Followers

Sunday, September 2, 2018

பிறந்தநாள்


வணக்கம்!
         பிறந்தநாள் கொண்டாடும் நண்பர்கள் அனைவரும் தங்களின் பிறந்தநாள் முன்பே என்னிடம் தெரிவித்துவிட்டால் தினமும் நடைபெறும் பூஜையில் தங்களுக்காவும் பிராத்தனை செய்யலாம். இது இலவசமாகவே செய்யலாம். 

பெரும்பாலும் ஆங்கில தேதியை பிறந்தநாளாக கொண்டாடி வருகின்றீர்கள். இதனை தவறு என்று சொல்லுவதை விட அதனை கொண்டாடுங்கள் அதே நேரத்தில் தமிழ்மாதத்தில் வரும் உங்களின் நட்சத்திரத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு அந்த நாளை வழிபாட்டு விஷேசங்களுக்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

பிறந்தநாள் என்பது ஒரு கெட்டநாளாகவே தான் நான் பார்ப்பேன். ஏன் என்றால் ஒருவர் பிறந்த நாளில் தான் அவர்களுக்கு மரணம் நடைபெறும். பிறந்தநாள் தவறினால் கூட அந்த மாதத்தில் வரும் நட்சத்திரத்தில் அல்லது அந்த தமிழ்மாதத்தில் கண்டிப்பாக இறப்பு வரும் காலத்தில் இறப்பு நடைபெறும்.

உங்களை சுற்றி இருப்பவர்களை எடுத்துக்கொண்டு அதனை எல்லாம் நீங்கள் கவனித்தால் இந்த உண்மை உங்களுக்கு எளிதாக புரியும். இந்த காலத்தில் கொஞ்சம் எச்சரிக்கையோடு இருக்க உங்களுக்கு தோன்றும். உங்களை பயமுறுத்த இதனை சொல்லவில்லை ஒரு எதார்த்த உண்மையை சொல்லுகிறேன்.

இனிமேல் பிறந்தநாள் கொண்டாடும் நண்பர்கள் ஒரு நாளுக்கு முன்பே எனக்கு தெரிவித்துவிட்டால் உங்களுக்கு என்று சிறப்பு வழிபாட்டை எனது தினந்தோறும் பூஜையில் செய்யலாம். இது இலவசமான ஒரு சேவை தான் அனைவரும் முன்பே என்னிடம் தெரிவித்துவிடுங்கள். உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களாக இருந்தாலும் எனக்கு தெரிவிக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: