Followers

Tuesday, September 4, 2018

கிரகங்களின் பலம்


வணக்கம்!
          ஒரு கிரகத்தின் ஆசியில் நாம் காலத்தை ஓட்டிவிடலாம் என்று பழைய பதிவுகளில் நான் சொல்லிருக்கிறேன். ஒரு கிரகத்தின் ஆசியில் நாம் ஓட்டினாலும் அனைத்து கிரகத்தின் பலனும் நமக்கு நல்ல பலனை கொடுக்கும்பொழுது தான் அந்த வாழ்க்கை ஒரு நல்ல வாழ்க்கையாக அமையும்.

ஒரு மனிதர்க்கு அனைத்து கிரகங்களும் நன்றாக அமையாது என்று சொல்லலாம். அதே நேரத்தில் பாதி கிரகங்களாவது நன்றாக அமைந்தால் அதுவே ஒரு சூப்பரான வாழ்க்கையாக நாம் வாழ்ந்துவிடலாம்.

பெரும்பான்மையான நபர்களுக்கு அனைத்து கிரகங்களும் அடி வாங்கி தான் இருக்கின்றது அதனால் தான் நாம் அந்த பாடுபடுகிறோம். அதே நேரத்தில் ஒரு சில ஜாதகர்களுக்கு ஒரு கிரகம் நன்றாக இருந்து ஒரு கிரகம் அடி வாங்கும்பொழுது அது அதிக பிரச்சினையை கொடுக்கும்.

உதாரணத்திற்க்கு சனிக்கிரகம் நன்றாக இருந்து செவ்வாய் கிரகம் பலம் இழந்துவிட்டால் அந்த ஜாதகருக்கு நிறைய உடல்நிலையில் பிரச்சினை வரும். அவ்வப்பொழுது உடல்நிலையில் பிரச்சினை கொடுத்துக்கொண்டே இருக்கும்.

செவ்வாய் கிரகம் நன்றாக இருந்து சனிக்கிரகம் பலம் இழந்தாலும் அவர்களுக்கும் சிக்கல் வரும்.  தொழிலில் நிறைய சறுக்கல்களை அவர்கள் சந்திக்கொண்டே இருப்பார்கள். இதனை எல்லாம் அறிந்து அதற்கு தகுந்தார் போல் நமது வாழ்க்கை அமைத்துக்கொண்டு சென்றால் ஒரளவு நன்றாக இருக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: