வணக்கம்!
தானத்தில் சிறந்தது அன்னதானம் என்று சொல்லுவார்கள். இந்த அன்னதானம் செய்வதில் இன்றைய காலத்தில் நிறையே பேர் போட்டி போட்டுக்கொண்டு அன்னதானம் கோவில்களில் மற்றும் பொது இடங்களில் செய்கின்றனர்.
நான் பழைய பதிவில் உங்களிடம் சொல்லுயிருக்கிறேன். அன்னதானம் செய்தால் கோவிலில் மட்டும் சாப்பிடுங்கள். வெளியில் பாேடும் அன்னதானம் அடுத்தவர்களின் கர்மாவை நீங்கள் சுமக்கவேண்டும் என்பது போல வரும் அதனை சாப்பிடவேண்டாம் என்று சொல்லிருக்கிறேன்.
பெரும்பாலான ஆன்மீகவாதிகள் வெளியிடங்களில் சாப்பிடுவது கிடையாது. இழிச்சவாயான மக்களுக்கு மட்டும் இதனை எல்லாம் போதிப்பார்கள். அன்னதானம் செய்வதும் நல்லது சாப்பிடுவதும் நல்லது என்று சொல்லிவிடுவார்கள்.
பெரும்பாலான ஆன்மீகவாதிகள் அடுத்தவர் வீட்டில் தண்ணீர் கூட வாங்கி அருந்துவது கிடையாது. அவர்களின் பாவத்தை தேவையில்லாம் நாம் சுமக்ககூடாது என்ற குடிக்க மாட்டார்கள். அவர்களும் உங்களை போல பந்தியில் அமர்ந்து சாப்பிட்டால் நீங்களும் சாப்பிடலாம்.
உங்களுக்க சாப்பாடே கிடைக்காமல் இருக்கும் இடத்திற்க்கு சென்றால் மட்டும் அன்னதானம் போட்டால் சாப்பிடுங்கள் அப்படி இல்லை என்றால் சாப்பிடவேண்டாம். சாப்பாட்டை சுத்தி செய்து சாப்பிடுவது எப்படி என்பதை கற்றுக்கொண்டு அப்படி சாப்பிட்டால் உணவால் வரக்கூடிய தோஷம் உங்களுக்கு வராது.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment