வணக்கம்!
நவஅம்மன் (சண்டி) யாகத்திற்க்கு தங்களின் பெயர் மற்றும் நட்சத்திரத்தை அனுப்ப சொல்லிருந்தேன் ஒவ்வொருவரும் அனுப்பிக்கொண்டு இருக்கின்றனர். பலர் தயக்கம் காட்டுவதும் தெரிகிறது எந்தவித கூச்சமும் தேவையில்லை. எனது மெயிலில் கூட தெரிவிக்கலாம் அல்லது எனது வாட்ஸ்அப் எண்ணில் கூட தங்களைப்பற்றிய விபரத்தை அனுப்பி வைக்கலாம்.
இலவசமாக அனுப்புகிறோம் இதனை எப்படி எடுத்துக்கொள்வார் என்பதில்லை. இது இலவசமாக தான் நடத்தப்படுகின்றது. விருப்படுபவர்கள் மட்டும் காணிக்கை செலுத்தலாம் என்று சொல்லிருந்தேன்.
இலவசமாக அனுப்புவர்கள் ஒரு தர்ம காரியத்தை செய்துவிடுங்கள் என்று சொல்லிருந்தேன். ஐந்து ரூபாய் கூட தர்மமாக செய்துவிட்டாலே போதுமான ஒன்று தான். நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் தர்மம் செய்யலாம் ஆனால் செய்யாமல் இருக்ககூடாது.
ஒரு ஆன்மீக காரியத்தின் வெற்றி என்பது நம்முடைய கர்மக்கணக்கு எந்தளவுக்கு புண்ணியகாரியங்களில் ஈடுபட்டு இருக்கின்றது. நம்முடைய புண்ணியம் நன்றாக இருக்கின்றதா என்பதை சார்ந்த விசயமாகவே இருக்கும்.
பெரும்பாலும் நான் பிறர்களிடம் பணம் வாங்கினாலும் அதனை நிறைய புண்ணியகாரியங்களுக்கு செலவிட்டு தான் பூஜையை செய்துக்கொடுத்துக்கொண்டு இருக்கிறேன். இலவசமாக நீங்கள் அனுப்பினாலும் ஒரு தர்மத்தை செய்துவிடுவது நல்லது. உடனே தங்களைப்பற்றிய விபரத்தை தெரிவியுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment