிவுக்கு என்று கொடுக்கவேண்டும். ஆன்மீகத்திற்க்கு என்று பெரிய பணக்காரர்கள் எல்லாம் செய்யும் செலவு எல்லாம் இதனை கருத்தில் கொண்டு தான் செய்வார்கள். ஒரு பக்கம் பணம் செல்லவேண்டும் என்று செய்வார்கள்.
பெரிய கம்பெனிகள் எல்லாம் லாபத்திற்க்கு ஒரு தொழில் செய்வார்கள். நஷ்டத்திற்க்கு வேறு ஒரு தொழில் செய்வார்கள். அதாவது வருகின்ற லாபம் பாதிக்கப்படகூடாது என்பதை கருத்தில் கொண்டு நஷ்டத்திற்க்கு என்று ஒரு தொழிலை நடத்திக்கொண்டு இருப்பார்கள்.
ஜாதகத்தில் மறைவு இடங்களுக்கு என்று நாம் தீனி போடவேண்டும். நமக்கு வருகின்ற தீமைகள் வராமல் இருப்பதற்க்கு இந்த மாதிரியான விசயங்களை செய்தாலே அதிகப்பட்சம் தீமைகள் வராமல் இருக்கும்.
அனைத்திலும் நாம் லாபத்தை தான் பார்ப்பேன் ஒரு பைசா நான் செலவு செய்யமாட்டேன் என்று நினைத்தால் உங்களுக்கு மறைவு ஸ்தானத்தில் இருந்து வரும் அடி பெரியளவில் இருக்கும் என்பதை மட்டும் தெரிந்துக்கொள்ளுங்கள்.
விரைவில் சென்னையில் என்னை சந்திக்கலாம். சென்னையில் சந்திக்க விருப்பம் இருக்கும் நபர்கள் என்னை தொடர்புக்கொள்ளவும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment